லோகம் நாகா மாதவி
Lokam Naga Madhavi | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | Appalanaidu Baddukonda |
தொகுதி | நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1968 (அகவை 56–57) |
அரசியல் கட்சி | ஜனசேனா கட்சி |
லோகம் நாக மாதவி (Lokam Naga Madhavi; பிறப்பு: ஆகத்து 28, 1968) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் விஜயநகர மாவட்டத்தில் உள்ள நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஜனசேனா கட்சியின் சார்பில் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]மாதவி விஜயநகரம் மாவட்டம் நெல்லிமர்லாவில் வசித்து வருகிறார். லோகம் வெங்கட நாகேந்திர வர பிரசாத்தை மணந்த இவருக்கு சாணக்யா, நிகில் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் சொந்தமாகத் தொழில் செய்கிறார். இவர் 1995-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்ட் மாநில பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.[3] இவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மிராக்கிள் மென்பொருள் சிஸ்டம்ஸ் இன்க் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.[4]
அரசியல் வாழ்க்கை
[தொகு]தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜனசேனா கட்சியின் வேட்பாளராக நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாதவி வெற்றி பெற்றார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் பட்டுகொண்டா அப்பளநாயுடுவை 39,829 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] முன்னதாக 2019-ஆம் ஆண்டில், ஜன சேனா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நெல்லிமர்லா தொகுதியில் இவர் தோல்வியடைந்தார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission of India". Election Commission of India. Retrieved 2024-06-04.
- ↑ "Nellimarla Assembly Election Results 2024: Nellimarla Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Lokam Naga Madhavi(Janasena Party):Constituency- NELLIMARLA(VIZIANAGARAM) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-04.
- ↑ "Madhavi Lokam". linkedin.com. Retrieved 6 June 2024.
- ↑ "Nellimarla Constituency Election Results 2024: Nellimarla Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Lokam Naga Madhavi" (in en). https://www.news18.com/elections/andhra-pradesh/lokam-naga-madhavi-assembly-candidate-s01aed2008a017e2024c001/."Lokam Naga Madhavi". www.news18.com. 18 April 2024. Retrieved 4 July 2024.
- ↑ "Pawan Kalyan's Jana Sena releases first list of candidates for Andhra Pradesh elections". https://timesofindia.indiatimes.com/city/amaravati/pawan-kalyans-janasena-releases-first-list-of-candidates-for-ap-elections/articleshow/68403458.cms.