வகுப்பறை அளவீடும் மதிப்பீடும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வகுப்பறை அளவீடும் மதிப்பீடும் (Classroom Assessment Techniques) என்பது ஒவ்வொரு குழந்தையும் எதை அறிந்திருக்கிறார்கள்?; எவ்வளவு அறிந்திருக்கிறார்கள்? எதை செய்ய இயலும்? எதை கற்று செயல்படுத்த இயலும்? என்பது குறித்த அறிவியல் ரீதியாக தகவல்களைச் சேகரிப்பதாகும்.[1]

கற்றல்-கற்பித்தலை திட்டமிடவும் அடிப்படை முடிவு எடுக்கவும், கற்றலை மேம்படுத்தவும் அறிவை வளர்க்கவும், குழந்தைகளுக்கான தேவையினை கண்டறியவும் அதற்கேற்றவாறு கற்பித்தலை மேம்படுத்தவும் பயனுள்ள கற்றலை உறுதிப்படுத்தவும் உதவுவதே அளவீடாகும்.

கற்பிக்கும்முறை மற்றும் கற்றல் வெளிப்பாடு குறித்து சிந்திக்கும் போதே மதிப்பீடு குறித்தும் யோசித்தல் அவசியமாகிறது. அளவீடு என்பது ஒரு தொடர் நிகழ்வாகும்; அலகின் இறுதியில் மட்டுமே நிகழ்வது அன்று. கற்றல் விளைவை மாணவர்கள் அறிந்திருப்பதோடு அவர்களின் செயல்திறனை அளவிடும் வகையில் செயல்முறைகள் அமைதல் வேண்டும். ஒவ்வொரு மாணவரின் சிறப்பாக பங்கேற்பது அதிகரித்து, அது வாழ்நாள் முழுதுமான கற்றல் திறனை வளர்பதே மதீப்பீட்டின் நோக்கமாகும்.

அளவீடும் மதிப்பீடும்[தொகு]

அளவிடுதலைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வருவதை மதிப்பீடு எனப்படுகிறது. ஆழ்ந்த கற்றல் வெளிப்பாட்டையும் தொடர்ச்சியான கற்பித்தல் அணுகுமுறைகளையும் பிரதிபலிப்பதாக மதிப்பீடுகள் அமையும். மதிப்பீடானது கலாச்சாரம், பாலினம், சமூக பொருளாதார பின்னணிக்கு ஏற்றவாறு வேறுபடக் கூடியது. செய்து கற்கும் வாய்ப்பினை வழங்கும்போது மாணவர்களின் அறிவு, ஈடுபாடு மற்றும் திறன்கள் முழுமையாக மேம்பட மதிப்பீடுகள் அமையும். மாணவர்களின் நிலையினை மற்றவருக்கு தெரியப்படுத்தும் ஒரு கருவியாக மதிப்பீடுகள் அமைகின்றன.

மதிப்பீடு குறித்த தவறான கண்ணோட்டம்[தொகு]

கற்றலின் இறுதியாகவே மதிப்பீடு நிகழ்கிறது. குழுவாக செயல்படுவதால் கற்றல் நிகழ்வதில்லை. மதிப்பிடுவதில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம். கற்பவருக்குண்டானது மட்டுமே மதிப்பீடு. மதிப்பீடுவது போட்டி மனப்பான்மையை வளர்க்கும். மதிப்பீடு என்பது பதற்றம், அதிகபடியான வேலை பளூ தரக் கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Classroom Assessment Techniques (CATs)". University Teaching & Learning Center. 2015-11-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  • Pedagogy of Mathematics, National Council of Educatioal Research and Training, 2012.