வஃபாதர் மொமன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வஃபாதர் மொமண்ட், (Wafadar Momand பிறப்பு: பிப்ரவரி 1, 2000) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் .[1] 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற காஜி அமானுல்லா கான் பிராந்தியப் போட்டிகளில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அரிமுகமானார்.[2] இவர் செப்டம்பர் 15, 2017 அன்று நடைபெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் பேண்ட்-இ-அமீர் டிராகன்களுக்காக இருபது20 போட்டித் தொடரில் இவர் அறிமுகமானார்.[3]

சர்வதேச வாழ்க்கை[தொகு]

டிசம்பர் 2017 இல், இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[4]

2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வாகிய துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.[5] இவர் 14 ஜூன் 2018 அன்று இந்தியாவுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] போட்டியின் போது, இவர் ரஷீத் கானுடன் இணைந்து பந்துவீச்சில் 100 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் ஆப்கானித்தான் அணி சார்பாக 100 ஒட்டங்கள் விட்டுக் கொடுத்த இளம் வயது இணை எனும் மோசமான சாதனை படைத்தனர்.[7] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 21 ஓவர்கள் வீசி 100 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் இரு ஓவர்களை வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இவர் 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 7 பந்துகளில் இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி ஆட்டப் பகுதி மற்றும் 262 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8]

ஜூலை 2018 இல், இவர் அயர்லாந்திற்கு எதிரான தொடருக்கான ஆப்கானிஸ்தானின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார். ஆனால் இந்தத் தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.[9] செப்டம்பர் 2018 இல், 2018 ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் ஒருநாள் அணியில் இவர் இடம் பெற்றார்.[10] இருப்பினும் ஒரு பயிற்சியில் விளையாடும் போது காயம் ஏற்பட்டதால் இவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.[11]

டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[12] பிப்ரவரி 2019 இல், இந்தியாவில் நடைபெற்ற அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரானதேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இடம்பெற்றார்.[13][14] நவம்பர் 2019 இல், பங்களாதேஷில் நடைபெற்ற 2019 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இவர் இடம் பெற்றார்.[15]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஃபாதர்_மொமன்ட்&oldid=2868101" இருந்து மீள்விக்கப்பட்டது