லெவிட்சுகி எதிர் மார்சல்
லெவிட்சுகி எதிர் மார்சல் (Levitsky versus Marshall) சதுரங்கப் போட்டியில் நிகழ்ந்த ஆட்டம் ஒரு பிரபலமான சதுரங்க ஆட்டமாகக் கருதப்படுகிறது. மேற்கு போலந்தில் தற்போது விராத்கிளாவ் என்று அழைக்கப்படும் நகரத்தில் சிடீபன் லெவிட்சுகியும் பிராங் மார்சலும் 1912 ஆம் ஆண்டு சூலை 20 அன்று இப்போட்டியில் விளையாடினர் [1]. டி.எசு.பி. காங்கிரசு அமைப்பு நடத்திய மாசுட்டர்கள் சதுரங்கப் போட்டியில் இவர்களுக்கிடையான இந்தப் போட்டி நிகழ்ந்தது. அந்த ஆட்டத்தில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த மார்சலின் கடைசி நகர்வு குறித்த பல புராணக் கதைகள் தோன்றின. பார்வையாளர்கள் இவர்கள் விளையாடிய சதுரங்கப் பலகையின் மீது தங்க நானயங்களை அள்ளித் தூவினர்.[2][3]. இந்நிகழ்வும் கூட பிற போட்டிகளுக்கு ஒரு போட்டியாகவும் அமைந்தது. இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் அமெரிக்கன் அழகு என்றும் வர்ணிக்கப்படுகிறது.
ஆட்டத் தொகுப்பு
[தொகு]பிரெஞ்சு தற்காப்பு திறப்புடன் ஆட்டம் தொடங்குகிறது. லெவிட்சுகி சில பொருத்தமற்ற நகர்வுகளை நகர்த்தி மிகப்பெரிய தவறை செய்கின்றார். இதனால் மார்சலுக்கு ஒரு காய் அதிகமாகக் கிடைக்கிறது. பதில் தாக்குதல் தொடுக்க லெவிட்சுகி பலவாறாக முயற்சிக்கின்றார்[4]. ஆனால் அதிக ஆற்றல் கொண்ட தன்னுடைய ராணியை மூன்று வெள்ளைக் காய்களால் கைப்பற்ற இயலக்கூடிய ஒரு சதுரத்திற்கு நகர்த்தி மார்சல் எதிர்பாராத ஒரு வெற்றிக்கான நகர்வை விளையாடுகிறார். இந்த நகர்வே தங்க மழையைப் பொழியச் செய்த நகர்வு என புராணங்கள் கூறுகின்றன [2].
தங்க மழை
[தொகு]மார்சலுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த ராணியின் நகர்வு தங்க மழையைப் பெற்றுக் கொடுத்ததா என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. லெவிட்சுகிக்கு எதிராக தான் பெற்ற வெற்றிக்கு தங்க நாணயங்களை பார்வையாளர்களை எறியச் சொல்லி மார்சலே வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது[5]. ஆனால் மார்சலின் மனைவி கரோலின் அப்படியேதும் நடக்கவில்லை என்று மறுப்பதாக அனைத்துலக சதுரங்க மாசுட்டர் இசுரேல் ஓரோவிட்சு தெரிவித்தார்[6][7]. [2]
ஆட்டம்
[தொகு]வெள்ளை: சிடீபன் லெவிட்சுகி கருப்பு: பிராங் மார்சல் சதுரங்கத் திறப்பு: பிரஞ்சு தற்காப்பு இ.சி.ஓ: சி10 போட்டி: டி.எசு.பி. காங்கிரசு XVIII மாசுட்டர்கள் போட்டி 1912[3]
1. d4 e6 2. e4 d5 3. Nc3 c5 4. Nf3 Nc6 5. exd5 exd5 6. Be2 Nf6 7. 0-0 Be7
- கருப்பு மந்திரியை மீண்டும் நகர்த்த வைக்க வேண்டும் என எண்ணுகிறார் வெவிட்சுகி [3]
8. Bg5 0-0 9. dxc5 Be6 10. Nd4 Bxc5 11. Nxe6
- பீட் தம்பூரோ இந்த நதர்வை தீவிரமாக விமர்சித்துள்ளார். இங்கு மந்திரிக்காக குதிரை பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது. இது பிஷப்பின் குதிரைகளை பரிமாறிக் கொள்கிறது, தனது அரசர் பகுதியில் ஒரு திறந்த வரிசை கிடைக்கிறது என்றும் மேலும் e5 சதுரத்தை அச்சுறுத்தும் ஓர் அழகான மையம் தனக்கு கிடைத்தது என்றும் பின்னர் மார்சல் தெரிவித்தார்[3].
11... fxe6 12. Bg4 Qd6 13. Bh3 Rae8 14. Qd2 Bb4
- வெள்ளை ராணிக்கும் குதிரைக்கும் இடையில் ஒரு செருகியாக கருப்பு தன்னுடைய மந்திரியை நிறுத்துகிறார்.
15. Bxf6 Rxf6 16. Rad1 Qc5
- Increasing the pressure on c3 இன் மீது மேலும் அழுத்தத்தை மார்சல் உருவாக்குகிறார். கருப்பு 17...Bxc3 18.Qxc3 Qxc3 என அச்சுறுத்துவதாகவும் c- வரிசை சிப்பாய்கள் இரட்டையாவதால் தனக்கு இறுதியாட்டத்தில் இழப்பு உண்டாகும் என்றும் அவர் தெரிவிக்கிறார். எனவே தன்னுடைய ராணியை மேலும் ஆற்றலுள்ள ஒரு சதுரத்திற்கு [17.Qe2] நகர்த்த முடிவெடுக்கிறார்[4]
17. Qe2 Bxc3 18. bxc3 Qxc3
- கருப்புக்கு கூடுதலாக ஒரு சிப்பாய் கிடைக்கிறது.
19. Rxd5
- வெள்ளை இழந்த சிப்பாய்க்கு சம்மாக ஒரு சிப்பாயை கைப்பற்றுகிறது. ஏனெனில் e- சிப்பாயால் யானையைக் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. ஒருவேளை 19...exd5?? என கைப்பற்றினால்: 20.Qxe8+ Rf8 21.Be6+ Kh8 22.Qxf8# என்ற போக்கில் ஆட்டம் தொடர்ந்து கருப்புக்கு தோல்வி ஏற்பட்டுவிடும்.
19... Nd4 20. Qh5
- இதைவிட வெள்ளை 20.Qe4 என விளையாடியிருக்கலாம். 20 …. Rf4 21.Qe5 h6.[4]
20... Ref8
- மார்சல் f- வரிசையில் தனது யானைகளை இரட்டை ஆக்குகிறார். ஏனெனில் சிப்பாயின் மீதிருந்த 21...exd5. செருகி விலகிவிட்டது. மேலும் இவர் 21...Rxf2 என்றும் அச்சுறுத்துகிறார். ஏனெனில் 22.Rxf2?? என்றால் 22...Qe1+ 23.Rf1 Qxf1# என கருப்பால் விளையாட முடியும்.
21. Re5
- லெவிட்சுகி தன்னுடைய யானையை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துகிறார். e1 சதுரத்தையும் பாதுகாக்கிறார். ஆனால் பீட் தம்புரோ 21...Rxf2 நகர்த்த வாய்ப்பு இன்னும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஏனெனில் 22.Rxf2 22...Qa1+. மார்சல் விளையாடுவதற்கு நல்ல நகர்வுகள் இருப்பில் உள்ளன.[4]
21... Rh6 22. Qg5
- ராணியை அப்படி நகர்த்தி g2 சிப்பாய்க்கு மிகை பாரம் ஏற்றுகிறார். அது குதிரையின் 22...Nf3+ நகர்வையும் காக்க வேண்டும் மந்திரியையும் காக்க வேண்டும். எனவே மார்சலுக்கு அடுத்த நகர்த்தலில் ஒரு காய் அதிகமாக கிடைக்கிறது.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
22... Rxh3! 23. Rc5 (படம்) 23... Qg3!!
சில நேரங்களில் ஒரு நகர்த்தல் தங்க நகர்வு மழை என்று அழைக்கப்படும் நகர்வாக அமைந்துவிடுகிறது. சிலர் இதுபோன்ற நகர்வை "!!! மூன்று ஆச்சரியக்குறிகளால் வெளிப்படுத்துவார்கள். டிம் கிராபே எல்லா காலத்திலும் இதுவே மூன்றாவது மிகச்சிறந்த நகர்த்தல் என்று தெரிவிக்கிறார்[8]. கருப்பு தன்னுடைய ராணியினை நகர்த்தி வைக்கும் இடம் வெள்ளையின் ராணி மற்றும் இரண்டு சிப்பாய்களால் எளிதாக்க் கைப்பற்றக் கூடிய இடமாகும். கருப்பு Qxh2 # என அச்சுறுத்துகிறது. ஆனால் கருப்பு ராணியை கைப்பற்றும் அனைத்து மூன்று வழிகளும் , மற்றும் பிற தப்பிக்கும் முயற்சிகளும் இறுதியில் வெள்ளைக்கு அதே தோல்வியைத் தரும் நகர்த்தல்களாகவே முடிகின்றன.
- f1 வெள்ளை யானை எங்கு நகர்த்தினாலும் 24...Qxh2+ 25.Kf1 Qh1# ;
- 24.f4 (அல்லது 24.f3) Ne2+ 25.Kh1 Qxh2# ;
- 24.hxg3 Ne2# ;
- 24.fxg3 Ne2+ 25.Kh1 Rxf1# பின் வரிசை இறுதி முடிவு;
- 24.Qxg3 Ne2+ 25.Kh1 Nxg3+ 26.Kg1 (ஒருவேளை 26.fxg3 Rxf1#) Nxf1 27.gxh3 Nd2, மற்றும் கருப்பு ஒரு கூடுதல் காய் பலத்துடன் விளையாடும்.
0–1 லெவிட்சுகி தோல்விக்கு ஒப்புக் கொள்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ChessGames 1912
- ↑ 2.0 2.1 2.2 Schiller 2006, ப. 237
- ↑ 3.0 3.1 3.2 3.3 Tamburro 2008, ப. 10
- ↑ 4.0 4.1 4.2 4.3 Tamburro 2008, ப. 11
- ↑ Winter 2012
- ↑ Horowitz 1971, ப. 62–63
- ↑ Eade 2005, ப. 17–32
- ↑ Krabbé 1998, ப. 11
நூற்பட்டியல்
- Eade, James (2005), Chess For Dummies, Wiley Publishing, inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-01695-4, பார்க்கப்பட்ட நாள் January 2, 2012
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Horowitz, I. A. (1971), All About Chess, Collier Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-554110-8
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Schiller, Eric (2006), The Big Book of Chess, Cardoza Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58042-133-4
{{citation}}
: Invalid|ref=harv
(help) - Tamburro, Pete (June 2008), "At the Movies", Chess Life For Kids, United States Chess Federation, பார்க்கப்பட்ட நாள் January 2, 2012
{{citation}}
: Invalid|ref=harv
(help) - "Stefan Levitsky vs Frank James Marshall (1912) "American Beauty"". ChessGames. பார்க்கப்பட்ட நாள் January 2, 2012.
- Winter, Edward (January 1, 2012). "Marshall's 'Gold Coins' Game by Edward Winter". பார்க்கப்பட்ட நாள் January 2, 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Krabbé, Tim (November 20, 1998). "The 110 Most Fantastic Moves Ever Played, part 11: The top ten". பார்க்கப்பட்ட நாள் January 2, 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)