உள்ளடக்கத்துக்குச் செல்

லெவிஸ் கோம்பெர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெவிஸ் கோம்பெர்ட்ஸ்
விலங்குகளுக்கான ஆதரவில் சிதறல்கள் (Fragments in Defence of Animals) என்ற 1852-ம் ஆண்டு புத்தகத்தில் காணப்படும் கோம்பெர்ட்ஸின் படம்
பிறப்பு1783/4
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு(1861-12-02)2 திசம்பர் 1861 (aged 77)
கென்னிங்டன், இலண்டன், இங்கிலாந்து
பணி
  • மெய்யியலாளர்
  • எழுத்தாளர்
  • கண்டுபிடிப்பாளர்
  • சமூக சீர்திருத்தவாதி
செயற்பாட்டுக்
காலம்
அண். 1814–1852
அறியப்படுவதுவிலங்குகளுக்கான தார்மீக முக்கியத்துவம் மற்றும் நனிசைவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Moral Inquiries on the Situation of Man and of Brutes (1824)
வாழ்க்கைத்
துணை
ஆன் ஹோல்லாமேன்
(தி. 1809; இற. 1847)
உறவினர்கள்

லெவிஸ் கோம்பெர்ட்ஸ் (Lewis Gompertz) (1783/4 – 2 டிசம்பர் 1861) ஒரு ஆங்கிலேயத் மெய்யியலாளரும், எழுத்தாளரும், கண்டுபிடிப்பாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் விலங்குகளுக்கு தார்மீக முக்கியத்துவம் அளித்தல், ஆரம்பகால நனிசைவ வாழ்க்கை முறை, மற்றும் விலங்குச் சுரண்டலுக்கு எதிராகக் குரலெழுப்புதல் ஆகியவற்றில் முன்னோடியாகச் செயல்பட்டதற்காக மிகவும் அறியப்படுபவர் ஆவார். இன்று RSPCA என்றழைக்கப்படும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், பின்னர் விலங்குகள் மீதான ஒரு விரிவான தார்மீக நிலைப்பாட்டை மக்களிடையே ஊக்குவிப்பதற்காக 'விலங்குகளின் நண்பர்கள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவியவர்.[1] 1824-ம் ஆண்டு இவர் வெளியிட்ட நூலான 'மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நிலை குறித்த தார்மீக அலசல்கள்' என்ற படைப்பு விலங்குகள் பயன்பாடு குறித்து முன்வைக்கப்பட்ட முறையான விமர்சனங்களில் முன்னோடியாகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றி சமூக சீர்திருத்தங்களுக்கான மெய்யியல் வாதங்களையும் முன்மொழிந்தது. இவர் பெண்ணுரிமை, அடிமைத்தனத்திற்கு எதிர்த்தல், மற்றும் ஏழைகளின் நலன் உள்ளிட்ட பிற சமூகப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தார்.[1] தனது சமூகச் செயல்பாடுகளுக்கு மேலதிகமாக, கோம்பெர்ட்ஸ் ஒரு திறமையான இயந்திரக் கண்டுபிடிப்பாளராகவும் விளங்கினார். விலங்குகளின் உழைப்பிற்கு மாற்றுகளை உருவாக்கும் முயற்சிகளில் தனது கண்டுபிடிப்புத் திறனைப் பயன்படுத்தினார்.[2](pp14–15)

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Wolf, Lucien (2004). "Gompertz, Lewis (1783/4–1861), animal rights campaigner and inventor". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/10934.  (Subscription or UK public library membership required.)
  2. Singer, Peter (1992). Foreword. Moral Inquiries on the Situation of Man and of Brutes. By Gompertz, Lewis. Singer, Peter (ed.). (in ஆங்கிலம்). Fontwell: Centaur Press. ISBN 978-0-900001-37-6.

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவிஸ்_கோம்பெர்ட்ஸ்&oldid=4422175" இலிருந்து மீள்விக்கப்பட்டது