வங்காளதேச நிலச்சரிவுகள், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வங்கதேச நாட்டின் ரங்கமதி, சிட்டகொங் மற்றும் பந்தர்பன் மாவட்டப் பகுதிகளில் 12 ஜூன் 2017 அன்று பெய்த கனமழைக்குப் பின்னர் நிகழ்ந்த நிலச்சரிவின் காரணமாக பொதுமக்கள் 156 பேர் மரணமடைந்தனர்.[1] இப்பகுதிகள் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளாகும். மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் நால்வரும் மரணமடைந்தனர்.[2][3][4]

காரணம்[தொகு]

பருவமழைக் காலம் என்பதால், 12 ஜூன் 2017 அன்று அதிகாலை கனமழை பொழியத்தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த நிலச்சரிவே இவ்விடர்பாடுகளுக்கு முக்கியக் காரணமாகும்.

பாதிப்பு[தொகு]

நிலச்சரிவின் காரணமாக வங்காளதேசம் மற்றும் இந்தியப் பகுதிகளில் 156 பேர் மரணமடைந்தனர். மேலும் 100- க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.[5] பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். ரங்கமதி பகுதியில் மட்டும் 5000 வீடுகள் சேதமடைந்துள்ளன, 103 பேர் மரணமடைந்துள்ளனர். சிட்டகொங் 36 பேரும் பந்தர்பன் பகுதியில் 10 பேரும் மரணமடைந்துள்ளனர். இந்தியாவின் மிசோரம் மற்றும் அசாம் பகுதிகளில் 11 பேர் கனமழை மற்றும் இடியின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]