லெட்சிவீ மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
லெட்சிவீ
Lechwe
நமீபியாவின் நிக்காசா ருப்பரா தேசியப் பூங்காவில்
ஒரு ஆண் லெட்சிவீ
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
K. leche
இருசொற் பெயரீடு
Kobus leche
கிரே, 1850
Subspecies
லெட்சிவீகள் காணப்படும் இடம்
வேறு பெயர்கள்

Onotragus leche

லெட்சிவி, சிவப்பு லெட்சிவி அல்லது தெற்கு லெட்சிவி (lechwe, red lechwe, or southern lechwe ) என்பது தென்-மத்திய ஆப்பிரிக்காவின் ஈரநிலங்களில் காணப்படும் ஒரு மறிமான் ஆகும்.

சரகம்[தொகு]

இவை போட்ஸ்வானா, சாம்பியா, காங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கு நமீபியா, கிழக்கு அங்கோலா, குறிப்பாக ஓக்காவேங்கோ கடைமடை, காஃப்யூ பிளாட்ஸ் மற்றும் பாங்வேலு ஈரநிலங்களைத் தாயகமாக கொண்டவை. உயிரியல் பூங்காக்கள் மற்றும் வன விலங்கு பண்ணைகளில் இந்த இனம் வளர்க்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

வயது வந்த லெட்சிவிகள் பொதுவாக நிற்கும்போது தரையிலிருந்து தோள்வரை சுமார் 90 முதல் 100 செமீ (35 முதல் 39 அங்குலம்) உயரமாக இருக்கும். இவற்றின் எடை பொதுவாக 50 முதல் 120 கிலோ (110 முதல் 260 பவுண்டுகள்) வரை இருக்கும் இருக்கும். கிடாக்களின் எடை பெட்டைகளின் எடையை விட கூடுதலாக இருக்கும். இவற்றின் உடல் பொன் பழுப்பு நிறத்திலும், வயிறு வெள்ளை நிறத்திலும் இருக்கும். கிடாக்கள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். கிடாக்களுக்கு முன் கால்கள், மார்பு மற்றும் உடலில் உள்ள கருப்பு நிறம் கலந்தவையாக இருக்கம். இந்த சாயல் மற்றும் அளவு ஆகியவை துணையினங்களைப் பொறுத்து மாறுபடும். கிடாக்களுக்கு திருகுகள் கொண்ட நீண்ட கொம்புகள் உள்ளன. சதுப்பு நிலத்தில் நீண்ட தொலைவு எளிதாக ஓட ஏதுவாக இவற்றிற்கு பிற மறிமான்களை விட பின்னங்கால்கள் ஓரளவு நீளமாக இருக்கும்.

வாழ்விடங்கள்[தொகு]

லெட்சிவீகள் பொதுவாக சதுப்பு நிலங்களில் காணப்படுகின்றன. தாவர உண்ணியான இவற்றின் முக்கிய உணவு நீர் வாழ்த் தாவரங்கள் ஆகும். [3] இவை வேட்டையாடிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழங்கால் அளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் கால்களின் வெளிப்புறம் நீர்-எதிர்ப்பி பொருளைக் கொண்டதாக இருக்கும். இவற்றின் உடல் அமைப்பு முழங்கால் அளவு நீரில் மிக வேகமாக ஓட ஏற்றதாக உள்ளது. லெட்சிவி ஒரு பகலாடி ஆகும். இவை பல ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலான மந்தையாக கூடுகின்றன. [4] மந்தைகள் பொதுவாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். ஆனால் இனச்சேர்க்கை காலத்தில் பிற பாலினங்கள் மந்தையில் வந்து சேர்கின்றன. [5]

வகைபிரித்தல்[தொகு]

கிளை இனங்கள்[தொகு]

காஃப்யூ லெச்வெஸ் ( கே. எல். காஃபுயென்சிஸ் ) சிவப்பு மற்றும் உபேம்பா லெட்ச்வீசை விட கிடாக்களுக்கு முன் கால்கள் மற்றும் மார்பு வரை அதிக அடர் நிறத்தில் இருக்கும், ஆனால் கருப்பு லெச்வேயை விடவும் குறைவாக இருக்கும்.

லெட்சிவீயின் நான்கு கிளையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. [6]

  • பொதுவான சிவப்பு லெட்சிவீ ( கோபஸ் லெச் லெச் ) (கிரே, 1850) - சிம்பாப்வே, போட்ஸ்வானா, நமீபியா, சாம்பியாவின் ஈரநிலங்களில் பரவலாக பரவியுள்ளன.
  • காஃப்யூ பிளாட்ஸ் லெட்சிவீ ( கோபஸ் லெச் கஃபுயென்சிஸ் ) ( ஹால்டெனோர்த், 1963) - இது காஃப்யூ சமவெளிக்குள் (சாம்பியாவின் காஃப்யூ நதியில் பருவகால வெள்ளப்பெருக்கு சமவெளி) காணப்படுகின்றன.
  • ராபர்ட்சின் லெட்சிவீ ( கோபஸ் லெச் ராபர்ட்ஸி ) ( ரோத்ஸ்சைல்ட், 1907) - முன்பு வடகிழக்கு சாம்பியாவில் காணப்பட்டது, இப்போது அழிந்து விட்டது. கவாம்ப்வா லெட்சிவீ என்றும் அழைக்கப்படுகிறது.
  • கருப்பு லெட்சிவீ ( கோபஸ் லெச்சே ஸ்மிதேமானி ) ( லிடேக்கர், 1900) - ஜாம்பியாவின் பாங்வேலு பகுதியில் காணப்படுகிறது.

இவை அல்லாமல் கூடுதலாக, உபேம்பா லெட்சிவீ ( கோபஸ் அன்செல்லி ) மற்றும் அழிந்துபோன கேப் லெட்சிவீ ( கோபஸ் வென்டேரே ) ஆகியவை சில ஆய்வாளர்களால் ( கோபஸ் லெச் அன்செல்லி மற்றும் கோபஸ் லெச் வென்டேரே ) இதன் கிளையினங்களாகக் கருதப்படுகின்றன. [7]

"லெட்சிவீ" என்ற பெயருடன் தொடர்புடையதாக இருந்தாலும், நைல் லெட்சிவீ ( கே. மெகாசெரோஸ் ) ஒரு தனி இனமாக தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது. [6]

இனப்பெருக்கம்[தொகு]

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மழைக்காலங்களில் லெட்சிவீ இணைப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே பெரும்பாலான குட்டிகள் சூலை முதல் செப்டம்பர் வரை பிறக்கின்றன. [8] சிலசமயம் அரிதாக லெட்சிவீ மற்றும் வாட்டர்பக் இடையே கலப்பினங்கள் காணப்படுகின்றன. [9]

குறிப்புகள்[தொகு]

  1. IUCN SSC Antelope Specialist Group (2017). "Kobus leche". IUCN Red List of Threatened Species 2017: e.T11033A50189021. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T11033A50189021.en. https://www.iucnredlist.org/species/11033/50189021. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Franceschini, M. Celeste; Murphy, Kevin J.; Moore, Isabel; Kennedy, Michael P.; Martínez, Fedra S.; Willems, Frank; De Wysiecki, M. Laura; Sichingabula, Henry (29 July 2020). "Impacts on freshwater macrophytes produced by small invertebrate herbivores: Afrotropical and Neotropical wetlands compared". Hydrobiologia 847 (17): 3931–3950. doi:10.1007/s10750-020-04360-5. https://pureportal.coventry.ac.uk/en/publications/impacts-on-freshwater-macrophytes-produced-by-small-invertebrate-herbivores(c0ebf2d3-8eca-47e6-b95b-428f045e46a3).html. 
  4. Windhoek, UrbanCamp net | Camping | Leisure |. "Lechwe". urbancamp.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-30.
  5. Nefdt, Rory J. C.; Thirgood, Simon J. (1997). "Lekking, resource defense, and harassment in two subspecies of lechwe antelope". Behavioral Ecology 8: 1–9. doi:10.1093/beheco/8.1.1. 
  6. 6.0 6.1 Groves, C.; Grubb, P. (2011). Ungulate Taxonomy. Baltimore: Johns Hopkins University Press. பக். 190–1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4214-0093-8. Groves, C.; Grubb, P. (2011).
  7. Brain, C. K. (1983). The Hunters Or the Hunted?: An Introduction to African Cave Taphonomy. American Bar Foundation. 
  8. Newell, T. 1999.
  9. "Antelope hybrid in the wilds of northern Botswana". Africa Geographic. 19 May 2016. Archived from the original on 7 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெட்சிவீ_மான்&oldid=3787811" இலிருந்து மீள்விக்கப்பட்டது