உள்ளடக்கத்துக்குச் செல்

லோரியன் தங்கை

ஆள்கூறுகள்: 34°32′04″N 71°52′16″E / 34.5344°N 71.8711°E / 34.5344; 71.8711
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோரியன் தங்கை
பௌத்த தொல்லியல் களம்
லோரியன் தங்கையின் மறுசீரமைக்கப்பட்ட தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஆப்கானிஸ்தான்
புவியியல் ஆள்கூறுகள்34°32′04″N 71°52′16″E / 34.5344°N 71.8711°E / 34.5344; 71.8711
சமயம்பௌத்தம்
மண்டலம்காந்தாரம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகிபி இரண்டாம் நூற்றாண்டு
நிலைதூபி சிதிலமைடைந்துள்ளது.
செயற்பாட்டு நிலைதொல்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது

லோரியன் தங்கை (Loriyan Tangai) ஆப்கானிஸ்தான் நாட்டின் பண்டைய காந்தாரப் பகுதியில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும். இத்தொல்லியல் களத்தில் 1896—இல் அலெக்சாண்டர் கட்டி தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வுவின் போது, கிபி இரண்டாம் நூற்றாண்டின் கௌதம புத்தரின் பல சிற்பங்களும், தூபிகளும் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. [1]

"318ஆம் ஆண்டின்" புத்தர்

[தொகு]
லோரியன் தங்கை புத்த்ர் சிலை
புத்தர் சிலையில் ஆண்டு 318 எனக்குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு கிபி 143 ஆக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. [2]

லோரியன் தங்கை புத்தர் சிலையின் ஒன்றின் மீதிருந்த கல்வெட்டுக் குறிப்பில் 318-ஆம் ஆண்டு எனக்குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு கிபி 143 ஆக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

காந்தாரப் பகுதிகளில் யவனர்கள் எனும் கிரேக்கர்களின் ஆட்சி கிமு 174-இல் துவங்கியது என கணிக்கப்பட்டுள்ளது. எனவே கிரக்க கலைநயத்தில் வடிக்கப்பட்ட இப்புத்தர் சிலை கிபி 143-ஆண்டைச் சேர்ந்தது என வரலாற்றுத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். [2]


படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Loriyan Tangai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரியன்_தங்கை&oldid=3322508" இலிருந்து மீள்விக்கப்பட்டது