உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசப் பிரதம அமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • மேலிருந்து இடமாக: தாஜிதீன் அகமது தற்காலிகப் பிரதமர், 10 ஏப்ரல் 1971
  • மேலிருந்து வலமாக: சேக் முஜிபுர் ரகுமான், 7 மார்ச் 1973 அன்று நடைபெற்ற வங்கதேச தேர்தலில் வென்ற முதல் பிரதமர்,
  • நடு வலது: காலிதா சியா, முதல் பெண் பிரதமர், 27 பிப்ரவரி1991 - 15 பிப்ரவரி 1996 மற்றும் 1 அக்டோபர் 2001
  • நடு வலது: சேக் அசீனா, அதிக காலம் பிரதமராக இருந்த பெண். 12 சூன் 1996, 29 டிசம்பர் 2008, 5 சனவரி 2014, 30 டிசம்பர் 2018, 7 சனவரி 2024.
  • அடியில்: தாரிக் ரஹ்மான், நடப்பு பிரதம அமைச்சர், 17 பிப்ரவரி 2026 முதல்

பாக்கித்தான் நாட்டின் கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவின் உதவியால் 1971ல் வங்காளதேசம் என்ற தனி சுதந்திர நாடாக நிறுவப்பட்டது. அந்நாட்டிற்கு தற்காலிக பிரதமராக தாஜிதீன் அகமது பதவி வகித்தார். முதலாவது வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் 1973ல் நடைபெற்றது. தேர்தலில் சேக் முஜிபுர் ரகுமான் தலைமையிலான அவாமி லீக் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பிரதமரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.

பிரதம அமைச்சர்கள்

[தொகு]

தாரிக் ரகுமான் உள்பட இது வரை வங்காளதேச அரசில் 11 பிரதம அமைச்சர்களும், 5 தலைமை ஆலோசகர்களும், 1 இடைக்கால தலைமை ஆலோசகரும் பதவி வகித்துள்ளனர். [1]

  1. தாஜிதீன் அகமது (தற்காலிகம்) - 17 ஏப்ரல் 1971 - 12 சனவரி 1972
  2. சேக் முஜிபுர் ரகுமான் - 12 சனவரி 1972 - 25 சனவரி 1975
  3. முகம்மது மன்சூர் அலி - 25 சனவரி 1975 - 15 ஆகஸ்டு 1975
  4. ஷா அசீசுர் ரகுமான் - 15 ஏப்ரல் 1979 - 24 மார்ச் 1982
  5. அதௌர் ரகுமான் கான் - 25 மார்ச் 1982 - 1 சனவரி 1985 (பணியிடம் காலி - எர்சாத் இராணுவ சர்வாதிகாரி, 1 சனவரி 1985 – 9 சூலை 1986)
  6. மிசானூர் ரகுமான் சௌத்திரி 9 சூலை 1986 - 27 மார்ச் 1988
  7. மௌதூத் அகமது - 27 மார்ச் 1988 - 12 ஆகஸ்டு 1989
  8. காஜி ஜாபர் அகமது - 12 ஆகஸ்டு 1989 - 6 டிசம்பர் 1990 (பணியிடம் காலி 6 டிசம்பர் 1990 – 20 மார்ச் 1991)
  9. காலிதா சியா - 20 மார்ச் 1991 - 30 மார்ச் 1996
  10. தலைமை ஆலோசகர், இடைக்கால அரசு - 30 மார்ச் 1996 - 23 சூன் 1996
  11. சேக் அசீனா - 23 சூன் 1996 - 15 சூலை 2001
  12. தலைமை ஆலோசகர், இடைக்கால அரசு — 15 சூலை 2001 - 10 அக்டோபர் 2001
  13. காலிதா சியா - 10 அக்டோபர் 2001 - 29 அக்டோபர் 2006
  14. தலைமை ஆலோசகர்கள், இடைக்கால அரசு - 29 அக்டோபர் 2006 - 6 சனவரி 2009
  15. சேக் அசீனா - 6 சனவரி 2009 - 5 ஆகஸ்டு 2024
  16. முகம்மது யூனுஸ், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் - 8 ஆகஸ்டு 2024 - 17 பிப்ரவரி 2026
  17. தாரிக் ரஹ்மான் - 17 பிப்ரவரி 2026 - பதவியில

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]