வங்காளதேசத்தில் இந்து மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காள தேசத்தில் இந்து சமய மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1901 9,546,240 —    
1911 9,939,825 +4.1%
1921 10,176,030 +2.4%
1931 10,466,988 +2.9%
1941 11,759,160 +12.3%
1951 9,239,603 −21.4%
1961 9,379,669 +1.5%
1974 9,673,048 +3.1%
1981 10,570,245 +9.3%
1991 11,178,866 +5.8%
2001 11,379,000 +1.8%
2011 12,492,427 +9.8%
*The Census of 1971 was delayed due to the Liberation War of Bangladesh
Source: God Willing: The Politics of Islamism in Bangladesh by Ali Riaz, p. 63


புதியா பகுதியிலுள்ள கோயில்
இந்துகள் பரவியுள்ள சதவீதம்
தாக்கேஸ்வரி கோயில்

வங்காள தேசத்தில் இந்து சமயம் இரண்டவது பெரிய சமயம் ஆகும். உலகில் அதிக இந்துகள் வசிக்கும் இடத்தில் வங்காளதேசம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு இடங்களில் இந்தியாவும் நேபாளமும் உள்ளன. வங்காளதேசத்தின் மொத்த மக்கட்தொகையில் 14% பேர் இந்துகள் ஆவார்.[1][சான்று தேவை] பிரிவினைக்கு முன் இந்தியாவோடு வங்காளதேசம் இருந்த காரணத்தினால் இங்குள்ள இந்துகளின் சமய மற்றும் பழக்க வழங்கங்கள் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநில இந்துகளின் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கும். டாக்காவில் அமைந்துள்ள தாக்கேஸ்வரி கோயில் புகழ் பெற்றது.

இந்து சமய மக்கள்தொகை பரம்பல்[தொகு]

டாக்கா பல்கலைக் கழக வளாகத்தில் சரசுவதி தேவியின் சிலை

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வங்காள தேசத்தில் இந்து சமய மக்கள் தொகை 11,379, 000 ஆக இருந்தது. வங்காள தேசத்தில் கோபால்கஞ்ச் மாவட்டம், குல்னா மாவட்டம், தினஜ்பூர் மாவட்டம், சில்ஹெட் மாவட்டம், சுனாம்கஞ்ச் மாவட்டம், மைமன்சிங் மாவட்டம், ஜெஸ்சூர் மாவட்டம், சிட்டகாங் மாவட்டம் மற்றும் தேசியத் தலைநகர் டாக்காவில் இந்துக்கள் பரவலாக வாழ்கின்றனர்.

வங்காள தேசத்தின் கலை, கல்வி, இலக்கியம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் இந்துக்களின் பங்களிப்புகள் அவர்களின் எண்ணிக்கைக்கு மிக அதிகமாகும்.

அரசியலில் இந்துக்கள் அவாமி லீக், வங்காள தேச பொதுவுடமைக் கட்சி மற்றும் ஜாதிய சமாஜ்தாந்திரிக் தளம் போன்ற அரசியல் கட்சிகளை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். ஆனால் இசுலாமிய அடிப்படைவாத அரசியல் கட்சிகளிடமிருந்து இந்துக்கள் விலகியே உள்ளனர்.[2]

இந்துக்கள் தங்களது நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை காத்துக் கொள்வதற்கு வங்காள தேச இந்து நல அறக்கட்டளை செயல்படுகிறது.

1990 ஆண்டு முதல் இந்துகளுக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக குடியேறினர். [3]

1941ல் வங்காளதேச மொத்த மக்கள் தொகையில், இந்துக்கள் 28% ஆக இருந்தனர். 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, இலட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததால், 1951ல் இந்து மக்கள் தொகை 22.05% ஆக வீழ்ச்சியுற்றது.

1965 இந்திய - பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானிய அரசு இந்துக்களை எதிரிகளாக கருதினர்.[4][5][6]

1971ல் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில், இந்துகளுக்கு எதிராக, பாகிஸ்தானிய இராணுவத்தினர் நடத்திய இனப்படுகொலையின் போது, இருபது இலட்சம் இந்துக்கள், வங்காள தேசத்தை விட்டு, இந்தியாவிற்கு அகதிகளாக திரும்பினர். 1974 வங்காள தேச மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து மக்கள் தொகை 13.5%ஆக வீழ்ச்சியடைந்தது.

வங்காள தேச விடுதலைக்குப் பிறகும், இந்துக்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் அரசின் மீது நம்பிக்கையற்ற குடிமக்கள் என்றே முத்திரைக் குத்தப்படுகின்றனர். [4]

பியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Organisation) அறிக்கையின்படி, 2050ல் வங்காள தேச மக்கள்தொகையில், இந்துக்கள் 7% ஆகவும்; இசுலாமிய மக்கள்தொகை 92% ஆக இருக்கும் என கணித்துள்ளனர்.

இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகள்[தொகு]

கோட்ட வாரியாக இந்துக்களின் சதவீதம்
வங்காள தேச இந்து மக்கள் தொகை
கோட்டம் விழுக்காடு (%)
பரிசால் கோட்டம் 9.70
சிட்டகாங் கோட்டம் 10.65
டாக்கா கோட்டம் 8.50
குல்னா கோட்டம் 11.20
ராஜசாகி கோட்டம் 10.09
ரங்க்பூர் கோட்டம் 9.09
சில்ஹெட் கோட்டம் 8.60

அரசியல் பிரதிநிதித்துவம்[தொகு]

1974ல் வங்காள தேச மக்கள் தொகையில் 13.5% ஆக இருந்த இந்து சமய மக்கள்தொகை 2001ல் 9.2% ஆக வீழ்ச்சியுற்றது.

300 உறுப்பினர்கள் கொண்ட வங்க தேச நாடாளுமன்றத்தில், இந்து சமயத்தின் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

பெண்களுக்கான 50 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில், இந்து சமயப் பெண்கள் சார்பில் ஒருவர் கூட பிரதம அமைச்சரால் நியமிக்கப்படவில்லை.[7]

இந்துக்களின் மீதான கலவரம்,2013[தொகு]

2013 ஆம் ஆண்டு இந்துகள் குறி வைத்து தாக்கப்பட்டனர். இந்துகளின் வீடுகள் சூறையாடப்பட்டன. வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

தாக்கப்பட்ட கோயில்களின் விவரம்[தொகு]

தியதி கோயில்
பிப்ரவரி 28, 2013 காளி கோயில்
பிப்ரவரி 28, 2013 இந்து கோயில்
பிப்ரவரி 28, 2013 இந்து கோயில்
மார்ச் 1, 2013 இந்து கோயில்
மார்ச் 2, 2013 பிங்லகாதி சர்பஜனீந் துர்கா மந்திர்[8]
மார்ச் 2, 2013 இந்து கோயில்
மார்ச் 3, 2013 காளி கோயில்
மார்ச் 3, 2013 சர்பஜனீந் பூஜா சங்க மந்திர்[9]
மார்ச் 4, 2013 காளி கோயில்
மார்ச் 4, 2013 காளி கோயில்
மார்ச் 5, 2013 ககீத்ரபால் கோயில்
மார்ச் 5, 2013 குதியா சர்பஜனீந் காளி மந்திர்r[10]
மார்ச் 5, 2013 ஹரி மந்திர்[11]
மார்ச் 6, 2013 இந்து கோயில்
மார்ச் 6, 2013 இந்து கோயில்
மார்ச் 6, 2013 ராதா கிருஷ்ண மந்திர்
மார்ச் 6, 2013 காளி கோயில்[12]
மார்ச் 7, 2013 காளி கோயில்
மார்ச் 8, 2013 ராதா கோவிந்தா கோயில்
மார்ச் 10, 2013 காளி கோயில்
மார்ச் 11, 2013 சிவன் கோயில்
மார்ச் 11, 2013 துர்கா கோயில்
மார்ச் 11, 2013 ராதா கோவிந்தா மந்திர்r[13]
மார்ச் 12, 2013 ராதா கோவிந்தா மந்திர்r[14]
மார்ச் 15, 2013 மதாப்பூர் பூஜை மந்திர்[15]
மார்ச் 18, 2013 ஹரி மந்திர்[16]
மார்ச் 18, 2013 காளி கோயில்[17]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[18]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[19]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[20]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[21]
மார்ச் 22, 2013 ஸ்ரீ ஸ்ரீ லெக்ஷ்மி மாதா மந்திர்[22]

புகழ் பெற்ற வங்காள தேச இந்துக்கள்[தொகு]

அரசியல்[தொகு]

 • சுரேந்திர குமார் சின்கா
 • தோழர் மோனி சின்கா, வங்காள தேச பொதுவுடமைக் கட்சி நிறுவனச் செயலாளர்.
 • புலின் டே
 • திரைலோக்கிய சக்கரவர்த்தி
 • சுரன்ஜித் சென்குப்தா

தற்போதைய அமைச்சர்கள்[தொகு]

 • பிரேன் சிக்தர், இராஜங்க அமைச்சர், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை[23][24][25][26]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

 • ஜெய சென்குப்தா (அவாமி லீம்)
 • சுனம்கஞ்ச் (அவாமி லீம்)
 • இரமேஷ் சந்திர சென்
 • மனோரஞ்சன் சில் கோபால்

இலக்கியம் மற்றும் ஊடகவியல்[தொகு]

 • நிர்மலேந்திர கூன்
 • அருணாப் சர்க்கார்
 • பிமல் குகா
 • அவிஜித் ராய்
 • மாணிக் சந்திர சகா
 • சுதேஸ் போஸ்
 • காஜல் பானர்ஜி
 • மகாதேவ் சகா

கலைகள்[தொகு]

 • சிசிர் பட்டாச்சாரியா
 • நிதின் குண்டு
 • பார்த்தா பிரதீம் மஜும்தார்
 • சர்க்கார் பிரோதி
 • சுனில் தர்
 • சிவநாராயணன் தாஸ்

வணிகர்கள்[தொகு]

 • ரனதா பிரசாத் சகா (கொடையாளர், குமுதினி கல்லூரி நிறுவனம் மற்றும் குமுதினி மருத்துவ மனை, மிர்சாபூர் மாவட்டம்

கல்வியாளர்கள்[தொகு]

 • தேவப்பிரியா பட்டாச்சாரியா, பொருளாதார அறிஞர்
 • அஜோய் ராய்
 • கபேரி கயான்
 • புராபி பாசு
 • கட்டியாயநிதாஸ் பட்டாச்சாரியா

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்[தொகு]

 • இரண்மய சென் குப்தா
 • அருண் குமார் பசக்
 • சுவோ ராய்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://simple.wikipedia.org/wiki/Hinduism_in_Bangladesh
 2. "Attacks on Hindu Minorities in Bangladesh". Hrdc.net. 2013-10-25 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Bangladesh: Wave of violent attacks against Hindu minority". Amnesty International. 6 March 2013.
 4. 4.0 4.1 Lintner, Bertil (1 April 2015), Great Game East: India, China, and the Struggle for Asia's Most Volatile Frontier, Yale University Press, pp. 152–154, ISBN 978-0-300-21332-4
 5. D'Costa, Bina (2011), Nationbuilding, Gender and War Crimes in South Asia, Routledge, pp. 100–, ISBN 978-0-415-56566-0
 6. "Door out of Dhaka Rema Nagarajan". 2010-05-22 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Home - Noakhali Noakhali". Noakhalinoakhali.webs.com. 11 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 8. http://bdnews24.com/bangladesh/2013/03/02/bagerhat-barisal-hindu-temples-set-ablaze
 9. http://bangla.bdnews24.com/bangladesh/article597954.bdnews
 10. http://archive.thedailystar.net/beta2/news/jamaat-continues-attacking-hindus/
 11. http://bangla.bdnews24.com/bangladesh/article601773.bdnews
 12. http://bangla.bdnews24.com/bangladesh/article598971.bdnews
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-03-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-03-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 15. http://bangla.bdnews24.com/bangladesh/article602633.bdnews
 16. http://bdnews24.com/bangladesh/2013/03/19/hindus-attacked-in-khulna-netrokona
 17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-03-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-12-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 18. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
 19. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
 20. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
 21. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
 22. http://bdnews24.com/bangladesh/2013/03/22/miscreants-set-gazipur-temple-on-fire
 23. "BYLC concludes fourth Youth Leadership Summit". dhakatribune.com. Dhaka Tribune. 20 August 2016. 2 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
 24. "PM sees plot to unleash communal conflicts". 2016-08-22. 2016-09-02 அன்று பார்க்கப்பட்டது.
 25. "7,886 youths to get Tk 30cr as credit". 2016-08-15. 2016-09-02 அன்று பார்க்கப்பட்டது.
 26. "Massive turnout at yoga day celebrations in Dhaka". 2016-09-02 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

 • Blood, Archer K. (2005). The cruel birth of Bangladesh: Memoirs of an American diplomat. Dhaka: University Press.
 • Benkin, Richard L. (2014). A quiet case of ethnic cleansing: The murder of Bangladesh's Hindus. New Delhi: Akshaya Prakashan.
 • Dastidar, S. G. (2008). Empire's last casualty: Indian subcontinent's vanishing Hindu and other minorities. Kolkata: Firma KLM.
 • Kamra, A. J. (2000). The prolonged partition and its pogroms: Testimonies on violence against Hindus in East Bengal 1946-64.
 • Taslima Nasrin (2014). Lajja. Gurgaon, Haryana, India : Penguin Books India Pvt. Ltd, 2014.
 • Rosser, Yvette Claire. (2004) Indoctrinating Minds: Politics of Education in Bangladesh, New Delhi: Rupa & Co. ISBN 8129104318.
 • Mukherji, S. (2000). Subjects, citizens, and refugees: Tragedy in the Chittagong Hill Tracts, 1947-1998. New Delhi: Indian Centre for the Study of Forced Migration.
 • Sarkar, Bidyut (1993). Bangladesh 1992 : This is our home : Sample Document of the Plight of our Hindu, Buddhist, Christian and Tribal Minorities in our Islamized Homeland : Pogroms 1987-1992. Bangladesh Minority Hindu, Buddhist, Christian, (and Tribal) Unity Council of North America.