லோக் காவி
லோக் காவி Lok Kawi | |
|---|---|
லோக் காவி கிராமம் (2023) | |
| ஆள்கூறுகள்: 5°51′N 116°03′E / 5.850°N 116.050°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| பிரிவு | மேற்கு கரை பிரிவு |
| மாவட்டம் | பெனாம்பாங் மாவட்டம் |
| நேர வலயம் | மலேசிய நேரம் +8 |
| அஞ்சல் குறியீடு | 88200[1] |
| தொலைபேசி | +60 88-76 |

லோக் காவி (மலாய்; ஆங்கிலம்: Lok Kawi) என்பது மலேசியா, சபா, மேற்கு கரை பிரிவு, பெனாம்பாங் மாவட்டத்தின் நகரம்; மற்றும் துணை மாவட்டமும் ஆகும். மேலும் இந்த நகரம், பெனாம்பாங் மாவட்டம், பாப்பார் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையை ஒட்டியும், சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவிலிருந்து சுமார் 15 கிமீ தெற்கிலும் அமைந்துள்ளது.
அண்மைய காலங்களில் இந்த நகரம், கோத்தா கினபாலுவின் நகர்ப்புற விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. அருகிலுள்ள நகரங்களில் வடக்கே புத்தாத்தான் மற்றும் தெற்கே கினாருட் ஆகியவை அடங்கும்.
வரலாறு
[தொகு]
மலேசிய வரலாற்றின் அடிப்படையில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் பொது மேலாளராகவும் தலைவராகவும் பணியாற்றிய இசுக்கொட்லாந்து பொறியாளரான வில்லியம் கிளார்க் காவி (William Clarke Cowie)[2] என்பவரின் நினைவாக, இப்பகுதியில் இருந்த ஒரு துறைமுகத்திற்கு காவி துறைமுகம் (Cowie Harbour) என்று பெயரிடப்பட்டது.
பின்னர், உள்ளூர் மக்கள் இத்துறைமுகத்தை லோக் காவி என்று அழைக்கத் தொடங்கினர்.[3] (லோக் என்றால் துறைமுகம், காவி என்றால் கோவி/Cowie என்பவரின் பெயரில் இருந்து மருவியது). 1909 ஆம் ஆண்டில், சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் ரப்பர் தோட்டத்தை உருவாக்கிய போது, முதன்முதலில் லோக் காவி என்ற பெயர் முறைப்படி பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இப்பகுதி சிறிய கிராமத்திலிருந்து ஒரு முக்கிய குடியிருப்பு மற்றும் தொழில்துறை நகரமாக வளர்ச்சி பெற்றது.
முக்கிய அடையாளங்கள்
[தொகு]- லோக் காவி காட்டுயிர் பூங்கா: (Lok Kawi Wildlife Park): இது சபா மாநில பூங்காக்கள் துறையினால் (Sabah Parks) நிர்வகிக்கப்படும் ஒரு புகழ்பெற்ற பூங்காவாகும். 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்ட இப்பூங்காவில் விலங்கியல் பிரிவு; தாவரவியல் பிரிவு என இரு பிரிவுகள் உள்ளன. போர்னியோ யானைகள், தும்பிக்கை குரங்குகள், மலாயா புலிகள் மற்றும் பல்வேறு வகையான மான்கள் இங்கு வாழ்கின்றன.
- லோக் காவி இராணுவ முகாம் (Lok Kawi Army Camp): இங்கு மலேசியாவின் 5-வது காலாட்படை பிரிகேட் தலைமையகம் (Markas 5 Briged) அமைந்துள்ளது. இது சபா மேற்கு கடற்கரையின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- செரி சுப்பிரமணியர் ஆலயம்: கோத்தா கினபாலு, லோக் காவி பகுதியில் வசிக்கும் உள்ளூர் இந்து மக்களுக்கான ஒரு முதன்மையான வழிபாட்டுத் தலமாக இந்தக் கோயில் அமைந்துள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ ""Lok Kawi, Kota Kinabalu - Postcode - 88200"". postcode.my. Retrieved 1 August 2026.
- ↑ Owen Rutter (1922). "British North Borneo – An Account of its History, Resources and Native Tribes". Constable & Company Ltd, London. Internet Archive. Retrieved 11 May 2017.
- ↑ "BORNEO: Sunset on the Sulu Sea". Time (magazine). 1 July 1946. Retrieved 11 May 2017.