உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசக் குழந்தைகள் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kids playing at school in Dhaka, Bangladesh
வங்காளதேசத்தின் டாக்கா நகரத்தில் குழந்தைகள் பள்ளியில் விளையாடுகிறார்கள்

வங்காளதேசக் குழந்தைகள் நாள் (Children's Day (Bangladesh)) மார்ச்சு மாதம் 17 ஆம் தேதியன்று சேக் முச்சிப்பூர் ரகுமானின் பிறந்தநாளுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.[1][2] இருப்பினும், தற்போது, ​​உலக குழந்தைகள் நாளுடன் இணைந்து நவம்பர் மாதம் 20 ஆம் தேதிக்கு வங்காளதேசம் குழந்தைகள் நாளை மாற்றியுள்ளது.

வரலாறு

[தொகு]

வங்காளதேசக் குழந்தைகள் நாள் ஆண்டுதோறும் மார்ச்சு மாதம் 17 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு அவாமி லீக் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாள் தேசிய குழந்தைகள் நாளாக அறிவிக்கப்பட்டது.[3] வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் சேக் முச்சிப்பூர் ரகுமான் 1920 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17 ஆம் தேதியன்று பிறந்தார். அவரது பிறந்தநாள் வங்காளதேசத்தில் பொது விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் உரிமைகள் மற்றும் நலனை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளுடன் இந்நாள் கொண்டாடப்பட்டது.[4] பன்னாட்டு குழந்தைகள் நாள் இருந்தபோதிலும், இந்த அறிவிப்பு வரும் வரை வங்காளதேசத்தில் தேசிய குழந்தைகள் நாள் கொண்டாடப்படவில்லை. இந்த நாள் 1997 முதல் கொண்டாடப்படுகிறது. வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் பொது விடுமுறை நாட்களின் பட்டியலிலிருந்து இதை நீக்கியது..[1]

கொண்டாட்டம்

[தொகு]

மார்ச் 17 ஆம் தேதியை வங்காளதேசத்தில் அவாமி லீக் அரசாங்கம் பொது விடுமுறை நாளாகக் கருதியது.[5] 2024 ஆம் ஆண்டில், யூனுசு அமைச்சகம் அதை பொது விடுமுறை நாட்களின் பட்டியலிலிருந்து நீக்கியது.[6][1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "8 nat'l days including March 7 cancelled" (in en). The Daily Star. 17 October 2024. https://www.thedailystar.net/news/bangladesh/news/8-natl-days-including-march-7-cancelled-3728751. 
  2. "Aparajeyo-Bangladesh". www.aparajeyo.org. Retrieved 2024-04-11.
  3. "National Children's Day of Bangladesh 2024 History, Quotes, Message, Wish, Status - National Day List". nationaldaylist.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-03. Retrieved 2024-04-11.
  4. "Sheikh Mujibur Rahman's Birthday - ExcelNotes" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-18. Retrieved 2024-04-11.
  5. DhakaDon (2024-01-03). "Bangladesh Holiday Calendar 2024" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 June 2024. Retrieved 2024-04-11.
  6. "7 March, 15 August, among 8 national days, cancelled" (in en). The Business Standard. 16 October 2024. https://www.tbsnews.net/bangladesh/8-national-days-including-15-august-be-cancelled-968156.