வங்காள மொழி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
21 பெப்ரவரி 1952 அன்று தாக்காவில் நிகழ்ந்த ஊர்வலம்

வங்காள மொழி இயக்கம், அல்லது மொழி இயக்கம் (வங்காள மொழி: ভাষা আন্দোলন; Bhasha Andolon) என்பது, வங்காள நாட்டில் (அன்றைய கிழக்குப் பாக்கிசுத்தானில்) நிகழ்ந்த ஒரு அரசியல் முயற்சி. இம்முயற்சி, வங்காள மொழியை பாக்கிசுத்தானின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஏற்கக் கோரியது. இதன் மூலம், பள்ளிகளில் வங்காள மொழியைக் கற்பிக்கலாம். அரசு அலுவல்களில் பயன்படுத்தலாம்.

1947 இந்திய பிரிவினையை அடுத்து, பாக்கிசுத்தான் உருவான போது, அதன் இரண்டு பகுதிகளான கிழக்குப் பாக்கிசுத்தானுக்கும் (கிழக்கு வங்காளம்) மேற்குப் பாக்கிசுத்தானுக்கும் இடையே பண்பாட்டு, புவியியல், மொழியியல் அடிப்படைகளில் பெரிய வேறுபாடுகள் இருந்தன.

1948ல் பாக்கிசுத்தான் அரசு உருது மொழியை பாக்கிசுத்தானின் ஒரே நாட்டு மொழியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வங்காள மொழி பேசும் கிழக்குப் பாக்கிசுத்தானைக் கொந்தளிக்கச் செய்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_மொழி_இயக்கம்&oldid=2829769" இலிருந்து மீள்விக்கப்பட்டது