ழ (சிற்றிதழ்)
ழ என்பது 1970களின் இறுதியில் வெளியான கவிதைகளுக்கான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். மாத இதழான இதன் ஆசிரியராக ஆத்மாநாம் இருந்தார்.[1]
ழ இதழ் 1978 ஆண்டிலிருந்து வெளிவந்தது. இதன் 24 ஆம் இதழ் 1983 சனவரியில் வெளி வந்தது. அதன்பிறகு சரிவர வெளியாகாத இது ஞானக்கூத்தனை ஆசிரியராக கொண்டு 1987இல் இருந்து மீண்டும் வெளிவரத் துவங்கியது. 1988இல் நின்று விட்டது.[2] ழ பொதுவாக கவிதையில் மிகுந்த அக்கறை காட்டியது. புதிதாக வெளிவந்த கவிதை நூல்கள் பற்றிய விரிவான விமர்சனங்களை வெளியிட்டது. நவீன ஓவியங்களை அட்டைப்படமாக வெளியிட்டது. ழ ஞானக்கூத்தன், ஆத்மாநாம் பிரம்ம்ராஜன், கலாப்ரியா, கல்யாண்ஜி காஸ்யபன், தேவதச்சன், ஆர். ராஜகோபாலன் முதலிய கவிஞர்களும், க. நா. சுப்ரமண்யம், நகுலன் போன்ற முன்னோடிகளும், மற்றும் பல புதியவர்களும் எழுதியிருக்கிறார்கள். பிறநாட்டுக் கவிஞர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்பும் வெளியானது.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 255-257. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8C. பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.
- ↑ ழ- சிற்றிதழ், தமிழ் விக்கி, பார்த்த நாள் 18 சூன் 2022