லேசர் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிளாஸ்டிக், கனிமங்கள், மரம் மற்றும் துணி தொடர்பானவற்றில் தொழில் முறையிலும் மனிதன் விலங்குகளைப் பொருத்த அளவில் நோய்க்கான சிகிச்சை என்ற அளவிலும் லேசர் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேசர் ஆற்றல் எந்தப் பொருளில் இருந்து வெளிப்படுகிறது என்பதைப் பொருத்தும் வெளிப்படுத்தப்படும் அலை வரிசைக்கேற்பவும் வகைப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக கார்பன்-டை-ஆக்ஸைடு வளிம லேசர், ஆர்கான் லேசர், என்டியோக் லேசர் கருவியின் செயல் திறன் அது வெளிபடுத்தும் சக்தியின் அடர்த்தி அலைவரிசை மற்றும் கண்ணாடிகளின் தன்மைக்கேற்ப மாறுபடும்.

இதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றையின் வெப்பம் திசுக்களை அழிக்கவும் வீக்கமுறவும் செய்கிறது. லேசரைக் கொண்டு குறிபாக புற்று நோய்க்கான செல்களை மட்டும் ஊடுகதிர் சிகிச்சை முறைப்படியும் அழிக்க முடியும். இந்த முறையில் சுமார் 1000 புற்று நோயாளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையானது அறுவை, ஊடுகதிர் மற்றும் வேதி மருத்துவம் போன்றவற்றைவிட சிறந்ததாகக் கருதப்படுகிறது. இரத்தக் குழாயில் உள்ள இரத்த படிவுகளை இம்முறைப்படி அகற்றுவது குறைந்த செலவில் முடியும். கண்புரை அகற்றும் அறுவையின்போதும் அதன் பின் புற உறையை வெட்டித் திறக்கவும் இந்த சிகிச்சை துணை செய்கிறது. ஆனால் ஒளிக்கதிர் அறுவை மருத்துவர் பார்வையாளர், நோயாளி முதலியவர்களுக்கு பாதுகாப்பு குறைய நேர்ந்தால் மிக எளிதில் கேடு உண்டாகும். எளிதில் தீப்பற்றும் தன்மையும் இந்த முறையில் உள்ளது. இக்குறைகளை மெல்ல மெல்ல களையப்பட வேண்டும்.[1]

  1. அறிவியல் களஞ்சியம் - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 344 - தொகுதி 18 - பக்கம் 299. [[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேசர்_மருத்துவம்&oldid=3601393" இலிருந்து மீள்விக்கப்பட்டது