உள்ளடக்கத்துக்குச் செல்

லேடி ஐதரி மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீமாட்டி ஐதரி மன்றம் (Lady Hydari Club) என்பது இந்தியாவின் முந்தைய ஐதராபாத்து மாநிலத்தில் பெண்களுக்கு மட்டுமேயான ஒரு உயர்மட்ட மன்றம் ஆகும். இது பசீர் பாக் அருகே இப்போது பழைய காந்தி மருத்துவக் கல்லூரி இருக்கும் இடத்தில் அமைந்திருந்தது.[1]

வரலாறு

[தொகு]

பெண்கள் வாிப்பந்தாட்டம் விளையாடுவதற்கும்[2] மற்றும் சமூகமயமாவதற்கும் 1929ஆம் ஆண்டில் பெண்மணி அமீனா ஐதரியால் இந்த மன்றம் தொடங்கப்பட்டது. 1938-42 வரை நிசாமின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்த சர் அக்பர் ஐதரியின் மனைவி பெண்மணி அமீனா ஐதரியின் நினைவாக இந்தக் மன்றத்திற்குப் பெயரிடப்பட்டது. இது உயர்குடி இந்திய மற்றும் பிரித்தானிய பெண்களாலும், 1901இல் நிறுவப்பட்ட ஐதராபாத் து மகளிர் சங்கக் கழகத்தாலும் பயன்படுத்தப்பட்டது.[3]

1952ஆம் ஆண்டில் இந்த மன்றத்தில் சமூக சேவகர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் பேச்சாளர்களில் ஒருவராக எலினார் ரூசுவெல்ட் இருந்தார்.

மன்றம்

[தொகு]

இந்தக் கட்டிடம் சைன் யார் சங் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இதில் ஒரு சிறப்பு நுழைவாயில் இருந்தது, இதன் வழியாக முக்காடிட்ட பெண்கள் (ஜெனானா) மகிழுந்தில் அழைத்து வரப்பட்டு, யாரும் பார்க்காதவாறு உள்ளே நுழைய முடிந்தது.[3] பெரிய நுழைவு முகப்பு அறைகள் மற்றும் கூடங்களுக்கு வழிவிட்டது. பெண்கள் தம்போலா, சீட்டுக்கட்டு அல்லது பூப்பந்து விளையாடலாம் அல்லது சமையல் அல்லது தையல் கலையில் பாடம் கற்கலாம். இந்த மன்றம் பெண்களுக்காக ஆண்டுதோறும் ஒரு வரிப்பந்தாட்டப் போட்டியை ஏற்பாடு செய்து வந்தது. ஒரு காலத்தில் இந்த மன்றம் திருமணங்களுக்கான நாகரிகமான இடமாக இருந்தது. இந்த மன்றம் இப்பகுதியின் ஏழைகளுக்காக ஒரு பள்ளியை நடத்தியது, மேலும் இதில் உருது, தெலுங்கு மற்றும் ஆங்கிலப் புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகமும் இருந்தது.[1]

தற்போது

[தொகு]

1986 ஆம் ஆண்டில் காந்தி மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக மன்றக் கட்டிடம் இணைக்கப்பட்டது.[3] இந்த மன்றம் பயன்படுத்திய இடம் மிகவும் ஆடம்பரமாக இருப்பதாக கல்லூரி கருதியது. மேலும் கல்லூரி இதைப் பயன்படுத்த அனுமதிக்க மன்றம் கடமைப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் மன்றத்தில் 120 உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் இதன் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன.[1]

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்

[தொகு]
  • ஐதராபாத்து மாநிலப் பிரதமர் சர் அக்பர் ஐதரியின் மனைவி அமினா ஐதரி
  • நிசாம் மிர் உசுமான் அலி கானின் மகனான மொஅசாம் சாவை மணந்த உதுமானிய இளவரசி நிலுஃபர் அனிம்சுல்தான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Rangan, Pavithra S. "Lady Hydari Club yearns for past glory" (in en). The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/lady-hydari-club-yearns-for-past-glory/article2157791.ece.
  2. "I've always struggled with my relationship with my father: Aditi – Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Ive-always-struggled-with-my-relationship-with-my-father-Aditi/articleshow/18627876.cms.
  3. 1 2 3 Kumar, Sanjeeva. "Lady Hydari Club". Retrieved 19 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடி_ஐதரி_மன்றம்&oldid=4519596" இலிருந்து மீள்விக்கப்பட்டது