லோக்ரிஸ்
லோக்ரிஸ்
Λοκρίς | |
---|---|
பண்டைக் கிரேக்க பிராந்தியம் | |
லோக்ரிசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம் | |
அமைவிடம் | நடு கிரேக்கம் |
பெரிய நகரங்கள் | ஆம்பிசா, நவ்ப்பாக்ட்டஸ் |
பேச்சுவழக்கு | டோரிக் கிரேக்கம் |
லோக்ரிஸ் (Locris, /ˈloʊkrɪs, ˈlɒk-/; [1] [2] கிரேக்கம்: Λοκρίδα ; பண்டைக் கிரேக்கம்: Λοκρίς Lokrís ) என்பது பண்டைய கிரேக்கத்தின் ஒரு பகுதியும், லோக்ரியர்களின் தாயகமும் ஆகும். இது மூன்று வெவ்வேறு மாவட்டங்களைக் கொண்டது.
லோக்ரியன் பழங்குடியினர்
[தொகு]கலபிரியாவில் ( இத்தாலி ) உள்ள உலொக்கிரி நகரம் பழங்காலத்தில் "எபிஸ்பிரியன் லோக்ரிஸ்" என்றும் அழைக்கப்பட்டது. இது மாக்னா கிரேசியாவில் லோக்ரியர்களால் நிறுவப்பட்ட ஒரு குடியேற்றமாகும். இதை நிறுவியவர்கள் ஓபன்டியன் லோக்ரியன்களா அல்லது ஓசோலியன் லோக்ரியன்களா என்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.
பண்டைய லோக்ரிஸ்
[தொகு]லோக்ரியர்களின் பிரதேசம் டோரிஸ் மற்றும் போசிசால் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ஒருவேளை லோக்ரியன் மீதான தொடர்ச்சியான துவக்ககால படையெடுப்பின் காரணமாக இவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கலாம். லோக்ரியர்களை அதன் அண்டை நாடுகள் ஆதிக்கம் செலுத்த முனைந்தன. இவர்கள் கிரேக்க வரலாற்றில் சிறிய பங்கைக் கொண்டிருந்தனர்.
போசிசின் தென்மேற்கில் ஓசோலியன் லோக்ரிஸ் பிராந்தியம் இருந்தது, இது கொரிந்து வளைகுடாவின் வடக்கு கடற்கரையில், நௌபாக்டஸ் மற்றும் கிரைசா ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது. ஓசோலியன் லோக்ரிசின் முக்கிய நகரங்களாக ஆம்பிசா, நௌபாக்டஸ் ஆகியவை அதன் துறைமுகங்களாக இருந்தன. போசிசின் வடகிழக்கில் ஓபன்டியன் லோக்ரிஸ் இருந்தது, அதன் முக்கிய மாநகரமான ஓபசின் பெயரிடப்பட்டது. போசிசின் வடக்கே எபிக்னெமிடியன் லோக்ரிஸ், தெர்மோபைலேயின் கணவாய்க்கு அருகில் அமைந்துள்ளது. [3]
ஓபன்டியன் லோக்ரியர் மற்றும் எபிக்னெமிடியன் லோக்ரியர் போன்றோர் பெரும்பாலும் ஒரே மக்களாகக் கருதப்படுகிறார்கள். பழக்கவழக்கங்களில் தனித்தனியானவர்களாக கருதப்படுகின்றன. ஓபன்டியன் லோக்ரிஸ் மற்றும் எபிக்னெமிடியன் லோக்ரிசின் பிரதேசங்கள் ஒரு தொடர்ச்சியான அலகாக இல்லை. அவை போசிசால் பிரிக்கப்பட்டன [4]
ஓசோலியன் லோக்ரிஸ்
[தொகு]ஓசோலியன் லோக்ரிசின் முக்கிய நகரங்கள் ஆம்பிசா, நௌபாக்டஸ் ஆகியவை ஆகும். இன்று, இப்பகுதி கிரேக்கத்தின் பிராந்திய அலகுகளான ஏட்டோலியா-அகார்னானியா, போசிஸின் ஆகியவற்றின் ஒரு பகுதியாக உள்ளன.
ஓபன்டியன் லோக்ரிஸ்
[தொகு]ஓபுன்டியா லோக்ரிசின் முக்கிய நகரங்களாக ஓபஸ், லாரிம்னா போன்றவை இருந்தன. இன்று, ஓபுன்டியா லோக்ரிசானது கிரேக்கத்தின் நவீன பிராந்திய அலகான பிதியோடிசின் பகுதியாக உள்ளது.
எபிக்னெமிடியன் லோக்ரிஸ்
[தொகு]எபிக்னெமிடியன் லோக்ரிசின் முக்கிய நகரங்கள் நைசியா, திரோனியம் ஆகியவை ஆகும். இன்று, எபிக்னெமிடியன் லோக்ரிஸ் நவீன கிரேக்க பிராந்திய அலகான பிதியோடிசின் ஒரு பகுதியாக உள்ளன.
மாகாணம்
[தொகு]லோக்ரிஸ் மாகாணம் ( கிரேக்கம்: Επαρχία Λοκρίδας பிதியோடிஸ் மாகாணத்தின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. அதன் தலைநகராக அட்லாண்டி நகரம் இருந்தது. அந்த பிரதேசம் தற்போதைய நகராட்சிகளான அம்ஃபிக்லியா-எலேடியா, லோக்ரோய், கமேனா வௌர்லாவை கொண்டதாக இருந்தது. [5] இந்த மாகாணம் 2006 இல் ஒழிக்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Locris". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 3 August 2019.
- ↑ [Merriam-Webster Dictionary] Locris
- ↑ José Pascual, Topography and History of Ancient Epicnemidian Locris, Brill Academic Publishers, 2013
- ↑ "Information about the place FTHIOTIDA (Prefecture) GREECE - GTP - Greek Travel Pages".
- ↑ "Detailed census results 1991" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. (39 MB) (in கிரேக்கம் and பிரெஞ்சு மொழி)