லேயர்டு பனை அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேயர்டு பனை அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சையூரிடே
பேரினம்: பன்னாம்புலசு
இனம்: ப. லேயர்டி
இருசொற் பெயரீடு
பன்னாம்புலசு லேயர்டி
பிளைத், 1837
துணையினம்[2]
  • ப. லே. லேயர்டி
  • ப. லே. திராவியானசு (?)
  • ப. லே. சிக்னேடசு
வேறு பெயர்கள்

பன்னாம்புலசு லேயர்டி இராபின்சன், 1917
சையூரசு லேயர்டி பிளைத், 1849
தேமோயிடிசு லேயர்டி பிலிப்சு, 1935 துணையினம் லேயர்டி
தேமோயிடிசு லேயர்டி பிலிப்சு, 1935 துணையினம் சிக்னேடசு

லேயர்டு பனை அணில் (Layard's palm squirrel) அல்லது சுடர்-கோட்டு வன அணில் (பன்னாம்புலசு லேயர்டி) என்பது இலங்கையில் காணப்படும் சையூரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறித்துண்ணியாகும். இதன் துணையினமாக ப. லே. திராவிடியனுசு இந்தியாவின் தென்முனையில் காணப்பட்ட ஒரு ஒற்றை மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.[3] சந்தேகத்திற்குட்பட்ட இந்த துணையினம் இளம் ப. சப்லினேட்டசு ஆக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.[1] இந்த அணிலானது சிங்களத்தில் மூகலன் லேனா என அறியப்படுகிறது.

பரவல்[தொகு]

இது இலங்கையின் மத்திய மலைநாடுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். திருகோணமலை மற்றும் மாத்தறை மாவட்டங்கள் போன்ற மத்திய மலைப்பகுதிகளிலிருந்து சில அவதானிப்புகள் அறியப்படுகின்றன. ஆனால் இது தீர்க்கப்படாமல் உள்ளது. மத்திய மலைகளின் மேற்குப் படுகையில் உள்ள நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் பிற உயரமான மலைத்தொடர்களில் இதைக் காணலாம்.

விளக்கம்[தொகு]

இதன் தலை முதல் உடல் வரையிலான நீளம் 12 முதல் 17 செ. மீ. ஆகும். இதனுடைய வால் 14 செ. மீ. நீளம் கொண்டது. இதன் முதுகில் கருப்பு கலந்த பழுப்பு நிறத்தில் மூன்று கோடுகள் உள்ளன. மத்திய பட்டையானது ப. சிக்னேட்டசில் ஆரஞ்சு நிறத்துடன், ப. லேயர்டியில் மஞ்சள் நிறத்துடன் அகலமாகவும் நீளமாகவும் காணப்படும். இதன் அடிப்பகுதி சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. மேலும் இதன் மூக்கு சிறியது.[4] வால் புதர் மற்றும் கருப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் சிறிது சிவப்பு நிறத்துடன் இருக்கும். முடி மென்மையானது, குறுகியது மற்றும் அடர்த்தியானது.[5]

வாழிடமும் சூழலும்[தொகு]

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் அல்லது மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இந்த பேரினத்தின் அணில்களைப் போல இது பகலாடி வகையினைச் சார்ந்ததாகும் இந்த சிற்றினம் பகல் நேரத்தில் இரை தேடுகிறது. இவை காடுகளில் விதான மட்டத்தில் காணப்படுகின்றன, காடுகளின் தரைப்பகுதியில் சிறிது நேரம் செலவிடுகின்றன.

இந்த சிறிய உயிரினத்தின் முக்கிய திங்குயிரியாக பாம்பு, பருந்து, புனுகுப்பூனை மற்றும் சிறிய பூனைகள் உள்ளன. கீரி தரை தளத்தில் இறங்கும் அணில்களை வேட்டையாடலாம்.

உணவு[தொகு]

மற்ற அணில்களைப் போலல்லாமல், இவை அனைத்துண்ணிகளாகும். இவை பழங்கள், இளம் தளிர்கள், கொட்டைகள் மற்றும் தாவர வகை உணவுகள் குறைவாக இருக்கும்போது பூச்சிகளை உண்ணும்.

இனப்பெருக்கம்[தொகு]

இவை இணைகளாக இறக்கும் வரை வாழ்கின்றன. இவை வன விதானத்தில் புல், இலைகள் மற்றும் நார் தாவர பாகங்களைப் பயன்படுத்தி கூடுகள் கட்டுகின்றன. சுமார் 3 குட்டிகள் வரை ஈனும். இனப்பெருக்க காலம் மழைக்காலத்தினைப் பொறுத்து மாறுபடும்.[5]

பாதுகாப்பு[தொகு]

இவை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. பிடிப்பது மற்றும் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மரம் வெட்டுதல் மற்றும் வாழ்விட அழிவு ஆகிய காரணங்கள் இவற்றின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேயர்டு_பனை_அணில்&oldid=3600379" இருந்து மீள்விக்கப்பட்டது