லெபனான் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெபனான்
לבנון
Lebanon
எபிரேய மொழிக்கான திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சாமுவேல் மாவோஸ்
தயாரிப்புஉரி சபக்
எய்னட் பிகெல்
கதைசாமுவேல் மாவோஸ்
இசைஅலெக் கிளவுட், டேவிட் லிஸ்
நடிப்புஓஸ்கிரி கொகென்
இட்டாய் டிரான்
ஒளிப்பதிவுகியோரா பிஜாச்
படத்தொகுப்புஅரிக் லெய்போவிட்ச்
விநியோகம்சொனி பிக்சர்ஸ் கிளசிக்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 2009 (2009-09)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுஇசுரேல்
மொழிஎபிரேயம்
அராபி

லெபனான் (எபிரேயம்: לבנון) என்பது சாமுவேல் மாவோசினால் இயக்கப்பட்ட இசுரேலிய போர்த் திரைப்படம். இது தங்கச் சிங்கம் பரிசை 66வது வென்ஸ் பன்னாட்டு திரைப்பட விழாவில் வென்று,[1] அப்பரிசினைப் பெற்ற முதலாவது இசுரேலிய தயாரிப்பு திரைப்படம் என்ற மதிப்பைப் பெற்றறது. இது இசுரேலில் சில கருத்து மாறுபாடுகளை உருவாக்கியது.[2] இத்திரைப்படம் சிறந்த படம் உட்பட்ட 10 ஒபிர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது 14வது வருடாந்த சட்யஜித ரே விருதை வென்றது.[3]

மாவோஸ் 1982 லெபனான் போரில் இள வயது இசுரேலிய படைவீரராக தான் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து இதனை உருவாக்கினார்.[4][5] இது ஒரு போர் எதிர்ப்புத் திரைப்படமென பிரித்தானிய செய்தித்தாளான காடியன் தெரிவித்தது.[2]

குறிப்புக்கள்[தொகு]

  1. "66th Venice International Film Festival: Official Awards". labiennale.org. 2009-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-09-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Jason Solomons (2009-09-12). "Colin Firth wins best actor at Venice film festival". London: தி கார்டியன். http://www.guardian.co.uk/film/2009/sep/12/colin-firth-venice-film-festival. பார்த்த நாள்: 2009-09-13. 
  3. "The 2009 Satyajit Ray Award Winner: Lebanon". BFI. 2010-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-18 அன்று பார்க்கப்பட்டது.
  4. "'Lebanon' wins Golden Lion at Venice". RTÉ. 2009-09-12. 2009-09-13 அன்று பார்க்கப்பட்டது.
  5. Erlanger, Stephen (July 30, 2010), "'Lebanon', Samuel Maoz's Tank's-Eye View of War", த நியூயார்க் டைம்ஸ், August 3, 2010 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]