லோதிகா சர்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோதிகா சர்க்கார் (Lotika Sarkar 4 ஜனவரி 1923 - 23 பிப்ரவரி 2013) ஒரு குறிப்பிடத்தக்க இந்திய பெண்ணியவாதி, சமூக சேவகர், கல்வியாளர் மற்றும் வழக்கறிஞர் ஆவார், அவர் இந்தியாவில் பெண்கள் ஆய்வு மற்றும் பெண்கள் உரிமைகள் துறையில் முன்னோடியாக இருந்தார். அவர் 1980 இல் நிறுவப்பட்ட தில்லியின் மகளிர் மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தின் (CWDS) நிறுவன உறுப்பினராகவும், 1982 இல் நிறுவப்பட்ட இந்திய பெண்கள் கற்றல் சங்க உறுப்பினராகவும் இருந்தார். 1951 ல் தொடங்கி, 1983 வரை தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்டம் கற்பித்தார், மேலும் சட்ட பீடத்தின் தலைவராகவும் இருந்தார், அதன் பிறகு அவர் இந்திய சட்ட நிறுவனத்தில் கற்பித்தார். கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார், பின்னர் 1951 இல் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் ஆனார். [1] [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1923 இல் பிறந்த அவர், மேற்கு வங்கத்தில் ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் வளர்ந்தார், அங்கு அவரது தந்தை சர் திரென் மித்ரா இந்தியாவின் முன்னணி வழக்கறிஞராக இருந்தார். [3]

சர்கார் கேம்பிரிச்சின் நியூன்காம் கல்லூரியில் சட்டம் பயின்றார் மற்றும் படித்த முதல் இந்தியப் பெண் மற்றும் பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். [2] [4] பின்னர் அவர் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் 1951 இல் வழங்கப்பட்ட சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார் . [5] [6] அதன் பிறகு 1960 இல், அவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்தைப் படித்தார், அங்கு கல்வி பயின்ற நான்கு இந்திய மாணவர்களில் ஒருவராக இருந்தார், 1961 இல் இந்தியா திரும்பினார்.[6]

தொழில்[தொகு]

1953 ஆம் ஆண்டில், சர்கார் தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவில் கற்பிக்கத் தொடங்கியபோது, அவர் ஆசிரியப் பிரிவில் முதல் பெண் விரிவுரையாளராக இருந்தார். சட்டம் இன்னும் பெண்களுக்கு ஒரு புதிய துறையாக இருந்தது, ஆரம்பத்தில் இந்தப் பாடத்தில் 10 பெண்கள் மட்டுமே இருந்தனர், இது 1960 களில் இந்த எண்ணிக்கை 80-100 ஆக உயர்ந்தது. [3] அவர் 1983 வரை இங்கு கற்பித்தல் பணியினை மேற்கொண்டார், சிறந்த சட்ட நிபுணர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கற்பித்தார், இறுதியாக சட்ட பீடத்தின் தலைவரானார்.

1971 ஆம் ஆண்டில், அவர் இந்தியாவில் பெண்களின் நிலை (CSWI) குழுவின் உறுப்பினரானார், [7] அங்கு அவரது சக ஊழியர் வினா மஜும்தார், 1973 இல் உறுப்பினர் செயலாளராக சேர்ந்தார், [8] செப்டம்பர் 1979 வரை, கவனிக்கப்படாமல் இருந்த மதுரா பாலியல் வல்லுறவு வழக்கு தொடர்பாக, தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் உபேந்திர பாக்சி, ரகுநாத் கேல்கர் மற்றும் சர்க்கார் மற்றும் புனேயின் வசுதா தாகம்வர் ஆகியோர் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு திறந்த கடிதம் எழுதி, தீர்ப்பு பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கு எதிரான தடை மிகவும் வலுவாக உள்ளதா, இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய இந்திய அரசு காவல்துறையினருக்கு உரிமம் அளிக்கிறது. " என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். அதன்பின்னர் 1979 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் ,மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மாற்றி அமைத்தது .மதுரா கற்பழிப்பு வழக்கு, ஒரு காவல் நிலையத்திற்குள் பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இரண்டு காவல் துறையினருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. [9] பின்னர் ஜனவரி 1980 இல் அவர் கற்பழிப்புக்கு எதிரான முதல் பெண்ணியக் குழுவான "கற்பழிப்புக்கு எதிரான மன்றம்" அமைத்தார், பரவலான எதிர்ப்புகள் வந்தன, இறுதியில் இந்திய தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டது. [4] [10] [11]

சான்றுகள்[தொகு]

  1. "Few saw her in last two years". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 January 2009 இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203052252/http://articles.timesofindia.indiatimes.com/2009-01-14/delhi/28027201_1_ips-officer-latika-sarkar-dhaundiyals. 
  2. 2.0 2.1 Indu Agnihotri (18 May 2013). "Remembering Lotika Sarkar (1923–2013)". Economic and Political Weekly. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013.Indu Agnihotri (18 May 2013). "Remembering Lotika Sarkar (1923–2013)". Economic and Political Weekly. Retrieved 3 June 2013.
  3. 3.0 3.1 "In Remembrance: Professor Lotika Sarkar (1923–2013)". Bar and Bench. 8 April 2013. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013."In Remembrance: Professor Lotika Sarkar (1923–2013)". Bar and Bench. 8 April 2013. Retrieved 5 June 2013.
  4. 4.0 4.1 "In memoriam: Lotika Sarkar 1923 – 2013". feministsindia.com. 25 February 2013. பார்க்கப்பட்ட நாள் 4 June 2013."In memoriam: Lotika Sarkar 1923 – 2013". feministsindia.com. 25 February 2013. Retrieved 4 June 2013.
  5. "Latika Sarkar, former head of DU law faculty, no more". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 February 2013 இம் மூலத்தில் இருந்து 15 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130615045446/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-24/delhi/37269789_1_legal-education-social-worker-head-of-du-law. 
  6. 6.0 6.1 "Lawyer Here From India". The Age, Australia. 26 July 1961. https://news.google.com/newspapers?id=s6ZVAAAAIBAJ&pg=7087,3745612&dq=lotika+sarkar&hl=en. 
  7. Agrawal, p. 61
  8. Agrawal, p. 62
  9. Khullar, p. 132
  10. "The Mind And Heart of Lotika Sarkar, Legal Radical, Friend, Feminist". MSN News India. 7 March 2013. Archived from the original on 1 October 2013. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
  11. Indira (20 January 1999). "Slamming the doors of justice on women". http://www.indianexpress.com/Storyold/74290/. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோதிகா_சர்கார்&oldid=3315599" இலிருந்து மீள்விக்கப்பட்டது