லெனக்ஸ் லூயிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெனக்ஸ் கிளாடியஸ் லூயிஸ்
(2010)
பிறப்பு(1965-09-02)செப்டம்பர் 2, 1965
லண்டன்
தேசியம்கனடா
பணிகுத்து சண்டை வீரர்

லெனக்ஸ் கிளாடியஸ் லூயிஸ் (ஆங்கிலம்:Lennox Claudius Lewis) என்பவர் ஒரு ஓய்வுபெற்ற குத்துச்சண்டை வீரர் ஆவார். உலகில் முண்ணணி வீரர்களையும் 'நாக் அவுட்' முறையில் வெற்றி கண்ட இவர் குத்துச்சண்டையின் மிகுஎடை(heavyweight) பிரிவில் சமீபத்திய மறுப்பீடில்லா உலக வெற்றியாளராவார்(Undisputed world champion).

பிறப்பு மற்றும் வளர்ப்பு[தொகு]

லெனக்ஸ் லண்டன் நகரில் பிறந்தவர். பன்னிரண்டு வயதில் இவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. இதனால் இவர் இரு நாட்டின் குடியுரிமையும் வைத்துள்ளார். பள்ளி பருவங்களில் கால்பந்து மற்றும் கூடை பந்தில் மட்டுமே ஆர்வம் காட்டினார். 1983-இல் ஜுனியர் குத்து சண்டை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு குத்து சண்டையில் கவனம் செலுத்தினார். பின் 1992-இல் டோனோவன் ரோட்டக்கை வீழ்த்தி உலகின் முதல் நிலை வீரரானார்.

வெற்றிகள்[தொகு]

இதுவரை பங்கேற்ற 44 போட்டிகளில் இரண்டில் தோல்வியை தழுவியுள்ளார், ஒன்று டிரா ஆனது, மீதி நாற்பத்து ஓரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அதில் 32 நாக் அவுட் முறையில் வென்றதாகும். 1988 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார். 1999 இங்கிலாந்து அரசின் பர்சனாலிட்டி விருதையும் வென்றுள்ளார். 86-ம் ஆண்டு காமன்வெல்திலும் தங்கம் வென்றுள்ளார். 1985 உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

11-10-2013 தினத்தந்தி சிறுவர் தங்க மலர் இதழ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெனக்ஸ்_லூயிஸ்&oldid=3063324" இலிருந்து மீள்விக்கப்பட்டது