உள்ளடக்கத்துக்குச் செல்

லோரென்ட்சு தேசிய பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோரென்ட்சு தேசிய பூங்கா
டாமன் தேசிய லோரென்ட்சு
தேசிய பூங்காவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள புன்காக் ஜெயா
அமைவிடம்பாபுவா மாகாணம், இந்தோனேசியா
அருகாமை நகரம்வாமெனா
பரப்பளவு25056 சதுர கி.மீ.
நிறுவப்பட்டது1997
நிருவாக அமைப்புஇந்தோனேசிய வனத்துறை
உலகப் பாரம்பரியக் களம்1999
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிஇயற்கை: viii, ix, x
உசாத்துணை955
பதிவு1999 (23-ஆம் அமர்வு)

லோரென்ட்சு தேசிய பூங்கா இந்தோனேசியாவின் பப்புவாவில் அமைந்துள்ளது, இது முன்னர் ஐரியன் ஜயா (மேற்கு நியூ கினி ) என்று அழைக்கப்பட்டது. 25,056 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (9,674   சதுர மைல்) அமைந்துள்ள இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகும். 1999 ஆம் ஆண்டில் லோரென்ட்சை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது.

நியூ கினியானது பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். லோரென்ட்சு உலகிலேயே மிகவும் சுற்றுச்சூழல் ரீதியாக வேறுபட்ட தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கடல் பகுதிகள், சதுப்பு நிலங்கள், ஓதம் மற்றும் நன்னீர் சதுப்பு காடு, தாழ்நிலம் மற்றும் மான்ட்டேன் மழைக்காடுகள், அல்பைன் துாந்திரம் மற்றும் பூமத்திய ரேகை பனியாறுகள் ஆகிய வகைப்பாடுகளைக் கொண்ட முழுமையான சூழல் மண்டலங்களைக் கொண்ட ஒரே இயற்கை அமைவிடம் இதுவாகும். 4884 மீட்டர் உயரத்தில், புன்காக் ஜெயா (முன்னதாக கார்ஸ்டென்ஸ் பிரமிடு) மலையானது இமயமலைக்கும் ஆண்டிஸுக்கும் இடையிலான மிக உயரமான மலைத்தொடராகும்.

சர்வதேச பறவை வாழ்க்கை அமைப்பானது லோரென்ட்ஸ் பூங்காவை "நியூ கினியின் மிக முக்கியமான உயிர்க்கோளக் காப்பகம்" என்று அழைத்தது.[1] இது உலக வனவிலங்கு நிதியத்தின் " குளோபல் 200 " சுற்றுச்சூழல்களில் ஐந்தைக் கொண்டுள்ளது: தெற்கு நியூ கினி தாழ்நில காடுகள்; நியூ கினி மோன்ட்டேன் காடுகள்; நியூ கினி மத்தியத் தொடர் சுபல்பைன் புல்வெளிகள்; புதிய கினி சதுப்பு நிலங்கள் ; மற்றும் நியூ கினி நதிகள் மற்றும் நீரோடைகள் ஆகியவையாகும்.[2]

லோரென்ட்ஸ் பூங்காவில் பல அடையாளம் காணப்படாத மற்றும் ஆராயப்படாத பகுதிகள் உள்ளன. மேலும், மேற்கத்திய அறிவியலுக்கு இதுவரை தெரியாத பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இருப்பது உறுதி. லோரென்ட்சு பயோட்டாவின் உள்ளூர் சமூகங்களின் இன அழிப்பு மற்றும் இனவியல் அறிவும் மிகவும் குறைவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

டச்சு ஆய்வாளரான ஹென்ட்ரிகஸ் ஆல்பர்டஸ் லோரென்ட்சின் பெயரால் 1909-10 பயணத்திற்குப் பிறகு இந்த பூங்கா பெயரிடப்பட்டது.

விலங்குகள்[தொகு]

லோரென்ட்ஸ் தேசிய பூங்காவில் 630 ஆவணப்படுத்தப்பட்ட பறவை இனங்கள் (பப்புவாவில் உள்ள மொத்த பறவை இனங்களின் எண்ணிக்கையில் 95%) மற்றும் 123 பாலூட்டி இனங்கள் உள்ளன. பறவைகளில் இரண்டு வகையான கசோவரி, 31 புறா மற்றும் புறா இனங்கள், 500 வகையான கொண்டைக்கிளிகள், 60 வகையான மீன் கொத்திகள் மற்றும் 145 வகையான தேன்சிட்டுகள் ஆகியவை அடங்கும்.[3] சுதிர்மேன் பனிமலைத் தொடரில் ஆறு பறவை இனங்கள் அகணிய உயிரிகளாக உள்ளன. அவற்றில் பனிமலைக் காடை, பனிமலைக் குருவி, மத்திய பாப்புவன் தொடருக்கே உரித்தான 26 இனங்களும், தெற்கு பாப்புவன் தாழ்நிலங்களுக்கே உரித்தான மூன்று இனங்கள் ஆகியவையும் அடங்கும். தெற்கத்திய காசௌரி, அல்பைன் கம்பளிசூழ் எலி, தெற்கத்திய கிரீடப்புறா, வல்லூற்றினையொத்த கிளி, சால்வதோரி வாத்து, மற்றும் மேக்கிரிகோரின் ஆசுத்திரேலிய இனப்பெரிய பறவை ஆகியவை தீவாய்ப்பு இனங்களாகும்.[4] இங்கு காணப்படும் பாலூட்டி இனங்களில் நீண்ட அலகு எறும்புண்ணி, குட்டை அலகு எறும்புண்ணி, வல்லபிகள், மரக்கங்காருகள் போன்றவை அடங்கும்.

மனித வசிப்பிடம் மற்றும் கலாச்சாரம்[தொகு]

தேசிய பூங்காவின் பரப்பானது 25,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. லோரென்ட்சின் காடுகள் எட்டு பழங்குடி இனங்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கியது. பல்லுயிர் பாதுகாப்பதில் இந்த தேசிய பூங்கா வெற்றிபெற வேண்டுமானால் பூங்காவிற்கான பாதுகாப்பு மேலாண்மை உத்திகள் இந்த மக்களின் தேவைகளையும் நாட்டங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. மேலும், கலாச்சார பன்முகத்தன்மை தேசிய பூங்காவின் வெற்றியின் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Birdlife International, 1999 பரணிடப்பட்டது 2009-01-03 at the வந்தவழி இயந்திரம், retrieved 14 May 2010
  2. WWF Ecoregions, retrieved 14 May 2010
  3. Ministry of Forestry பரணிடப்பட்டது 2010-07-17 at the வந்தவழி இயந்திரம், retrieved 14 May 2010
  4. UNESCO: WHC Nomination Documentation, 1999, retrieved 18 November 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரென்ட்சு_தேசிய_பூங்கா&oldid=3873724" இலிருந்து மீள்விக்கப்பட்டது