லோவி போ
லோவி போ | |
---|---|
![]() 2012 செப்டம்பர், 69 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் போ | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | லூர்து வர்ஜீனியா லோவி மோரன் போ |
பிறப்பு | பெப்ரவரி 11, 1989 குவிசோன் நகரம், பிலிப்பீன்சு |
பிறப்பிடம் | ஏஞ்சலிசு, பிலிப்பீன்சு |
இசை வடிவங்கள் | பாப் |
தொழில்(கள்) | பாடகி, நடிகை, மாடல் |
இசைக்கருவி(கள்) | வாய்ப் பாட்டு |
இசைத்துறையில் | 2005 முதல் தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | சோனி பி.எம்.ஜி, சோனி மியூசிக் (பிலிப்பைன்ஸ்) ஜி.எம்.ஏ கலைஞர் மையம் (2006 - தற்போது வரை) |
இணைந்த செயற்பாடுகள் | ஓகி அல்காசிட், கிளைசா டி காஸ்ட்ரோ |
லூர்து வர்ஜீனியா லோவி மோரன் போ (Lourdes Virginia Lovi Moran Poe ) (பிறப்பு: 1989 பிப்ரவரி 11) இவர் ஓர் பிலிப்பைன்ஸ் நடிகையும், விளம்பர நடிகையும் மற்றும் பதிவுக் கலைஞரருமாவார். மறைந்த சண்டைக் கலைஞர் பெர்னாண்டோ போ ஜூனியரின் மகளாவார். [1] 2006 ஆம் ஆண்டு தொடரான பேக்காங் மற்றும் ஷீலா ரியல் ஆகியவற்றிலும், 2014 ஆம் ஆண்டு நாடகத் தொடரான ஆங் தலவாங் ரியல், டிங்டாங் டான்டெஸ் மற்றும் மரிசெல் சொரியானோ ஆகியவற்றிலிம் கிறிஸ்டல் மைசோக் வேடங்களில் நடித்ததில் போ பிரபலமானவர். [2] [3]
மயோகன் படத்தில் லிலிபெத் என்றா வேடத்தில் நடித்ததற்காக 2010ஆம் ஆண்டு சினிமாலயா சுதந்திர திரைப்பட விழாவில் சிறந்த நடிகையாக தனது முதல் நடிப்பு விருதைப் பெற்றார். [4] அதே ஆண்டு, சாக்ரடா ஃபேமிலியாவில் காத் அஸெரோவின் பாத்திரத்தை சித்தரித்ததற்காக இவர் பிலிப்பைன்ஸ் திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அமைப்பின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார். [5]
போ தற்போது ஜிஎம்ஏ என்ற வணிக ஒளிபரப்புத் தொலிக்காட்சி வலைப்பின்னலின் பிரத்யேக ஒப்பந்த கலைஞராக உள்ளார். [6]
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
கியூசன் நகரில் உள்ள புனித லூக்கா மருத்துவ மையத்தில், பிலிப்பைன்ஸ் நடிகர்களான பெர்னாண்டோ போ ஜூனியர் மற்றும் ரோவேனா மோரன் ஆகியோருக்கு போ பிறந்தார் . [7] 2004 பிப்ரவரியில், போ ஜூனியர், முன்னாள் நடிகையும் மற்றும் அழகு ராணியுடன் தனக்கு ஒரு மகள் இருப்பதாக பொதுமக்களிடம் ஒப்புக்கொண்டார். இவருக்கு செனட்டர் போ என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார். [8]
போ மாகட்டியில் உள்ள கோல்ஜியோ சான் அகஸ்டினில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை முடித்தார். அங்கு இவர் 2007இல் பட்டம் பெற்றார். பின்னர் இவர் சர்வதேச மேலாண்மை மற்றும் பொருளாதார அகாதமி மற்றும் மிரியம் கல்லூரியில் படிப்புகளை படித்தார். [9] [10]
போ நடிகர்களான கோகி டொமிங்கோ, [11] ஜோலோ ரெவில்லா, [12] ஜேக் குயெங்கா, [13] ரோகோ நாசினோ, [14] மற்றும் அரசியல்வாதி ரொனால்ட் சிங்சன் ஆகியோருடன் சிறுது காலம் உறவிலிருந்தார் . [15] 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, போ பிரெஞ்சு-பிலிப்பைன்ஸ் கிறிஸ் ஜான்சனுடன் காதல் கொண்டிருந்தார். முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் டேட்டிங் செய்வதை மறுத்திருந்தார்.
தொழில்[தொகு]
2006ஆம் ஆண்டில், போ சர்வதேச பாடல் இரட்டையர்களான சேம் சேம் என்பர்களுடன் சேர்ந்து "வித் அவுட் யூ" என்ற பாடலை நிகழ்த்தினார். இது இருவரின் முதல் இசைத் தொகுப்பான "தி மீனிங் ஆஃப் ஹேப்பி" என்பதில் சேர்க்கப்பட்டுள்ளது. பின்னர் இவர் பிலிப்பைன்ஸின் நடிகர் கோகி டொமிங்கோவுடன் இளைஞர்களை மையமாகக் கொண்ட லவ் டு லவ் நிகழ்ச்சியில் இணைந்து நிகழ்த்தினார். கிறிஸ்டலின் விருப்பமான பாத்திரத்தில் நடிக்க இவர் நடித்தபோது , இவரது மிகப்பெரிய நடிப்பு வெளிப்பட்டது. சன்ஷைன் டிஸன் நடித்த அவரது தாயார் பக்கேகாங், 2006 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற தொலைக்காட்சித் தொடரான பக்கேகாங்கில் ஒரு நடிகையாக நிகழ்ச்சித் தொழிலில் சேரத் தள்ளினார். [16] இந்தத் தொடரில் இவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் தொலைக்காட்சிக்கான 21 வது பி.எம்.பி.சி ஸ்டார் விருதுகளில் சிறந்த புதிய பெண் தொலைக்காட்சி ஆளுமை என்று பெயரிடப்பட்டது.
இவர் ஜைடோ: புலிஸ் பங்கலவாகன் செய்தித்தாள் பத்திரிகையாளராகவும் இருந்தார். இவர் ஒரு காவல்காரரின் நண்பராக இருக்கிறார். இவர் தனது மற்ற உறவினர்களுடன் ஒரு சூப்பர் கதாநாயகியாக மாறினார். மார்க்கி சியோலோ அலெக்சிஸ் லோரென்சோ அல்லது ஜைடோ கிரீன் என்ற வேடத்தில் நடித்தார். அவர்கள் இத்தொடரில் காதல் குழுக்களாக நடித்தனர். 2008 ஆம் ஆண்டில் இவர் ஒரு பகல்நேர நாடகத்தில் ஜோனா என்ற தைரியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். [17]
2008ஆம் ஆண்டில், திரைப்படங்களுக்கான 24 வது பி.எம்.பி.சி ஸ்டார் விருதுகளில் ஷேக் ராட்டில் மற்றும் ரோல் 9 திரைப்படத்தில் நடித்ததற்காக லோவி ஆண்டின் புதிய திரைப்பட நடிகைக்கான விருதை வென்றார்.
இவர் 2008 ஆகத்து 17 அன்று தொடங்கப்பட்ட கேபி கான்செப்சியன் 20-நகர சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியால இருந்தார். மியூசிக் மியூசியத்தில் அவரது "ப்ளூம்" தனி இசை நிகழ்ச்சி அக்டோபர் 16 ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. ப்ளூம் சோனி பிஎம்ஜியின் கீழ் இவரது 2 வது ஆல்பத்தின் தலைப்பாகும். ரீகல் என்டர்டெயின்மென்ட்டின் "பாக்கே-யுகே" நடிகரின் ஒரு பகுதியாகவும் உள்ளார். [18]
குறிப்புகள்[தொகு]
- ↑ Dimaculangan, Jocelyn (April 22, 2013). "Lovi Poe appears on ABS-CBN to talk about her late father, Fernando Poe Jr". PEP.ph. Philippine Entertainment Portal. April 1, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bakekang unveils the true face of love". GMANetwork.com. GMA Network. September 11, 2006. April 2, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "A triumphant and exciting ending for 'Mrs. Real'". The Manila Times. September 18, 2014. செப்டம்பர் 1, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 2, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Villasanta, Boy (July 21, 2010). "Meryll Soriano at Lovi Poe, wagi sa 2010 Cinemalaya". Pinoy Weekly. ஜனவரி 20, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 2, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lovi Poe is FAMAS best actress". The Fil-Am Weekly. டிசம்பர் 5, 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 2, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Tuazon, Nikko (May 17, 2013). "Lovi Poe signs three-year exclusive contract with GMA-7: "I'm just happy that I'm back home."". PEP.ph. Philippine Entertainemtn Portal. April 2, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Moral, Cheche V. (March 18, 2013). "Lovi Poe: More than just her father's daughter". http://lifestyle.inquirer.net/95047/lovi-poe-more-than-just-her-fathers-daughter/.
- ↑ Portillo, Samantha (November 8, 2014). "Daughters of 'Da King' talk about family while growing apart". GMANetwork.com. GMA Network. April 1, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ De Mesa, Karl R. (April 2012). "Guts, Glory, Gravity". healthtoday.net. Health Today Philippines. March 21, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 1, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lovi Poe returns to school amid busy showbiz career". GMA News Online (ஆங்கிலம்). 2020-03-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Cogie Domingo on Lovi Poe: 'She's really special to me.'". Philippine Entertainment Portal. February 19, 2007. August 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lovi Poe breaks up with boyfriend Jolo Revilla". GMA Network. November 1, 2009. August 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lovi admits she had a relationship with Jake Cuenca". ABS-CBN Corporation. July 6, 2014. August 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jimenez, Joy (February 3, 2016). "Lovi Poe after breakup: I'm happy where I am". Philstar.net. August 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Benedicto, Rizza Lorraine (September 29, 2015). "Lovi Poe explains recent sighting with ex-boyfriend Ronald Singson". Philippine Entertainment Portal. August 15, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lovi Poe thanks Sunsine Dizon for being her acting coach". gmanetwork.com. May 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "'Kaputol ng Isang Awit' cast members". ஜனவரி 20, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lovi Poe returns to school amid busy showbiz career". GMA News Online. May 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.