ழூல் வேர்ண் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழூல் வேர்ண்
Jules Verne (ATV-001)
ழூல் வேர்ண் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அண்மிக்கிறது
இயக்குபவர்ஈசா
முதன்மை ஒப்பந்தக்காரர்EADS Astrium,
Thales Alenia Space
திட்ட வகைஅ.வி.நிக்கு சரக்கு அனுப்புதல்
செயற்கைக்கோள்பூமி
ஏவப்பட்ட நாள்04:03 UTC, மார்ச் 9, 2008
ஏவிய விறிசுஆரியான் 5
திட்டக் காலம்5 மாதங்கள்
தே.வி.அ.த.மை எண்2008-008A
இணைய தளம்ஈசா - ATV
நிறை20 தொன், (44,000 இறா)
திறன்சூரிய ஆற்றல்
சுற்றுப்பாதை உறுப்புகள்
வான்வெளி கோளப்பாதைLow Earth orbit
சாய்வு51.6°
சேய்மைநிலை339 கிமீ (183.045356217 nmi)
அண்மைநிலை331 கிமீ (178.725701793 nmi)
சுற்றுக்காலம்91.34

ழூல் வேர்ண் (ஜூல்ஸ் வேர்ண், Jules Verne ATV), என்பது ஐரோப்பாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் ஆகும். பிரெஞ்சு அறிவியல் புதின எழுத்தாளர் ழூல் வேர்ண் என்பவரின் நினைவாக இவ்விண்கலத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது[1]. இது மார்ச் 9, 2008 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. இதில் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் (அவிநி) தங்கியுள்ள வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், உடைகள் மற்றும் விண்வெளி மையத்துக்கு தேவையான 5 தொன் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இதுவே முதலாவது ஆளில்லா சரக்கு விண்கலமாதலால், இவ்விண்கலம் மூன்று வாரங்கள் சோதிக்கப்பட்டே அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. அவிநி உடன் இது ஏப்ரல் 3, 2008 இல் வெற்றிகரமாக இணைந்தது. நான்கு மாதங்கள் வரை இது விண்வெளி நிலையத்துடன் இணைந்திருந்த பின்னர் அங்கிருந்து விடுபட்டு பூமியின் வளிமண்டலத்தினுள் பிரவேசித்து பசிபிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Europe's 'Jules Verne' spacecraft carries namesake's notes on maiden voyage". collectSPACE.com. மார்ச் 7 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-03-09. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழூல்_வேர்ண்_(விண்கலம்)&oldid=1827685" இலிருந்து மீள்விக்கப்பட்டது