லேடென்ட்வியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
LatentView Analytics Corporation
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை2006
நிறுவனர்(கள்)வெங்கட் விஸ்வநாதன்
ரமேஷ் ஹரிஹரன்
பிரமாத் ஜன்த்யாலயா
தலைமையகம்சென்னை, இந்தியா
அமைவிட எண்ணிக்கை5
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுதும்
முதன்மை நபர்கள்வெங்கட் விஸ்வநாதன்,நிறுவனர் மற்றும் தலைவர்
கோபி கோடீஷ்வரன், தலைமை நிர்வாக அதிகாரி
தொழில்துறைதரவு பகுப்பாய்வு
இணையத்தளம்www.latentview.com

லேடென்ட்வியூ (LatentView) என்பது ஒரு தரவு பகுப்பாய்வு மற்றும் தரவு மேலாண்மை நிறுவனம். இது பெரும்பாலும் நிதி சேவைகள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனை துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பகுப்பாய்வு தீர்வுகளை வழங்குகிறது. இந்நிறுவனம், இந்தியாவில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும் 5 அலுவலகங்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ளது.

நிறுவனம்[தொகு]

லேடென்ட்வியூ நிறுவனம், வெங்கட் விஸ்வநாதன், பிரமாத் ஜன்த்யாலயா மற்றும் ரமேஷ் ஹரிஹரன் ஆகியோர்களால் 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது, 'லேடென்ட்வியூ' பிரின்ஸ்டன், சான் ஜோஸ், சிங்கப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் உள்ளது. அதன் பூகோள விநியோக மையம் சென்னையில் உள்ளது. விநியோக மையம் மற்றும் தலைமையகமாக செயல்படும் சென்னை நிறுவனம் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், வளரும் மாதிரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பயன்பாடுகளை ஆதரிக்கின்றன.

அங்கீகாரங்கள்[தொகு]

2008 ஆம் ஆண்டில், 'லேடென்ட்வியூ' நிறுவனம் இன்ஃபார்ம்ஸ் டேட்டா மைனிங் போட்டியில் வெற்றியாளர்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. இப்போட்டியானது செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை அறிவியல் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில், 'லெடென்ட் வீயு' டெலாய்ட் நிறுவனத்தால், இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 50 தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளது. நிறுவனம் ஏப்ரல் 2010இல் ஐதராபாதில் நடைபெற்ற PAKDD 2010 பசிபிக்-ஆசியா மாநாட்டில் அறிவு கண்டுபிடிப்பு மற்றும் டேட்டா மைனிங் போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளரென தெரிவு செய்யப்பட்டது. 2009 இல் தாய்லாந்தில் நடந்த அறிவு கண்டுபிடிப்பு மற்றும் டேட்டா மைனிங் பசிபிக்-ஆசியா மாநாட்டில், இதே போட்டியில், 'லேடென்ட்வியூ' முதல் 10 அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடென்ட்வியூ&oldid=3371974" இலிருந்து மீள்விக்கப்பட்டது