உள்ளடக்கத்துக்குச் செல்

லெக்கி பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லெக்கி பூங்கொத்தி
இலங்கையில், ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. வின்சென்சு
இருசொற் பெயரீடு
Dicaeum வின்சென்சு
(இசுகிளாடெர், 1872)

லெக்கி பூங்கொத்தி (Legge's flowerpecker)(டைகேயம் வின்சென்சு) அல்லது வெள்ளை தொண்டை பூங்கொத்தி என்பது சிறிய குருவி ஆகும். இது இலங்கையில் மட்டும் வாழக்கூடிய அகணிய உயிரியாகும். ஆத்திரேலியா பறவையியல் வல்லுநரான வில்லியம் வின்சென்ட் லெக்கியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

லெக்கி பூங்கொத்தி காடுகள் மற்றும் தோட்டங்கள் உட்பட மரங்கள் நன்கு நிறைந்த வாழிடங்களில் இனப்பெருக்கம் செய்யும் பொதுவான பறவையாகும். மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் பணப்பை போன்ற தன்னுடைய கூட்டில் இரண்டு முட்டைகள் வரை இடும்.

விளக்கம்

[தொகு]
டை.. வின்சென்சு ஆண் மற்றும் பெண் கீழே உள்ள டை. மெலனோசாந்தம் ஒப்பிடும்போது.

இது மிகச் சிறிய குருவி வகை ஆகும். ஆனால் ஒப்பீட்டளவில் 10 cm (3.9 அங்) அளவு நீளமுடையது. இதன் எடை எடை தோராயமாக 9 g (0.32 oz).[3] குட்டையான வால், குறுகிய தடித்த வளைந்த அலகு மற்றும் குழல் போன்ற நாக்கினை உடையது. குழல் போன்ற நாக்கமைப்பானது இதன் உணவில் அமிர்தத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. இருப்பினும் பெர்ரி, சிலந்தி மற்றும் பூச்சிகளைக் கூட உணவாக உண்ணுகின்றன.

ஆண் பூங்கொத்தி நீல-கருப்பு மேல் பகுதியுடன், வெள்ளை தொண்டை மற்றும் மேல் மார்பகம் மற்றும் மஞ்சள் கீழ் மார்பகம் மற்றும் தொப்பையுடன் காணப்படும். பெண் பறவை மந்தமான, ஆலிவ்-பழுப்பு மேல் பகுதிகளுடன் காணப்படும்.

கலாச்சாரத்தில்

[தொகு]

இலங்கையில் இந்தப் பறவையினை சிங்கள மொழியில் லங்கா பிலச்சா (ලංකා පිලච්ච) என்று அழைக்கின்றனர். இலங்கையின் ஒரு ரூபாய் தபால் தலையில் இதன் உருவம் அச்சிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Dicaeum vincens". IUCN Red List of Threatened Species 2016: e.T22717490A94535215. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717490A94535215.en. https://www.iucnredlist.org/species/22717490/94535215. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Beolens, Bo & Michael Watkins (2003) Whose Bird?: Men and women commemorated in the common names of birds, Christopher Helm, London.
  3. Mammides, C., Chen, J., Goodale, U. M., Kotagama, S. W., Sidhu, S., & Goodale, E. (2015).
  4. http://www.birdtheme.org/country/srilanka.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெக்கி_பூங்கொத்தி&oldid=3476970" இலிருந்து மீள்விக்கப்பட்டது