உள்ளடக்கத்துக்குச் செல்

வகிதுதீன் மாலிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகிதுதீன் மாலிக்கு (Wahiduddin Malik) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். வகீத் உத்தீன் மாலிக்கு என்ற பெயராலும் இவர் அறியப்பட்டார்.[a] 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை காசுமீர் பல்கலைக்கழகத்தின் 10 ஆவது துணைவேந்தராகவும்[1] 1987 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை அலகாபாத் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[2] ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் முன்னாள் பேராசிரியராகவும், பந்தேல்கண்ட்டு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் இவர் பணியாற்றினார்.[3] காசுமீர் பல்கலைக்கழகத்தில், 1979 ஆம் ஆண்டு துணைவேந்தராக இருந்த காலத்தில் புவியியல் மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் துறையை பல்கலைக்கழகத்தில் நிறுவினார். புவியியலின் அனைத்து முக்கிய துணைத் துறைகளிலும் பாடத்தைப் பற்றிய உயர் மட்ட புரிதலை வளர்ப்பது இத்துறையின் நோக்கமாக இருந்தது. பிராந்திய பகுப்பாய்வின் கருவிகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் போதுமான அளவிலான திறனை வளர்ப்பதும், பேரிடர்களைத் தணிப்பதற்காக பல்வேறு பங்குதாரர்களிடையே வலுவான தொடர்புகளை வளர்ப்பதும் இத்துறையின் இதர நோக்கங்களாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "University of Kashmir". University of Kashmir. Retrieved 2025-08-17.
  2. "University of Allahabad". University of Allahabad. 2021-03-02. Retrieved 2025-08-17.
  3. "Best ACN College Of Engineering & Management Aligarh". acncems.edu.in. 2016-09-05. Archived from the original on 2025-04-28. Retrieved 2025-08-17.
  4. "About Us, University of Kashmir" (PDF). Retrieved 2025-08-17.
  1. also spelled Wahid Uddin Malik and Wahid-ud-Din Malik
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகிதுதீன்_மாலிக்கு&oldid=4416613" இலிருந்து மீள்விக்கப்பட்டது