லோக்தந்திரிக் ஜனதா தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக்தந்திரிக் ஜனதா தளம்
சுருக்கக்குறிLJD
தலைவர்சரத் யாதவ்
தலைவர்பதேக் சிங்
நிறுவனர்சரத் யாதவ்
தொடக்கம்18 மே 2018 (5 ஆண்டுகள் முன்னர்) (2018-05-18)
கலைப்பு20 மார்ச் 2022
பிரிவுஐக்கிய ஜனதா தளம்
இணைந்ததுஇராச்டிரிய ஜனதா தளம்
தலைமையகம்இ. எண் No. 861 P, பிரிவு-15, பகுதி–II, குருகிராம், குர்கான் மாவட்டம், அரியானா - 122001
இளைஞர் அமைப்புஜனநாயக இளைஞர் ஜனதா தளம்
கொள்கைசமூகவுடைமை[1]
முல்னிவாசிசம்[2]
பகுசனிசம்[3]
அரசியல் நிலைப்பாடுநடுநிலை, இடதுசாரி
இ.தே.ஆ நிலைபதிவு பெற்ற அங்கீகாரமற்ற கட்சி
இணையதளம்
loktantrikjanatadal.org
இந்தியா அரசியல்

லோக்தந்திரிக் ஜனதா தளம் (லோஜத) என்பது இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். இது மே 2018-ல் ஷரத் யாதவ் மற்றும் அலி அன்வர்[4] ஆகியோரால் தேசிய அளவில் தொடங்கப்பட்டது. பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியின் காரணமாக யாதவ் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரிந்து இந்த கட்சி உருவாக்கினார். இக்கட்சி 20 மார்ச் 2022 அன்று இராச்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தது.

பாம்செப்-ன் அரசியல் பிரிவான பகுசன் முக்தி கட்சி லோக்தந்திரிக் ஜனதா தளத்துடன் இணைக்கப்பட்டது.[5][6] பகுஜன் முக்தி கட்சியின் தற்போதைய தலைவராக பிரவேந்திர பிரதாப் சிங் உள்ளார்.[7] வீரேந்திர குமார் தலைமையிலான கேரள ஜனதா தளத்தின் வீரேந்திர குமார் பிரிவும் இக்கட்சியுடன் இணைந்தது.[8] தற்போது இக்கட்சிக்குக் கேரள சட்டமன்றத்தில் 1 பிரதிநிதி உள்ளார்.

2022 மார்ச் 20 அன்று லோக்தந்திரிக் ஜனதா தளம் இராச்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்தது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை முன்வைக்க, முன்னாள் ஜனதா தளம் பிரிவுகள் மற்றும் இதே போன்ற கொள்கைகளைக் கொண்ட பிற கட்சிகளை மீண்டும் இணைக்கும் பணியை சரத் யாதவ் மேற்கொண்டார்.[9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Loktantrik Janata Dal with Sharad Yadav as mentor to be formally launched on May 18" (in en-US). The Financial Express. 16 May 2018. https://www.financialexpress.com/india-news/loktantrik-janata-dal-with-sharad-yadav-as-mentor-to-be-formally-launched-on-may-18/1170134/. 
 2. "What is there in a Name? There is a lot in the Name". velivada. 30 April 2018. பார்க்கப்பட்ட நாள் 3 August 2018.
 3. PTI (16 August 2017). "Sharad Yadav's Show Of Strength With Opposition Parties Tomorrow". NDTV. https://www.ndtv.com/india-news/sharad-yadavs-show-of-strength-with-opposition-parties-tomorrow-1738348. 
 4. "Newly-launched LJD calls Oppn parties to unite against BJP". UNI India. 19 May 2018. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
 5. Muslim Mirror.
 6. Pune Mirror.
 7. The Indian Express.
 8. "JDS approves merger with LJD, discussions to continue". Mathrubhumi. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
 9. PTI (16 March 2022). "Sharad Yadav's Party To Merge With Lalu Yadav's RJD On March 20". NDTV. https://www.ndtv.com/india-news/sharad-yadavs-party-loktantarik-janata-dal-to-merge-with-lalu-yadavs-rjd-on-march-20-2826853. 
 10. "Sharad Yadav's LJD Merges With Lalu Prasad's RJD". The Wire. https://thewire.in/politics/sharad-yadavs-ljd-merges-with-lalu-prasads-rjd. 
 11. "Sharad Yadav's LJD Merges With Lalu Prasad's RJD". The Wire. 20 March 2022. https://thewire.in/politics/sharad-yadavs-ljd-merges-with-lalu-prasads-rjd. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்தந்திரிக்_ஜனதா_தளம்&oldid=3611063" இலிருந்து மீள்விக்கப்பட்டது