வங்காளதேசத்தில் உணவுத் தொழில்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேசத்தில் உணவுத் தொழில்துறை (Food industry in Bangladesh) வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். இத்துறை அந்நாட்டில் உள்ள தொழிலாளர் சக்தியின் குறிப்பிடத்தக்க பகுதியை வேலைக்கு அமர்த்தியுள்ளது. [1]

வரலாறு[தொகு]

2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் , வங்காளதேசத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் ஆண்டுக்கு சராசரியாக 7.7 சதவிகிதம் வளர்ந்தது. வங்காளதேசப் புள்ளியியல் பணியகம், அதன் 25006 பொருளாதார கணக்கெடுப்புகளில் வங்காளதேச தொழில்துறை உற்பத்தி தொழிலாளர்களில் 19 சதவிகிதம் அல்லது மொத்த உற்பத்தி தொழிலாளர் சக்தியில் 8 சதவிகிதம் 246 நடுத்தர அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்களில் இருப்பதாக அறிவித்துள்ளது. நாட்டின் மொத்த தொழிலாளர் சக்தியில் 2.45 சதவிகிதம் உணவுத் தொழில் துறையில் வேலை செய்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 2010 ஆம் ஆண்டில் 2.01 சதவீதமாக இருந்தது. நாடு முழுவதும் ஏராளமான சிறிய தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு அலகுகள் உணவு பதப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளன. சில தொழில் ஆய்வாளர்களின் கருத்துப்படி, வங்காளதேசத்தில் உணவு பதப்படுத்தும் துறை 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை கையாள்கிறது. 2010 ஆம் ஆண்டில், வங்காளதேசம் 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களை ஏற்றுமதி செய்தது. அவற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் இறால் மற்றும் மீன் பொருட்களாகும். [2]

வங்காளதேசத்தில் உணவு பதப்படுத்துதல் பாரம்பரியமாக ஒரு சிறிய அளவு தொழிலாக இருந்தது. உள்நாட்டு அல்லது குடும்ப வணிகத்தை பொதுவான செயலாக்க அறிவைப் பயன்படுத்தி மூல வேளாண் பொருட்களை உணவு மற்றும் தீவனமாகப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்தியது. குறிப்பாக கோதுமை மற்றும் அரிசி அரைத்தல், கடுகு விதைகளை நசுக்குதல் மற்றும் மிகக் குறைந்த ரொட்டி உற்பத்தி ஆகியவற்றிற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வணிக அளவிலான உணவு பதப்படுத்துதல் 1960 ஆம் ஆண்டுகளில் தோன்றியது. இந்தத் துறையின் வளர்ச்சி 1980 ஆம் ஆண்டுகள்கள் வரை செயல்பாட்டு அளவு மற்றும் தரத்தின் அடிப்படையில் வேகத்தைப் பெறவில்லை. சமீபத்தில் தொழில்துறையின் வரையறுக்கும் பண்புகள் வங்கதேச மக்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெருகிய முறையில் மாறுபட்ட தயாரிப்புகளை செயலாக்குவதாகும். வங்கதேச முக்கிய உணவு பதப்படுத்தும் துணைத் துறைகளில் பால், சமையல் எண்ணெய், சர்க்கரை, அரிசி, கோதுமை, பழம் மற்றும் காய்கறி, தேநீர், கோழி/மாட்டிறைச்சி, பருப்பு வகைகள் மற்றும் மசாலா மற்றும் மீன் பதப்படுத்தும் தொழில்கள் ஆகியவை அடங்கும். வங்காள நடுத்தர வர்க்க மக்கள் தொகையில் ஏற்பட்ட தீவிரமான வளர்ச்சியினால் கூடுதல் நுகர்வு தேவையும் அதிகரித்தது. [3] உணவு பதப்படுத்தும் துறை வரும் ஆண்டுகளில் மேலும் மிகப்பெரிய விரிவாக்கத்தை அட்டையும் என்று எதிர்பாக்கப்படுகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thedailystar.net/dhaka-international-trade-fair-2014/food-industry-in-%20%20%20bangladesh-6622
  2. International Monetary Fund. Asia and Pacific Dept (2013). Bangladesh: Poverty Reduction Strategy Paper. International Monetary Fund. பக். 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781475543520. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-14. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  4. Express, The Financial. "The Financial Express". The Financial Express.