உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசத்தில் மாற்றுத்திறனாளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் (Disability in Bangladesh) சுமார் 16 மில்லியன் மக்கள் உள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 10% ஆகும்.[1][2] 2004 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 6% பேருக்கும், அந்த வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 14% பேருக்கும் மாற்றுத்திறன் பாதிப்பு இருந்தது.[2] வங்கதேசத்தில் மாற்றுத்திறனாளிகளாக வாழும் மக்களுக்கு அரசாங்க ஆதரவைப் பெறுவதற்கு உரிமை உண்டு, ஆனால் திட்டங்கள் குறைந்த அளவிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளன மற்றும் நகர்ப்புறங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறன் என்ற அம்சம் பொதுவான வளர்ச்சித் திட்டங்களில் ஒருங்கிணைக்கப்படவில்லை.[1] இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மேம்பாட்டிற்கான மாற்றுத்திறனாளி மையம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்க முன்வந்துள்ளன.

பெரும்பாலான வங்காளதேச மக்களிடையே மாற்றுத்திறன் குறித்த கருத்துக்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே உள்ளன.[1] குறிப்பாக கிராமப்புறங்களில், மாற்றுத்திறன் என்பது பெற்றோரின் தவறான செயல்களால் ஏற்பட்ட ஒரு சாபமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் அது தொற்றக்கூடியது என்றும் நம்பப்படுகிறது.[3] மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் மாற்றுத்திறன் இல்லாத குழந்தைகளும் அரிதாகவே நண்பர்களாகிறார்கள். இது வயது வந்த வாழ்விலும் தொடரும் ஒரு பிரிவினையை உருவாக்குகிறது.[3]

ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் வங்கதேசம் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. 2007 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதியன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இதை அங்கீகரித்தது.[4] 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியன்று வங்கதேசம் 'மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2013' என்ற மசோதாவை நிறைவேற்றியது. இது ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் அமைப்பின் கீழ் கடமைகளைச் செயல்படுத்தியது.[5] இந்தச் சட்டம் 2001 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டத்திற்குப் பதிலாக நடைமுறைக்கு வந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Disability in Bangladesh". Centre for Disability in Development. Retrieved 20 April 2016.
  2. 2.0 2.1 "Disability in Bangladesh: A Situation Analysis" (PDF). World Bank. Retrieved 20 April 2016.
  3. 3.0 3.1 "Perceptions of Disability in Bangladesh". CRP-Bangladesh: Centre for the Rehabilitation of the Paralyzed. Retrieved 20 April 2016.
  4. "UN Treaty Collection: parties to the Convention on the Rights of Persons with Disabilities: List of parties". United Nations. 2012-03-21. Archived from the original on 2012-08-19. Retrieved 2015-11-20.
  5. 5.0 5.1 "Persons with Disabilities Rights and Protection Act in Bangladesh: User-Friendly Booklet" (PDF). Asia-Pacific Development Center fon Disability. Women with Disabilities Development Foundation. Retrieved 20 April 2016.