உள்ளடக்கத்துக்குச் செல்

லோபாமுத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோபாமுத்திரை
அகத்தியர் & லோபாமுத்திரை
தகவல்
துணைவர்(கள்)அகத்தியர்

லோபாமுத்திரை (Lopamudra என்று அழைக்கப்படுவார். அகத்திய முனிவரின் பத்தினியும், ரிக் வேத கால பெண் முனிவரும் ஆவார். லோபாமுத்திரை என்பதற்கு, லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகை கவர்பவள் எனப் பொருளாகும். இவளே காவிரி நதியாக, அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து தமிழ்நாட்டை நாேக்கிப் பாய்கிறாள்.

பண்டைய இந்திய வேத கால இலக்கியங்களின் படி, இருக்கு வேத காலத்தில் (பொ.ஊ.மு. 2600–1950) வாழ்ந்த லோபமுத்திரை பெண் வேத மெய்யிலாளர் ஆவார். இருக்கு வேதத்தில் லோபமுத்திரையின் மந்திரங்கள் உள்ளது.[1][2]

வேதம் இதிகாச, புராணங்களில் மூன்று இடங்களில் லோபமுத்திரை பற்றிய செய்திகள் உள்ளது. இருக்கு வேத மந்திரங்களிலும், மகாபாரத இதிகாசத்தில், வன பருவம், அத்தியாயம் 96, 97 & 98-இல் தான் திருமணம் செய்து கொள்வதற்காக, அகத்தியர், லோபமுத்திரையைப் படைத்து,[3] பின் குழந்தை லோப முத்திரையை பருவ வயது அடையும் வரை, விதர்ப்ப நாட்டு மன்னரிடம் வளர்ப்பதற்கு கொடுத்தார். பின் லோபாமுத்திரை பருவ வயது எய்திய பின் லோபமுத்திரையை அகத்தியர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.[4]

லோபாமுத்திரை – அகத்தியர் இணையருக்கு பிறந்தவர் திரிதாசுயு ஆவார். கவிஞரான திரிதாசுயு உருக்க்கு வேதத்தில் சில மந்திரங்களை இயற்றியுள்ளார்.[2]

அகத்தியருடன் இணைந்து லோபாமுத்திரை லலிதா சகஸ்ரநாமத்தை பரத கண்டம் முமுவதும் பரப்பினார்.

இருக்கு வேதத்தில்

[தொகு]

இருக்கு வேத காலத்திய 27 பெண் ரிஷிகளில் லோபாமுத்திரை 179 மந்திரங்களைப் படைத்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Swami & Irāmaccantiraṉ 1993, ப. 242.
  2. 2.0 2.1 Pandharipande, Dr. Rajeshwari. "A Possible Vision of Lopamudra!". themotherdivine.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2015.
  3. "Encyclopedia for Epics of Ancient India: Lopamudra". பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
  4. லோபாமுத்திரையை உருவாக்கிய அகஸ்தியர்!

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபாமுத்திரை&oldid=4059188" இலிருந்து மீள்விக்கப்பட்டது