வங்காள கறுப்பு ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காள கறுப்பு ஆடு

வங்காள கறுப்பு ஆடு (Black Bengal goat) என்பது மேற்கு வங்காளம், பீகார் ஒரிசா என இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் முழுவதும் காணப்படும் ஆடு ஒரு ஆட்டு இனம் ஆகும். [1] இவ்வினம் பொதுவாக கருப்பு நிறம் கொண்டது என்றாலும் இது, பழுப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களிலும் காணப்படுகிறது. கறுப்பு வங்க ஆட்டின் அளவு சிறியது ஆனால் அதன் உடல் அமைப்பு கெட்டியானதாக இருக்கும். இதன் கொம்புகள் சிறியனவாகவும், கால்கள் குறுகியதாகவும் இருக்கும். ஒரு வயது ஆண் ஆட்டின் எடை சுமார் 25 30 கிலோவாகவும், பெண் 20 25 கிலோ வரை எடையுள்ளதாகவும் இருக்கும். இதில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். ஏனெனில் இவை குறைந்த அளவு உணவு உண்பதும் மிக அதிக குட்டிகளை ஈனுவதுமே காரணமாகும். இதனால் இவை வங்காளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. [2] வங்க கறுப்பு ஆடுகள் மிக விரைவாக பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. ஆண்டுக்கு இரண்டு முறை சினையாகி 3-4 குட்டிகள் ஈனும். [3] இவ்வினம் எளிதாக எந்த சூழலுக்கு ஏற்ப வாழக்கூடியன மற்றும் நோய் தடுப்பு திறன் மிக அதிகமாக உள்ளவை. இதிலிருந்து உயர் தரமான இறைச்சி மற்றும் தோல் கிடைக்கிறது.. இவ்வினம் வங்காளத்தில் நிலவும் வேலையின்மை மற்றும் வறுமையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. [4][5] இவை, காய்கறிகள், புற்கள், இலைகள் ஆகியவற்றை மிகவும் சாப்பிடும் எனினும், கேரட் மிகுதியாக உண்பது இவற்றிற்கு ஆபத்தானது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_கறுப்பு_ஆடு&oldid=2168297" இருந்து மீள்விக்கப்பட்டது