லென் அட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லென் ஹட்டன்
லென் அட்டன் Hutton.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் லென் ஹட்டன்
பிறப்பு சூன் 23, 1916(1916-06-23)
இங்கிலாந்து
இறப்பு 6 செப்டம்பர் 1990(1990-09-06) (அகவை 74)
இங்கிலாந்து
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 603) சூன் 26, 1937: எ நியூசிலாந்து
கடைசித் தேர்வு மார்ச்சு 25, 1955: எ நியூசிலாந்து
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 79 513
ஓட்டங்கள் 6971 40140
துடுப்பாட்ட சராசரி 56.67 55.51
100கள்/50கள் 19/33 129/179
அதியுயர் புள்ளி 364 364
பந்துவீச்சுகள் 260 9740
விக்கெட்டுகள் 3 173
பந்துவீச்சு சராசரி 77.33 29.51
5 விக்/இன்னிங்ஸ் 4
10 விக்/ஆட்டம் 1
சிறந்த பந்துவீச்சு 1/2 6/76
பிடிகள்/ஸ்டம்புகள் 57/– 401/–

ஆகத்து 14, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com

லென் ஹட்டன் (Len Hutton,12.06.1903, யோர்க்சயர், இங்கிலாந்து - (06.09.1990) துடுப்பாட்ட வீரர் ஆவார்.

இங்கிலாந்து அணி சார்பாக 1937 இல் நியூசிலாந்துக்கு எதிராக தன் முதல் ரெஸ்ட் போட்டியை லோர்ட்ஸ் ஆடுகளத்தில் விளையாடிய ஹட்டன் பெற்ற ஓட்டங்கள் வெறும் 0 மற்றும் 1. அடுத்த போட்டியில் தன் முதல் சத்தைப் பெற்றார். அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 1938 இல் ஓவல் மைதானத்தில் டொன் பிரட்மன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 13 மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 364 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தில் ஆடிய அவுஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 579 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ரெஸ்ட் வரலாற்றில் இன்று வரை மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.

போரில் காயம்[தொகு]

இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஹட்டன் காயமடைந்தார். சத்திரசிகிச்சை காரணமாக அவரது இடது கை வலது கையை விடச் சற்றுக் கட்டையானதாகியது. ஆயினும் போர் முடிந்தபின் ஹட்டன் மீண்டும் விளையாடத் தொடங்கினார். 1950 இல் ஓவல் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளிற்கெதிராக ஆட்டமிழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்றார். 1952 இல் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்ற போது ஹட்டன் இங்கிலாந்து அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அணித்தலைமைப் பொறுப்பேற்ற முதல் தொழில்முறை வீரர் ஹட்டன் தான்.

1958 இல் ஹட்டனுக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது.

ரெஸ்ட் போட்டிகளில்[தொகு]

  • போட்டிகள் - 79
  • ஓட்டங்கள் - 6971
  • சராசரி - 56.67
  • சதங்கள் - 19
  • சராசரி - 3
  • விக்கெட்டுக்கள் - 3
  • சராசரி - 77.33
  • பிடிகள் - 57
"https://ta.wikipedia.org/w/index.php?title=லென்_அட்டன்&oldid=2261080" இருந்து மீள்விக்கப்பட்டது