லோகேந்திர பகதூர் சந்த்
லோகேந்திர பகதூர் சந்த் | |
---|---|
लोकेन्द्र बहादुर चन्द | |
27வது நேபாள பிரதம அமைச்சர் | |
பதவியில் 11 அக்டோபர் 2002 – சூன், 2003 | |
முன்னையவர் | செர் பகதூர் தேவ்பா |
பின்னவர் | சூரிய பகதூர் தாபா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 15, 1940[1] குர்குடியா கிராமம், பைத்தடி, நேபாளம் |
அரசியல் கட்சி | ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி |
லோகேந்திர பகதூர் சந்த் (Lokendra Bahadur Chand) (நேபாளி: लोकेन्द्र बहादुर चन्द (பிறப்பு:15 பிப்ரவரி 1940), நேபாளத்தின் 27வது பிரதம அமைச்சராக 1983 - 1986, 1970, 1997 மற்றும் 2002 - 2003 ஆகிய காலகட்டங்களில் நான்கு முறை பதவி வகித்தவர்.
இவர் நேபாள மன்னர்களிடம் அதிக பற்று கொண்டவர். முதலிரண்டு முறை நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்த காலத்தில், இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவராக செயல்பட்டார்.
இவர் 1997ல் ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சியின் உறுப்பினரானார். நேபாளி காங்கிரஸ் கட்சியின் பிரதம அமைச்சரான செர் பகதூர் தேவ்பாவின் அமைச்சரவையை, நேபாள மன்னர் பதவி விலக்கிய போது, லோகேந்திர பகதூர் சந்த் 11 அக்டோபர் 2002ல் நேபாள பிரதம அமைச்சராக பொறுப்பேற்றார்.
மாவோயிசவாதிகளால் நடத்தப்பட்ட உள்நாட்டு கலவரத்தால், லோகேந்திர பகதூர் சந்த் விலகினார்.
2008 நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலில், லோகேந்திர பகதூர் சந்த், ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சியின் சார்பாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Group, Gale (1 January 2003). "Worldmark Encyclopedia of the Nations". Gale Group. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016 – via Google Books.
- ↑ "Ca Election report". Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)