உள்ளடக்கத்துக்குச் செல்

வசந்தம் பண்பலை வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்தம் எஃப்.எம்
Vasantham FM
உரிமமுள்ள நகரம்கொழும்பு, இலங்கை
ஒலிபரப்புப் பகுதிஇலங்கை இலங்கை
குறிக்கோளுரை"தமிழின் சுவாசம்"
அதிர்வெண்இலங்கை முழுவதும் 102.6 / 102.8 MHz
முதல் ஒலிபரப்பு21 ஏப்ரல் 2008
வானொலி முறைபண்பலை, இணையவழி
மொழிதமிழ்
உரிமையாளர்சுயாதீன ஊடக வலையமைப்பு
இணை நிலையங்கள்ஐரிஎன் எஃப்.எம்
ஐரிஎன் நியூஸ்
இணையதளம்vasanthamfm.lk

வசந்தம் எஃப்.எம் (Vasantham FM) இலங்கையில் பண்பலையில் இயங்கும் தமிழ் வானொலி நிலையம் ஆகும். "தமிழின் சுவாசம்" எனும் மகுட வாசகத்தோடு 2008 ஏப்பிரல் மாதம் 21 ஆம் நாளில் இருந்து இலங்கை அரசின் கீழ் இயங்கும் சுயாதீன ஊடக வலையமைப்பின் (ITN) ஊடாக ஒலிபரப்பாகி வருகிறது.[1]

வரலாறு[தொகு]

வசந்தம் வானொலி ஆரம்பத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாக 97.6 பண்பலைவரிசையில் தனது சேவையை ஆரம்பித்தது. பின்னர் 97.3 எனும் பண்பலைவரிசை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் ஒலிபரப்பாகி, இலங்கை முழுவதற்குமான சேவையை நடத்தியது. பின்னர் 2011 இல் 102.6, 102.8 ஆகிய பண்பலை வரிசைகளில் இலங்கை எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. இதனை விட இணையத்தின் ஊடாகவும் ஒலிபரப்பாகி வருகிறது.

வானொலி இசை நாடகம்[தொகு]

வசந்தம் வானொலி 2016 இல் புதிய இசை நாடக தொடரினை ஆரம்பித்தது. முதலில் 2016 இல் 'இராவண காவியம்' எனும் நாடகத்தை ஒலிபரப்பினார்கள். இந்த நாடகத்தில் கதாபாத்திரங்கள் பேசுவதை விட இசை அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. வசந்தம் வானொலியில் ஒலிபரப்பாகிய அனைத்து வானொலி இசை நாடகங்களையும் பரமசிவம் டார்வின் தயாரித்து நெறியாள்கை செய்திருந்தார்.

வசந்தம் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட இசை நாடகங்கள்
ஆண்டு நாடகத்தின் பெயர் குறிப்பு
2016 இராவண காவியம் இராவணனுக்கு பிறந்த மகள் சீதை எனும் கருப்பொருளில் உருவாக்கப்பட்ட நாடகம்
2018 உடைந்த நிலா வரலாறுகளில் தோல்வி அடைந்த காதல் காவியங்கள் - பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய நூலின் தழுவல்
2019 துரியோதன சரித்திரம் துரியோதனனின் கதை
2020 நள தமயந்தி எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு புதினத்தின் தழுவல்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தம்_பண்பலை_வானொலி&oldid=2994952" இலிருந்து மீள்விக்கப்பட்டது