லெவ் வைகாட்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெவ் வைகாட்ஸ்கி

பிறப்பு (1896-11-17)நவம்பர் 17, 1896
ஒர்சா, உருசியப் பேரரசு, தற்போது பெலருசியாவில் உள்ளது
இறப்புசூன் 11, 1934(1934-06-11) (அகவை 37)
மாஸ்கோ, சோவியத் யூனியன்
Alma materமாஸ்கோ பல்கலைக்கழகம்
சானியாவ்ஸ்கி மாஸ்கோ நகர மக்களின் பல்கலைக்கழகம்
அறியப்பட்டதுகலாச்சார - வரலாற்று உளவியல், புதிய அறிவை உருவாக்குவதற்கான இடம்

லெவ் செமையோனோவிச் வைகாட்ஸ்கி (Lev Semyonovich Vygotsky) (உருசியம்: Лев Семёнович Выго́тский, பஒஅ[vɨˈɡotskʲɪj]); (நவம்பர் 17 – சூன் 11, 1934) சோவியத் நாட்டைச் சார்ந்த உளவியலாளர் ஆவார். இவர் மனித கலாச்சார மற்றும் உயிரிய - சமூக வளர்ச்சி (பொதுவாக கலாச்சார-வரலாற்று உளவியல் என அழைக்கப்படுவது) என்ற முடிக்கப்படாத கோட்பாட்டின் நிறுவனரும் மற்றும் மாமனிதனின் உளவியல் என்ற உணர்வு நிலை தொடர்பான கருத்தியலின் முன்னணி ஆதரவாளரும் வைகாட்ஸ்கி குழுவின் தலைவரும் ஆவார்.

வைகோட்ஸ்கியின் முக்கியப் பணியானது அபிவிருத்தி உளவியல் பிரிவில் இருந்தது. மேலும், சமூக உளவியல் சூழலில், தனிப்பட்ட மனித உறவுகள் மற்றும் செயல்களால் மனித உளவியல் வளர்ச்சியானது மேம்பட்டது என்பதை உணர்ந்திருந்தார். "உயர் நிலை உளவியல் செயல்பாடுகளை" உருவாக்கும் ஒரு கோட்பாட்டை அவர் முன்வைத்தார். அவரது வாழ்வின் தொடக்க கால எந்திரவியல் மற்றும் குறைப்புவாத கருவிசார் உளவியல் காலத்தில் (1920 கள்) அவர் மனித உளவியல் வளர்ச்சியானது, மனித உழைப்பு மற்றும் தொழில் துறையில் கருவிகளின் பயன்பாட்டிற்குச் சமானமான வெளிப்பாடுகளால் வளர்த்தெடுக்கப்படுவதாக வாதிட்டார். பின்னர், அவரது தொழில் வாழ்வின் "முழுதளாவியக்" கால கட்டத்தில் (1930 களின் முதல் அரைப்பகுதி), செருமானிய அமெரிக்க முழுக்காட்சி உளவியலாளர்களின் முறையான சிந்தனைப் போக்கினால் வெகுவாகத் தாக்கத்திற்குள்ளாகினார்.  இந்தக் காலகட்டத்தில்தான் அவர் கர்ட் லெவினின் "தளக் கோட்பாட்டினால்"—தாக்கத்திற்குள்ளாகி "புதிய அறிவை உருவாக்குவதற்கான இடம்" என்ற கோட்பாட்டை அறிமுகப் படுத்தினார். பின்னர் இந்தக் கோட்பாடு கற்பித்தல் படிநிலை வளர்ச்சி மாதிரியின் வளர்ச்சியில் மிகுந்த பயனளிப்பதாக இருந்தது. மேலும் அவர் இளங்குழந்தைகளின் விளையாட்டினை அவர்களின் வழி நடத்தும் செயல்பாடாக அடையாளம் கண்டார். விளையாட்டானது பள்ளி முன் பருவத்தினரின் மனவெழுச்சி, இயற்றி நிலை, அறிவுசார்ந்த வளர்ச்சியின் முதன்மையான மூலமாக இருப்பதைப் புரிந்து கொண்டார். இருப்பினும், மரியா மாண்ட்டிசோரி அம்மையார் இவரது பிறப்பிற்கு முன்னதாகவே இதே கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது வாழ்நாளில், வைகாட்ஸ்கியின் கருத்துக்கள் சோவியத் ஒன்றியத்திலேயே சர்ச்சைக்குள்ளாயின. 1920 களின் மத்தியில் வைகாட்ஸ்கி மேற்கில் அறிமுகப்படுத்தப்பட்டார், அங்கு 1980 களின் முற்பகுதி வரை அவர் அறியப்படாதவராக இருந்தார். கல்வியாளர்களிடையே ஜீன் பியாஜேயின் (1896-1980) இன் அபிவிருத்தி உளவியலின் செல்வாக்கு சரியத் தொடங்கி, அதற்கு மாறாக, "புதிய அறிவு உருவாவதற்கான இடம்" என்ற வைகாட்ஸ்கியின் கருத்து மேம்பாட்டு மற்றும் கல்வி உளவியல் புதிய தத்துவங்களின் வளர்ச்சிக்கு முக்கிய மையமாக ஆனது. 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொது உளவியல் பார்வை என்ற இதழால் நடத்தப்பட்ட ஆய்வில், 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 உளவியலாளர்களின் பட்டியலில் பாவ்லவ் மற்றும் அலெக்சாண்டர் லூரியா ஆகியோருக்கு அடுத்தபடியாக 83 வது நிலையப் பிடித்த மூன்றாவது மற்றும் இறுதி உருசிய உளவியலாளராக இவர் இருக்கிறார்.[1]

21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், வைகாட்ஸ்கியின் பிரபலமான அறிவுசார் கருத்துக்கள் அறிஞர்களால் மறுமதிப்பீட்டிற்குட்படுத்தப்பட்டது. (சில சமயங்களில் "வைகோட்ஸ்கியைச் சுற்றியுள்ள ஆளுமைச் சித்தாந்தம்" எனப்படுகிறது) இந்தப் பணியானது "வைகாட்ஸ்கியின் ஆய்வியலில் திருத்தப்பட்ட புரட்சி" எனக் குறிப்பிடப்படுகிறது..[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Haggbloom, Steven J.; et al., Renee; Warnick, Jason E.; Jones, Vinessa K.; Yarbrough, Gary L.; Russell, Tenea M.; Borecky, Chris M.; McGahhey, Reagan et al. (2002). "The 100 most eminent psychologists of the 20th century". Review of General Psychology 6 (2): 139–152. doi:10.1037/1089-2680.6.2.139. http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx. 
  2. Yasnitsky, A. & van der Veer, R. (Eds.) (2015). Revisionist Revolution in Vygotsky Studies. London and New York: Routledge
  3. Yasnitsky, A., van der Veer, R., Aguilar, E. & García, L.N. (Eds.) (2016). Vygotski revisitado: una historia crítica de su contexto y legado பரணிடப்பட்டது 2018-08-17 at the வந்தவழி இயந்திரம். Buenos Aires: Miño y Dávila Editores
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவ்_வைகாட்ஸ்கி&oldid=3371961" இலிருந்து மீள்விக்கப்பட்டது