லெட் ஹெர் பிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லெட் ஹெர் பிளை: எ பாதர்சு ஜர்னி அண்ட் தெ பிளைட் பார் ஈக்குவாலிட்டி (Let Her Fly: A Father's Journey and the Fight for Equality) என்பது சியாசுதீன் யூசிப்சையின் சுயசரிதை ஆகும். இது 2018 ஆம் ஆண்டில் வெளியானது. இவர் பாக்கித்தானிய பெண் கல்வி ஆர்வலரான மலாலா யூசுப்சையின் தந்தை ஆவார்.பாக்கித்தானில் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், அவரது மகள் மலாலா தலிபான்களால் சுடப்படுவதற்கு முன்னும் பின்னும் அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் ஒரு சகோதரர், கணவர் மற்றும் தந்தை என்ற அவரது அணுகுமுறைகள் ஆகியவற்றை இந்த நூல் விவரிக்கிறது.

பின்னணி[தொகு]

சியாசுதீன் யூசுப்சை ஒரு பாக்கித்தான் கல்வி ஆர்வலர். அவருக்கு மூன்று குழந்தைகள், இரண்டு மகன்கள் - குசால் மற்றும் அடல் மற்றும் ஒரு மகள் - மலாலா யூசுப்சை . பிபிசி உருதுவுக்காக ஒரு அநாமதேய வலைப்பதிவை எழுதினார். நியூயார்க் டைம்ஸ் ஆவணப்படமான கிளாசு டிசுமிசுடுவிற்குப் பிறகு , மலாலா பெண் கல்விக்கான ஆதரவாகவும், தலிபான்களின் வரர்ந்து வரும் செல்வாக்கின் கீழ் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி பேசவும் ஒரு பொது சுயவிவரத்தைப் பெறத் தொடங்கினார். .[1][2][3][4] அவருடைய தந்தையைப் போலவே அவருக்கும் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின, 9 அக்டோபர் 2012 அன்று, மலாலா பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது, தாலிபான் உறுப்பினரால் சுடப்பட்டார்..[5][6] அவரது தொடர்ச்சியான செயல்பாடுகள், 2014 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதன் மூலம் மிக இளம் வயதில் நோபல் பரிசை வென்றவர் எனும் பெருமை பெற்றார்.இவர் தனது 17ஆம் வயதில் இந்த விருதினைப் பெற்றார்.[7] 2013 ஆம் ஆண்டில், யூசுப்சை கிறிஸ்டினா லாம்ப் உடன் நான் மலாலா என்ற நினைவுக் குறிப்பை எழுதினார்.[8]

சியாவுதீன் யூசுப்சை, ஐ எம் மலாலா நூல்" மகளின் தந்தையாக இருக்கும் ஒரு பகுதியினை விளக்குகுறது" மற்றும் லெட் ஹெர் பிளை என்பது தங்களது வாழ்க்கையின் மற்ற பகுதிகளை "ஐந்து பள்ளி செல்லா பெண் சகோதரிகளுடன் பிறந்தவர் தனது மனைவியின் கணவனாக, இரு மகன்களின் தந்தையாக இருந்ததனைப் பற்றி விளக்குவதாக" அமைந்திருக்கும். "ஒரு ஆணாதிக்க சமுதாயத்தின் உறுப்பினர்" என்பதிலிருந்து தனது தற்போதைய நிலையின் ஒரு "மாற்றத்தை" எவ்வாறு அடைந்தோம் என்பதனை அவர் விவரித்தார்.[9] "உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பறக்கட்டும்" எனும் அர்த்தத்தில் தலைப்பு வைக்கப்பட்டதாக யூசுப்சை கூறினார்.[10] ஒரு வெற்றிகரமான மகளை வரர்க்க அவர் என்ன செய்தார் என்ற பொதுவான கேள்விக்கான அவரது பதிலில் இருந்து இது உருவானது: "நான் என்ன செய்யவில்லை என்று கேளுங்கள். நான் அவரது சிறகுகளை வெட்டவில்லை. நான் அவராக இருக்க அனுமதித்தேன் ".[11][12] இந்த புத்தகம் 8 நவம்பர் 2018 அன்று WH ஆலன் & கோவால் வெளியிடப்பட்டது.[13][14]

சுருக்கம்[தொகு]

ஒரு குழந்தையாக, யூசுப்சை திக்குவாய் உடைய நபராக இருந்தார், கறுப்பு நிறமுடையவர் மற்றும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவர் பள்ளியில் கொடுமைப்படுத்தப்பட்டார். ஆண் கல்வியின் முக்கியத்துவத்தை நம்பிய அவரது இமாம் தந்தை, அவர் மருத்துவராக வர வேண்டும் என நினைத்தார். யூசுப்சை தனது குழந்தைப் பருவத்தில் பெண்களின் ஒடுக்குமுறை கு அனுபவங்களைக் கண்டு வரர்ந்தார். குறிப்பாக இரண்டு சம்பவங்கள் , அவருடைய உறவினர் ஒரு கணவனை விட்டுப் பிரிந்த பிறகு சுடப்பட்டார்; மேலும் அவரது கிராமத்தில் ஒரு பெண் தனது குடும்பத்தை ஏற்காத பையனை காதலித்ததற்காக ஆணவக் கொலை செய்யப்பட்டார் இந்த புத்தகம் 20 வயதில் யூசுப்சை எழுதிய ஒரு கவிதையை மேற்கோள் காட்டுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. Rowell, Rebecca (1 September 2014). Malala Yousafzai: Education Activist. ABDO. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61783-897-2. https://archive.org/details/malalayousafzaie0000rowe. பார்த்த நாள்: 18 August 2017. 
  2. Adam B. Ellick.Class Dismissed[documentary].Retrieved on 11 October 2012.
  3. "Pakistani Heroine: How Malala Yousafzai Emerged from Anonymity". Time. 23 October 2012. http://world.time.com/2012/10/23/pakistani-heroine-how-malala-yousafzai-emerged-from-anonymity/. பார்த்த நாள்: 12 October 2013. 
  4. "Young Pakistani Journalist Inspires Fellow Students". Institute of War & Peace Reporting. 15 January 2010 இம் மூலத்தில் இருந்து 30 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160530220816/https://iwpr.net/global-voices/young-pakistani-journalist-inspires-fellow-students. பார்த்த நாள்: 28 April 2016. 
  5. Peer, Basharat (10 October 2012). "The Girl Who Wanted To Go To School". The New Yorker. http://www.newyorker.com/online/blogs/newsdesk/2012/10/the-girl-who-wanted-to-go-to-school.html. பார்த்த நாள்: 15 October 2012. 
  6. "'Radio Mullah' sent hit squad after Malala Yousafzai". The Express Tribune. 12 October 2012. http://tribune.com.pk/story/450639/radio-mullah-sent-hit-squad-after-malala-yousafzai. பார்த்த நாள்: 15 October 2012. 
  7. "Malala Yousafzai becomes youngest-ever Nobel Prize winner". The Express Tribune. 10 October 2014. http://tribune.com.pk/story/773258/malala-yousafzai-shares-nobel-peace-prize-with-indian-activist/. பார்த்த நாள்: 10 October 2014. 
  8. "Formats and Editions of I Am Malalaவார்ப்புரு:-" பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம் WorldCat. Retrieved 11 April 2014.
  9. Clark, Alex (11 November 2018). "Malala's father, Ziauddin Yousafzai: 'I became a person who hates all injustice'". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  10. Freyne, Patrick (17 November 2018). "Malala Yousafzai's father, Ziauddun: 'Let all girls fly'". The Irish Times. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  11. Salmon, Lisa (15 July 2019). "'I didn't clip Malala's wings... I let my daughter be herself'". Belfast Telegraph. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  12. Fitzsimmons, Caitlin (23 December 2018). "Malala's message needs to be heard by men and boys". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  13. Turner, Janice (16 November 2018). "'In the beginning, I enjoyed it'". பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  14. Turner, Janice (27 October 2018). "Zia Yousafzai interview: how Malala's father became a feminist in Pakistan". தி டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெட்_ஹெர்_பிளை&oldid=3744943" இலிருந்து மீள்விக்கப்பட்டது