லெத்திரைனைடீ
லெத்திரைனைடீ | |
---|---|
லெத்திரினசு மினியேட்டசு (Lethrinus miniatus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | லெத்திரைனைடீ
|
துணைக் குடும்பங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
லெத்திரைனைடீ (Lethrinidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும்.
இவை பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. லெத்திரனசு அத்திலாந்திக்கசு என்னும் இனம் கிழக்கு அத்திலாந்திக் பகுதியில் காணப்படுகின்றது. இவை நீரடித் தளத்தில் வாழும் முதுகெலும்பிலிகள், சிறிய மீன்கள் என்பவற்றை உணவாகக் கொள்கின்றன. இவற்றில் சில இனங்களுக்கு கடைவாய்ப்பல்லுருப் பற்கள் அமைந்துள்ளன. ஓடுகளைக் கொண்ட மெல்லுடலிகள், நண்டு போன்றவற்றை உண்பதற்கு இவை பயன்படுகின்றன.
வகைப்பாடு
[தொகு]"லெத்திரைனைடீ" குடும்பம் லெத்திரினைனீ, மானோட்டக்சினீ என்னும் இரண்டு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லெத்திரனைனீ துணைக் குடும்பத்தில் ஒரு பேரினமும், மானோடக்சினீ துணைக் குடும்பத்தில் நான்கு பேரினங்களும் உள்ளன. இவற்றுள் மொத்தமாக 38 இனங்கள் அடங்கியுள்ளன.
இனங்கள்
[தொகு]- துணைக்குடும்பம் லெத்திரினைனீ
- பேரினம் லெத்திரினசு (Lethrinus)குவியர், 1829
- லெத்திரினசு ஆம்போய்னென்சிசு (Lethrinus amboinensis)பிளீக்கர், 1854.
- லெத்திரினசு அட்கின்சோனி (Lethrinus atkinsoni)சீலே, 1910.
- லெத்திரினசு அத்லாந்திக்கசு (Lethrinus atlanticus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு பார்பானிக்கசு (Lethrinus borbonicus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு கொன்சிலியாட்டசு (Lethrinus conchyliatus)(சிமித், 1959).
- லெத்திரினசு குரோசினியசு (Lethrinus crocineus)சிமித், 1959.
- லெத்திரினசு எனிக்மட்டிக்கசு (Lethrinus enigmaticus)சிமித், 1959.
- லெத்திரினசு எரித்ராகாந்தசு (Lethrinus erythracanthus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு எரித்ரோடேரசு (Lethrinus erythropterus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு யெனிவிட்டேட்டசு (Lethrinus genivittatus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு ஈமட்டோடேரசு (Lethrinus haematopterus)தெமிங்க்கும் சிலெகலும், 1844.
- லெத்திரினசு ஆராக் (Lethrinus harak)(ஃபோர்சுக்கல், 1775).
- லெத்திரினசு லட்டிக்கோடிசு (Lethrinus laticaudis)அலெய்னேயும் மக்லியேயும், 1877.
- லெத்திரினசு லென்யான் (Lethrinus lentjan)(லாசெப்பேடே, 1802).
- லெத்திரினசு மாசேனா (Lethrinus mahsena)(ஃபோர்சுக்கல், 1775).
- லெத்திரினசு மைக்குரோடன் (Lethrinus microdon)(ஃபோர்சுக்கல், 1851).
- லெத்திரினசு மினியேட்டசு (Lethrinus miniatus)(ஃபோர்ஸ்டர், 1801).
- லெத்திரினசு நெபுலோசசு (Lethrinus nebulosus)(ஃபோர்சுக்கல், 1775).
- லெத்திரினசு ஆப்சோலெட்டசு (Lethrinus obsoletus)(ஃபோர்சுக்கல், 1775).
- லெத்திரினசு ஆலிவேசியசு (Lethrinus olivaceus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு ஆர்னேட்டசு (Lethrinus ornatus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு பங்சுலேட்டசு ()Macleay, 1878.
- லெத்திரினசு ரேவசு (Lethrinus ravus)கார்ப்பெண்டரும் ராண்டாலும், 2003.
- லெத்திரினசு ரெட்டிகுலாட்டசு (Lethrinus reticulatus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு ருப்ரியோபேர்குலாட்டசு (Lethrinus rubrioperculatus)சாட்டோ, 1978.
- லெத்திரினசு செமிசிங்டசு (Lethrinus semicinctus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு வேரிகேட்டசு (Lethrinus variegatus)வலன்சியென்னசு, 1830.
- லெத்திரினசு சந்தோச்சிலசு (Lethrinus xanthochilus)குளுன்சிங்கர், 1870.
- பேரினம் லெத்திரினசு (Lethrinus)குவியர், 1829
- துணைக்குடும்பம் மானோட்டக்சினீ
- பேரினம் கினாத்தோடென்டெக்சு (Gnathodentex)பிளீக்கர், 1873
- கினாத்தோடென்டெக்சு aureolineatus (Gnathodentex aureolineatus)(லாசெப்பேடே, 1802).
- பேரினம் யிம்னோகிரேனியசு (Gymnocranius)குளுன்சிங்கர், 1870
- யிம்னோகிரேனியசு ஆட்லேயி (Gymnocranius audleyi)ஒகிபி, 1916.
- யிம்னோகிரேனியசு இலோங்கேட்டசு (Gymnocranius elongatus)சென்ட்டா, 1973.
- யிம்னோகிரேனியசு இயுவானசு (Gymnocranius euanus)(கியூந்தர், 1879).
- யிம்னோகிரேனியசு பிரெனேட்டசு (Gymnocranius frenatus)பிளீக்கர், 1873.
- யிம்னோகிரேனியசு கிராண்டோகுலிசு (Gymnocranius grandoculis)(வலன்சியென்னசு, 1830).
- யிம்னோகிரேனியசு கிரிசேயசு (Gymnocranius griseus)(தெமிங்க்கும் சிலெகலும், 1843).
- யிம்னோகிரேனியசு மைக்குரோடன் (Gymnocranius microdon)(பிளீக்கர், 1851).
- பேரினம் மானோட்டக்சிசு (Monotaxis)பெனெட், 1830
- மானோட்டக்சிசு கிராண்டோகுலிசு (Monotaxis grandoculis)(வலன்சியென்னசு, 1830).
- பேரினம் வாட்சியா (Wattsia)சானும் சில்வர்சும், 1974
- வாட்சியா மொசாம்பிக்கா (Wattsia mossambica)(சிமித், 1957).
- பேரினம் கினாத்தோடென்டெக்சு (Gnathodentex)பிளீக்கர், 1873
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)