வங்காளதேசத்தில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேசத்தில் சுற்றுலா (Tourism in Bangladesh) என்பது வரலாற்று நினைவுச்சின்னங்கள், தங்கும் விடுதிகள், கடற்கரைகள், சுற்றுலா இடங்கள், காடுகள் மற்றும் பழங்குடி மக்கள், பல்வேறு உயிரினங்களின் வனவிலங்குகள் ஆகியவை அடங்கும். சுற்றுலாப் பயணிகளுக்கான செயல்பாடுகளில் படகு விளையாட்டுகள், மீன்பிடித்தல், தண்ணீரில் சறுக்குதல், ஆற்றுப் பயணம், நாடு முழுவதும் மேற்கொள்ளும் பயணம், படகுப் பயணம், கடல் குளியல் ஆகியவை அடங்கும். [1]

ராஜசாகி பிரிவை உள்ளடக்கிய வடக்கு பகுதியில், கோயில் நகரமான புத்தியா உள்ளிட்ட தொல்பொருள் இடங்கள் உள்ளன. போக்ராவிலுள்ள உள்ள மகஸ்தாங்கர்; நாகோகானில் உள்ள பகார்பூர் சோமபுரம் மகாவிகாரை, மிகவும் அலங்காரமான சுடுமண்ணால் செய்யப்பட்ட இந்துக் கோயில், காந்தாஜி கோயில் மற்றும் பல ராஜ்பாரிகள் அல்லது பழைய ஜமீந்தார்களின் அரண்மனைகள் போன்ற மிகப் பெரிய மற்றும் மிகப் பழமையான தொல்பொருள் தளங்கள் இருக்கின்றன.

சிட்டகாங் பிரிவான தென்கிழக்கு பகுதியில், மணல் கடல் கடற்கரைகளுடன் சிட்டகாங் மலைப்பகுதிகள் போன்ற இயற்கை மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் உள்ளன. காக்ஸ் பஜாரில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க கடற்கரை, உலகின் மிக நீளமான உடைக்கப்படாத மணல் கடல் கடற்கரையாகும்.

காக்ஸ் பஜார் உலகின் மிக நீளமான உடைபடாத இயற்கைக் கடற்கரை ஆகும்.

தென்மேற்கு பகுதியில், முக்கியமாக குல்னா பிரிவில், சுந்தரவனகாடுகள் உள்ளது இது உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடான இதில், வங்காளப் புலிகளும், புள்ளிமான்களும் வாழ்கின்றன. பாகர்ஹாட்டில் உள்ள வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த அறுபது தூண்கள் பள்ளிவாசல் ஒரு குறிப்பிடத்தக்க தளமாகும். வடகிழக்கு பகுதியான சில்ஹெட் பிரிவில், சிறிய மலைகளில் தேயிலை செடிகளின் பச்சை கம்பளம் உள்ளது. இயற்கை அமையப்பட்ட காடுகள் சுற்றுலாவிற்கு சிறந்த இடங்களாகும். குளிர்காலத்தில் புலம் பெயர்ந்த பறவைகள், குறிப்பாக ஹோர் பகுதிகளில், இந்த பகுதியில் மிகவும் இரசிக்கத்தகதாகும்.

சுற்றுலா அமைச்சகம் மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்து அமைச்சகம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் பிரபலபடுத்துவதற்கும் தேசிய கொள்கைகளை வடிவமைக்கின்றன. அழகான வங்காளதேசம் என்ற பிரச்சாரத்தையும் அமைச்சகம் பராமரிக்கிறது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சிறப்பாகப் பாதுகாப்பதற்காக சுற்றுலா காவலர் பிரிவை வங்கதேச அரசு உருவாக்கியுள்ளது.

பொருளாதாரத் தாக்கம்[தொகு]

உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா அமைப்பின் தரவுகளின்படி 2013 ல் வங்காளதேசத்தில் பயண மற்றும் சுற்றுலாத் துறை நேரடியாக 2012 ல் 1,281,500 வேலைகளை உருவாக்கியது அல்லது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 1.8 சதவீதத்தை உருவாக்கியது. இது உலகெங்கிலும் உள்ள 178 நாடுகளில் வங்காளதேசத்தை 157 இடத்தில் வைத்தது. [2]

காக்ஸ் பஜார்[தொகு]

காக்ஸ் பஜார் என்பது வங்காளதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் சிட்டகாங் பிரிவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். சிறிய கடல் பக்க நகரமான அதன் மிக நீண்ட இயற்கை கடல் கடற்கரைக்கு பிரபலமானது. காக்ஸின் பஜார் அதன் பெயரை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தளபதி ஹிராம் காக்ஸ் என்ற அதிகாரியிடமிருந்து பெற்றுள்ளது. காக்ஸ் பஜார் வங்காளதேசத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். [3] [4] மேலும் இங்குள்ள அக்மெடா கியாங் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பௌத்த மடாலயம் அமைந்துள்ளது. அழகிய உலாவல் அலைகள், புத்த கோவில்கள், சுவையான கடல் உணவுகள் கொண்ட மிக நீளமான கடல் கடற்கரையை காக்ஸ் பஜார் கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நீச்சல் மற்றும் உலாவல் போன்ற சில கடற்கரை நடவடிக்கைகளை அனுபவிக்க முடியும். புதிதாக திருமணமான தம்பதியினருக்கு இது வங்கதேசத்தில் ஒரு சிறந்த தேனிலவு இடமாக இருக்கலாம்.[5]

காக்ஸ் பஜாரில் ஒரு கடற்கரை உணவகம்
செயின்ட் மார்ட்டின் தீவில் இறந்த பவளப்பாறைகள்
மேலே இருந்து சஜெக் பள்ளத்தாக்கு
கப்தாய் ஏரி, ரங்கமதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Top 10 best value destinations for 2011". Lonely Planet. Archived from the original on 2017-01-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  2. "Travel & Tourism Economic Impact 2013: Bangladesh" (PDF). World Travel and Tourism Council. Archived from the original (PDF) on 7 October 2013.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.

ஜர்னி வாலட் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக வளர்ந்துடு, “வங்காளதேசத்தில் சிறந்த வரவிருக்கும் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணிகளுக்கான பயண ஏற்பாட்டாளராக” உருவெடுத்துள்ளது. குறுகிய காலத்திலேயே, வங்காள தேச சுற்றுலாவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bangladesh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.