ழ தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழ தொலைக்காட்சி
ZHA TV.png
ஒளிபரப்பு தொடக்கம் 2014
உரிமையாளர் ழ ஊடகம்
பட வடிவம் MPEG-4
கொள்கைக்குரல் இது நம்ம ஊர் தொலைக்காட்சி
நாடு இந்தியா
தலைமையகம் வந்தவாசி, தமிழ்நாடு, இந்தியா
வலைத்தளம் www.zhamedia.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி (இந்தியா) 39

ழ தொலைக்காட்சி, ழ ஊடகத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். இத்தொலைக்காட்சி ஜனவரி, 2014 தைத்திருநாளில் தொடங்கப்பட்டது. வந்தவாசி பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், தொழில், கல்வி, பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளைத் வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொலைக்காட்சி பற்றி[தொகு]

ழ தொலைக்காட்சி, வந்தவாசி ஒன்றியத்தில் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்தில் உரிமம் பெற்றதாகும்.

ழ தொலைக்காட்சி, வந்தவாசி நகரம மற்றும் சுற்றுவட்டார 150க்கும் மேற்பட்ட கிராமங்களை சென்றடைகிறது. அதாவது சுமார் 125 கிமீ சுற்றளவில் ஒளிபரப்பாகும் ழ தொலைக்காட்சி, அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மற்ற உள்ளூர் தொலைக்காட்சி போலல்லாமல், அதிக அளவில் உள்ளூர் சம்பந்தப்பட்ட, உள்ளூர் மக்களுக்கு தேவையான தகவல்களடங்கிய நிகழ்ச்சிகளை ழ தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. எ-டு. வேளாண்மை, வேலைவாய்ப்பு, கிராம மேம்பாடு, பண்பாடு, இளைஞர்-மகளிர்-சமூக நலன்,..

ழ தொலைக்காட்சி ஒளிபரப்பும் திரைப்படங்களுக்கு முறையான உரிமம் பெறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள்[தொகு]

தொலைக்காட்சி நிறுவனத்தில் உரிமம் பெற்ற தொலைக்காட்சி ஆகும்.

காலை: தெய்வீகப்பாடல்கள், வேளாண் நிகழ்ச்சி, உடல்நலம், உள்ளூர் கோவில் விழா தொகுப்பு, திரைப்படப்பாடல்கள்.

பகல்: திரைப்படம், நகைச்சுவை, திரைப்பட காட்சிகள்.

மாலை: வேளாண் நிகழ்ச்சி, உள்ளூர் நிகழ்ச்சிகள், உள்ளூர் கோவில் விழாக்களின் தொகுப்பு, நேயர்களிடமிருந்து நேரலையில் உரையாடும் நிகழ்ச்சி, திரைப்படப்பாடல்கள், திரைப்படம்

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ழ_தொலைக்காட்சி&oldid=3425346" இருந்து மீள்விக்கப்பட்டது