உள்ளடக்கத்துக்குச் செல்

லோவ்லினா போர்கோஹைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோவ்லினா போர்கோஹைன்
Lovlina Borgohain
புள்ளிவிபரம்
பிரிவு69 கிலோ
உயரம்1.78 மீட்டர்
தேசியம்இந்தியர்
பிறப்பு2 அக்டோபர் 1997 (1997-10-02) (அகவை 26)
பிறந்த இடம்கோலாகாட், அசாம், இந்தியா

லோவ்லினா போர்கோஹைன் (Lovlina Borgohain (பிறப்பு: 2 அக்டோபர் 1997) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கோலாகாட் நகரத்தைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 2020-ஆம் ஆண்டில் அருச்சுனா விருது வென்றார்.[1][2]இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெர்ட்ஸ் மற்றும் தைவான் நாட்டின் சென் நயின் சிங்கை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பெற்றார்.[3][4][5]

2020 தோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்

[தொகு]

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 69 கிகி பிரிவில் 2021 ஆம் ஆண்டு ஆகத்து 4 அன்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் துருக்கியின் புசேனாஸ் சுர்மீனெலி என்பவரிடம் தோற்றார். இருப்பினும் இவர் இப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் நிறைவு செய்தார். விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரானார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. List of National Sports Award winners 2020
  2. Assam Boxer Lovlina Borgohain receives Arjuna Award
  3. டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதி போட்டிக்கு சென்ற லவ்லீனாவுக்கு பதக்கம் உறுதி
  4. Lovelina Borgohain assured of Olympic boxing medal after reaching semifinals sportstar.thehindu.com. Retrieved 30 July 2021
  5. Well done, Lovlina! Vijender Singh, Anurag Thakur lead wishes as boxer assures India's second medal at Tokyo Times Now. Retrieved 30 July 2021
  6. Sarangi, Y. b (2021-08-04). "Tokyo Olympics". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lovlina Borgohain
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோவ்லினா_போர்கோஹைன்&oldid=4054466" இலிருந்து மீள்விக்கப்பட்டது