வங்காளதேச ஆயுதப்படைகள் நோயியல் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேச ஆயுதப்படைகள் நோயியல் நிறுவனம் (Armed Forces Institute of Pathology) வங்காளதேசத்தின் டாக்கா ஆயுதப்படை இராணுவ முகாமில் அமைந்துள்ளது. ஒரு மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.

வரலாறு[தொகு]

ஆயுதப் படைகளின் நோயியல் நிறுவனம் முதலில் இராணுவ நோயியல் நிறுவனம் என்ற பெயரில் பாக்கித்தான் இராணுவத்தின் ஒரு பகுதியாக சிறு ஆய்வகமாக நிறுவப்பட்டது. [1] வங்காளதேசம் சுதந்திரம் அட்டைந்த பிறகு இது வங்காளதேச இராணுவத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1974 ஆம் ஆண்டு ஆயுதப் படைகளின் நோயியல் நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டு இங்கு நவீன உபகரணங்கள் மீண்டும் பொருத்தப்பட்டன. [2][3][4] மருத்துவ அறிவியலில் இதன் பன்னாட்டு அளவு பங்களிப்புக்காக 1987 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்திற்கு சுதந்திர தின விருது வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் இராணுவ நோயியல் ஆய்வகம் என்ற பெயர் மாற்றப்பட்டு ஆயுதப்படை நோயியல் நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது. [5]

மருத்துவ அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுடன் நிறுவனம் எப்போதும் முன்னேற முயல்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வல்லுநர்களின் ஒருங்கிணைப்பு இந்த நிறுவனத்தை நாட்டின் ஆய்வக மருத்துவத்தில் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "An amazing health persona" (in en). The Daily Star. 2008-06-25. http://www.thedailystar.net/news-detail-42654. 
  2. "An extraordinary man" (in en). The Daily Star. 2009-06-24. http://www.thedailystar.net/news-detail-93995. 
  3. "Myanmar Army team arrives in Dhaka" (in en). The Daily Star. 2014-10-16. http://www.thedailystar.net/myanmar-army-team-arrives-in-dhaka-45934. 
  4. "University of Professionals inaugurated" (in en). The Daily Star. 2008-10-17. http://www.thedailystar.net/news-detail-59119. 
  5. "List of Army Medical College - Bangladesh Army". www.army.mil.bd. பார்க்கப்பட்ட நாள் 2019-07-24.