உள்ளடக்கத்துக்குச் செல்

லெவி முவனவாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெவி பட்ரிக் முவனவாசா
Levy Patrick Mwanawasa
மார்ச் 16, 2006 இல் முவனவாசா
சாம்பியாவின் அதிபர்
பதவியில்
ஜனவரி 2, 2002 – ஆகஸ்ட் 19, 2008
Vice Presidentஎனோக் கவிண்டேல்
நெவேர்ஸ் மும்பா
லுப்பாண்டோ முவாப்பே
ரூப்பையா பண்டா
முன்னையவர்பிரெடெரிக் சிலூபா
பின்னவர்ரூப்பையா பண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-09-03)3 செப்டம்பர் 1948
வடக்கு ரொடீசியா
இறப்புஆகத்து 19, 2008(2008-08-19) (அகவை 59)
பாரிஸ், பிரான்ஸ்
அரசியல் கட்சிபலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்
துணைவர்மோரீன் முவனவாசா
தொழில்வக்கீல்

லெவி பாட்ரிக் முவனவாசா (Levy Patrick Mwanawasa, செப்டம்பர் 3, 1948ஆகஸ்ட் 19, 2008)[1] சாம்பியாவின் ஓர் அரசியல்வாதி. இவர் சாம்பியாவின் சனாதிபதியாக ஜனவரி 2002 முதல் ஆகஸ்ட் 2008 இல் இறக்கும் வரை இருந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

வடக்கு ரொடீசியாவில் பிறந்த முவனவாசா குடும்பத்தில் 10 பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர். சாம்பியாப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்று 1974 முதல் 1978 வரையில் சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார். 1985 இல் சாம்பிய அரசில் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். 1991 இல் நாட்டின் உதவி சனாதிபதியானார். டிசம்பர் 8, 1991 இல் சாலை விபத்தொன்றில் இவர் படுகாயமடைந்தார்.

அரசியல்

[தொகு]

1994 வரை நாட்டின் உதவி சனாதிபதியாகப் பணியாற்றினார். 1996 இல் பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2001 இல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனவரி 2, 2002 இல் நாட்டின் ஜனாதிபதியானார்[2]. 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் தடவையாக சனாதிபதியானார்[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BBC NEWS - Zambia's president dies in France". Page last updated at 12:15 GMT, Tuesday, 19 August 2008 13:15 UK. பார்க்கப்பட்ட நாள் 2008-08-19. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Zambia's Fourth Democratic Elections: A Country of Minority Governments--By Tiens Kahenya, UPND Secretary General". Archived from the original on 2008-06-14. பார்க்கப்பட்ட நாள் 2008-08-20.
  3. Joseph J. Schatz, "Mwanawasa Sworn in As Zambia President", Associated Press, October 3, 2006.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவி_முவனவாசா&oldid=3570318" இலிருந்து மீள்விக்கப்பட்டது