லோப்சங் சங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோப்சங் சங்கை
Lobsang Sangay
திபெத் நடுவண் அரசின் பிரதமர்
பதவியில்
ஆகத்து 2011
ஆட்சியாளர்டென்சின் கியாட்சோ
Succeedingலோப்சங் டென்சின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1968 (அகவை 55–56)
டார்ஜீலிங், இந்தியா
முன்னாள் கல்லூரிதில்லிப் பல்கலைக்கழகம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்

லோப்சங் சங்கை (Lobsang Sangay, பிறப்பு: 1968) திபெத்திய அகதியும், சட்ட வல்லுநரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் திபெத்திய நாடு கடந்த அரசின் பிரதமராக (திபெத்திய மொழியில்: கலோன் ட்ரைப்பா) 2011, ஏப்ரல் 27 இல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திபெத்திய சட்ட ஆலோசகரும், பன்னாட்டு மனித உரிமைச் சட்ட வல்லுநரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்தியாவில் டார்ஜீலிங்கில் பிறந்த இவர் திபெத்துக்கு என்றும் சென்றதில்லை. இவரது தந்தை 1959 ஆம் ஆண்டில் தலாய் லாமாவுடன் சேர்ந்து திபெத்தை விட்டு வெளியேறினார். திபெத்து அகதிகள் உயர் பள்ளியில் கல்வி பயின்ற சங்கை தில்லிப் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கலைமாணிப் பட்டம் பெற்றார். 2004 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு புலமைப் பரிசில் பெற்று சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்[1].

பிரதமர்[தொகு]

2011 ஏப்ரல் 26]] இல் இவர் திபெத்திய நடுகடந்த அரசின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]. திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா நாடு கடந்த திபெத்து அரசின் அரசியல் தலைமையில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவு செய்ததை அடுத்து லோப்சங் சங்கை அப்பதவிக்குத் தெரிவானார். உலகெங்கும் உள்ள திபெத்தியர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் லோப்சங் சங்கை 55% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தலாய் லாமா திபெத்தின் ஆன்மிகத் தலைவராக தொடர்ந்து பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல்கள் இடம்பெற்றன. முடிவுகள் திபெத்தின் நாடு கடந்த அரசு செயல்படும் இந்திய நகரமான தரம்சாலாவில் அறிவிக்கப்பட்டன[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Lobsang Sangay LL.M. '96 S.J.D. '04 named prime minister of the Tibetan government in exile
  2. Staff (2009). "Lobsang Sangay - Candidate". Kalon Tripa 2011. Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-02-04. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. Lobsang Sangay elected Tibetan exile leader, பிபிசி, ஏப்ரல் 27, 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோப்சங்_சங்கை&oldid=3570363" இலிருந்து மீள்விக்கப்பட்டது