லோக் பவன், சில்லாங்
| லோக் பவன், சில்லாங்கு Lok Bhavan, Shillong | |
|---|---|
![]() | |
| பொதுவான தகவல்கள் | |
| ஆள்கூற்று | 25°34′22″N 91°53′19″E / 25.57278°N 91.88861°E |
| தற்போதைய குடியிருப்பாளர் | சி.எச். விசயசங்கர் |
| உரிமையாளர் | மேகாலயா அரசு |
| மேற்கோள்கள் | |
| Website | |
லோக் பவன் (Lok Bhavan, Shillong) இந்தியாவின் மேகாலயா மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வமான இல்லமாகும். முன்னர் இராச்சு பவன் என்றழைக்கப்பட்டது. மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் இந்த இல்லம் அமைந்துள்ளது.[1] இந்த அரசு மாளிகை 1951ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 6ஆம் தேதி இராச்சு பவன் என்று மறுபெயரிடப்பட்டது.[2] தற்போதைய ஆளுநரான சி. எச். விசயசங்கர், சில்லாங்கின் இராச்சு பவனில் தங்கியுள்ளார்.[1]
2024ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மேற்கு காரோ இல்சு பிராந்தியத்தில் அமைந்துள்ள துராவில் இரண்டாவது இராச்சு பவன் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவால் திறந்து வைக்கப்பட்டது.[3]
வரலாறு.
[தொகு]அசாம் வங்காள இரயில்வே நிர்வாக பொறியாளரான டபிள்யூ அருண்டேல் 1898 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு வரைபடத் திட்டத்தை வரைந்த பின்னர் சர் என்றி காட்டன் ஒரு புதிய அரசாங்க வீட்டை புனரமைப்பதற்கான பணிகளுக்கு ஒப்புதல் அளித்தார். புதிய கட்டிடம் பூகம்பத்தை தாங்கக் கூடியதாக முந்தைய இரும்பு நெளிந்த தாள்களைப் போலல்லாமல் மரத்தால் கட்டப்பட்டது. வால்டர் நைட்டிங்கேல் மற்றும் பெர்ரான் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் பொதுப்பணித்துறை ரூபாய் 187,713 செலவில் பணிகளை மேற்கொண்டது. இங்கிலாந்தில் உள்ள ஒரு குடிசை போன்ற பல புதிய மாற்றங்களுடன் கூடிய புதிய கட்டிடம் அக்டோபர் 1903 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.[2]
2005 செப்டம்பரில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம், சில்லாங் பள்ளிக் குழந்தைகளுடன் இராச்சு பவனில் உரையாடி, அவர்களை 10 அம்ச உறுதிமொழி எடுக்கச் செய்தார்.[4]
2025 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று, இராச்சு பவன் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 https://meggovernor.gov.in/
- 1 2 "Raj Bhavan: 118 Years of Grandeur - The Shillong Times". theshillongtimes.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-05. Retrieved 2025-06-11.
- ↑ "Meghalaya gets second Raj Bhavan, to host President Droupadi Murmu during her visit next week". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2025-06-11.
- ↑ https://presidentofindia.nic.in/dr-apj-abdul-kalam/speeches/interaction-shillong-school-children-raj-bhavan-shillong
- ↑ "Raj Bhavan to open to public | Highland Post" (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-01-22. Retrieved 2025-06-11.
