உள்ளடக்கத்துக்குச் செல்

லே தியபோலீக் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Les diaboliques
இயக்கம்Henri-Georges Clouzot
தயாரிப்புHenri-Georges Clouzot
மூலக்கதைShe Who Was No More
படைத்தவர் Boileau-Narcejac
திரைக்கதைHenri-Georges Clouzot
Jérôme Géronimi
இசைGeorges Van Parys
நடிப்புSimone Signoret
Véra Clouzot
Paul Meurisse
Charles Vanel
ஒளிப்பதிவுArmand Thirard
படத்தொகுப்புMadeleine Gug
விநியோகம்Cinédis (France)
UMPO (US)
Gala Film Dists. (UK)[1]
வெளியீடுசனவரி 29, 1955 (1955-01-29)(France)
21 நவம்பர் 1955 (US)
ஓட்டம்114 minutes[2]
107 minutes (US, 1955)[3]
நாடுFrance
மொழிFrench

லே தியபோலீக் என்பது 1955ல் என்றி ஜோர்ஜ் குளூசே என்பவரால் இயக்கப்பட்ட உளவியல் சார்ந்த திரைப்படமாகும். சிமோன் சிங்னோரே, வேரா குளூசோ, போல் முரீஸ் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரமேற்று நடித்திருந்தனர். இத்திரைப்படம் பியெர்ரே புவாளூ மற்றும் தோமா நார்செஜா ஆகியோரால் எழுதப்பட்ட Celle quin'était எனும் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

இத்திரைப்படத்தின் கதை திகில் கதையம்சத்தை கொண்டது. இக்கதையில் ஒரு பெண் தனது கணவனைக் கொல்ல தனது தோழியுடன் சேர்ந்து திட்டம் போடுகிறாள்; கொலை நடந்த பின் கணவனின் உடல் காணாமல் போகிறது; அதன் பின் நடக்கும் விசித்திர சம்பவங்களே மீதி கதை ஆகும். இத்திரைப்படம் 1955ல் அதிக வசூல் புரிந்த திரைப்படங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. 3,674,380 அனுமதி சீட்டுகள் இத் திரைப்படத்துக்கு விற்பனை ஆகியிருந்தன.[4]

இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக் Celle quin'était புதினத்தின் உரிமைகளை பெறுவதற்கு முன், Wages of Fear திரைப்படத்தை இயக்கி முடித்த குளூசோ இப் புதினத்தின் திரைக்கதை உரிமைகளை பெறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டார். இத்திரைப்படமே இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ( Psycho) திரைப்படத்துக்கு உந்துதலாக இருந்துள்ளது.

கதை

[தொகு]

(எச்சரிக்கை: முழுக்கதையும் உள்ளது.) மிக்கேல் டிலாசால் என்பவர் பாரீஸ் நகரில் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவர் மிகவும் கண்டிப்பும் கடுமையும் உடையவர்[5].எனினும் அப்பள்ளியின் உரிமையாளர் வெனிசுவேலாவிலிருந்து குடிபெயர்ந்த கிறிஸ்டினா ஆவார். இவர் டிலாசாலின் மனைவியும் அந்த பள்ளிக்கூடத்தின் ஆசிரியையுமாவார். டிலசால் அந்த பள்ளியின் இன்னுமொரு ஆசிரியை நிக்கோல் ஓர்னருடன் முறைகேடான உறவு வைத்துள்ளார். எனினும் ஆசிரியை இருவரும் நெருங்கிய நட்புறவையே பேணி வந்தனர். பள்ளி குழந்தைகளிடமும் ஆசியர்களிடமும் கடுமையாக நடந்து கொள்வதால் டிலாசாலை இவ்விரு ஆசிரியைகளும் வெறுத்தனர்.

ஒரு நிலையில் டிலாசாலின் கொடுமைகளைப் பொறுக்க முடியாத நிக்கோல் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறாள். ஆரம்பத்தில் இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்தாலும் இறுதியில் கிறிஸ்டினா சம்மதம் தெரிவிக்கிறாள். விவாகரத்து செய்யப் போவதாக மிரட்டி கிறிஸ்டினா பள்ளியிலிருந்து பல கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள நிக்கோலின் வீட்டிற்கு டிலாசாலை வரவழைக்கிறாள். பின் இரு பெண்களும் அவரை குளியல்த்தொட்டியில் அமிழ்த்தி கொல்கின்றனர். பின்பு விபத்து போல் தெரிவதற்காக உடலை பள்ளிக்கு கடத்தி சென்று, பள்ளியின் வளாகத்திலுள்ள ஒரு கைவிடப்பட்ட நீச்சல் தடாகத்தில் போட்டு விடுகின்றனர். மறுநாள் நீச்சல் தடாகத்திலிருந்து உடல் காணாமல் போகிறது.

பொலீஸார் ஒரு பிணத்தை கண்டு பிடித்ததாக பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தியை கண்டு கிறிஸ்டினா பிணவறைக்கு செல்கிறாள். பின்னர் அது டிலாசாலின் உடல் அல்ல என்று தெரிந்து கொள்கிறாள். அங்கு அவள் துப்பறிவாளர் அல்பிரட்டை எதிபாராமல் சந்திக்கிறாள். அவர் அவளின் கணவனை கண்டுபிடித்து தருவதாக வலுக்கட்டாயமாக கூறுகிறார்.

பின் பள்ளியில் ஒரு சிறுவன் அதிபர் டிலாசாலை பார்த்ததாக கூறுகிறான். இது கிறிஸ்டினாவுக்கு அச்சத்தையும் மன உளைச்சளையும் தருகிறது. நிக்கோல் கிறிஸ்டினாவுடனான சிறு வாக்கு வாதத்தை அடுத்து பள்ளியை விட்டு வெளியேறுகிறாள்.

மன உளைச்சலுக்கு ஆளான கிறிஸ்டினா உண்மை அனைத்தையும் துப்பறிவாளர் அல்பிர்ட்டிடம் தெரிவிக்கிறாள். எனினும் இதை நம்ப மறுக்கும் அல்பிரட் அந்த பள்ளியை சுற்றி ஆராய்கிறார். அன்றிரவு கிறிஸ்டினா விசித்திரமான சத்தம் எழுவதை கேட்டு பள்ளியை சுற்றி வருகிறாள். பின் தன்னை யாரோ ஒருவர் பின் தொடர்வதை அறிந்து தனது அறைக்குள் ஓடி ஒளிகிறாள். அங்கு அவளின் குளியல் தொட்டியில் டிலாசாலின் உடலை கண்டு அலறுகிறாள். பின் அந்த உடல் குளியல் தொட்டியை விட்டு எழுகிறது. இதய நோயாளியான கிறிஸ்டினா இதை கண்டு மாரடைப்பால் இறந்து போகிறாள். பிறகு இது கிறிஸ்டினாவின் பள்ளியை அடைய டிலாசால் மற்றும் நிக்கோலின் திட்டமென்று தெரிய வருகிறது. இருவரும் கிறிஸ்டினாவின் அறையிலிருந்து வெளியேறும் போது அல்பிரட்டால் கைது செய்யப்படுகிறார்கள்.

பின்னர் டிலாசாலை பார்த்ததாக ஏற்கனவே கூறிய சிறுவன் இம்முறை கிறிஸ்டினாவை பார்த்தாக கூறுகிறான். இறுதியாக இத்திரைப்படத்தின் கதையை வெளிப்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தலுடன் திரைப்படம் நிறைவடைகிறது.

நடிகர்கள்

[தொகு]
  • நிக்கோல் ஓனராக சிமோன் சினோரே
  • கிறிஸ்டினா டிலாசாலாக வேரா குளூசோ
  • மிக்கேல் டிலாசாலாக போல் முரீஸ்
  • அல்பிரட் பிஷேவாக சார்ல் வனெல்
  • பிளான்டிவூவாக ஜீன் புரோஷா
  • டிரைனாக பியெர்ரெ லாக்கே

விமர்சனங்கள்

[தொகு]

ரோட்டன் டொமேல்லோஸ் இணைய தளத்தால் இத்திரைப்படத்திற்கு 97% மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Fiends (Les Diaboliques)". British Film Institute. Archived from the original on 24 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 20 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Schneider 2007, ப. 71.
  3. Crowther, Bosley (22 November 1955). "Diabolique". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 20 February 2018.
  4. "Les Diaboliques (1955)". JPBox Office. Depuis Juillet. 1998. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.
  5. Wood, Michael (2011-03-03). At the Movies. 33. London Review of Books. p. 23. https://www.lrb.co.uk/v33/n05/michael-wood/at-the-movies. பார்த்த நாள்: 2018-06-06. 
  6. Diabolique (Les Diaboliques) (1954) at rottentomatoes.com
  7. Diabolique > Awards at allmovie.com