லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லே அல்லது லெஹ் (Leh) என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உள்ள பெரிய நகரம். லே நகரம் அதன் பெயரில் அமைந்துள்ள லே மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். 45,110 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாவட்டமாக லே மாவட்டம் விளங்குகிறது. இங்குள்ள லே மாளிகை முன்பு லடாக் அரச குடும்பத்தின் இருப்பிடமாக இருந்துவந்தது. லே கடல்மட்டத்திலிருந்து 3524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 1டி லே நகரத்தை ஸ்ரீநகருடன் இணைக்கிறது. சிந்து ஆறு லே நகருக்கு அண்மையில் பாய்கிறது.

லேவுக்கு அருகில் உள்ள சிந்து பள்ளத்தாக்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லே&oldid=2226304" இருந்து மீள்விக்கப்பட்டது