லைபோடிடே
| லைபோடிடே | |
|---|---|
| லைபோடெசு வெக்சிலிபெர் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | சோகு, கியன் & லீ, 1978
|
| பேரினம் | |
|
உரையினைக் காண்க | |
லைபோடிடே (Lipotidae) என்பது சீனாவின் அழிந்துபோன பைஜி மற்றும் வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையின் பிற்பகுதி மியோசீன் மற்றும் பிளியோசீன் காலத்தில் தோன்றிய புதைபடிவ இனமான பரபோன்டோபோரியா ஆகியவற்றைக் கொண்ட நதி ஓங்கில்களின் குடும்பமாகும்.[1][2] சீனாவின் குவாங்சியில் உள்ள நியோஜீன் கடலோர வைப்புகளிலிருந்து ஒரு கீழ் தாடைத் துண்டை அடிப்படையாகக் கொண்ட புரோலிபோட்சு பேரினம்,[3] பைஜியின் அழிந்துபோன உறவினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சந்தேகத்திற்குரியது.[4] இக்குடும்பத்தின் பழமையான சிற்றினம் சப்பானில் மியோசீன் பிற்பகுதியினைச் சேர்ந்த இயோலிபோட்சு ஆகும்.[5]
லைபோடிடே குடும்பத்தில் சமீப காலம் வரை செழித்து வளர்ந்த ஒரே சிற்றினம் பைஜி (லைபோடசு வெக்சிலிஃபர்) ஆகும். இது யாங்சே ஆற்றில் வாழ்கிறது. ஆனால் சீனாவில் தொழில்துறை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டதன் காரணமாக 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.[6]
கென்ட்ரியோடோன்டிட் "லோபோசெட்டசு பப்பசு" என்பது லைபோடிடேயின் சாத்தியமான உறவினராகும்.[7]
பேரினங்களும் சிற்றினங்களும்
[தொகு]†(?) லைபோடெசு †(?) லை. வெக்சிலிபர் † பரபோன்டோபோரியா † பா. பசிஃபிகா † பா. இசுடெர்ன்பெர்கி † பா. வில்சோனி † புரோலிபோட்டுசு † பு. யுஜியான்ஜென்சிசு † இயோலிபோட்சு † இ. ஜபோனிகசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Barnes, L.G., 1984. Fossil odontocetes (Mammalia: Cetacea) from the Almejas Formation, Isla Cedros, Mexico. PaleoBios 42:1-46
- ↑ L. G. Barnes. 1985. Fossil pontoporiid dolphins (Mammalia: Cetacea) from the Pacific Coast of North America. Contributions in Science 363:1-34.
- ↑ K. Zhou, M. Zhou, and Z. Zhao. 1984. First discovery of a Tertiary platanistoid fossil from Asia. Scientific Reports of the Whales Research Institute 35:173-181.
- ↑ N. D. Pyenson. 2009. Requiem for Lipotes: An evolutionary perspective on marine mammal extinction. Marine Mammal Evolution 25(3):714-724
- ↑ Kimura, T.; Hasegawa, Y. (2024). "New Fossil Lipotid (Cetacea, Delphinida) from the Upper Miocene of Japan". Paleontological Research 28 (4): 1–23. doi:10.2517/PR220027.
- ↑ United States, National Marine Fisheries Service, Office of Protected Resources; Baiji/Chinese River Dolphin/Yangtze River dolphin (Lipotes vexillifer) 5-year review : summary and evaluation; 2017 https://repository.library.noaa.gov/view/noaa/16394
- ↑ Olivier Lambert, Giovanni Bianucci, Mario Urbina, Jonathan H. Geisler; A new inioid (Cetacea, Odontoceti, Delphinida) from the Miocene of Peru and the origin of modern dolphin and porpoise families. Zool J Linn Soc 2017; 179 (4): 919-946. doi: 10.1111/zoj.12479. https://academic.oup.com/zoolinnean/article/179/4/919/3076080/A-new-inioid-Cetacea-Odontoceti-Delphinida-from?guestAccessKey=3b956b95-d215-488a-8d90-1cff59554290#63703008