உள்ளடக்கத்துக்குச் செல்

லெகியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெகியான்
Legian
கடற்கரை நகரம்
லெகியான் கடற்கரை சின்னம் (2023)
லெகியான் கடற்கரை சின்னம் (2023)
அலுவல் சின்னம் லெகியான்
சின்னம்
லெகியான் is located in இந்தோனேசியா
லெகியான்
லெகியான்
ஆள்கூறுகள்: 8°42′02″S 115°09′54″E / 8.70056°S 115.16500°E / -8.70056; 115.16500
நாடு இந்தோனேசியா
மாநிலம் பாலி
பிராந்தியம்பாடுங் பிராந்தியம்
மாவட்டம்கூத்தா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்305 km2 (118 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்4,216 (2,016)
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8
அஞ்சல் குறியீடு
80361

லெகியான் (ஆங்கிலம்: Legian; இந்தோனேசியம்: Legian, Kuta, Badung) என்பது இந்தோனேசியா, பாலி, பாடுங் பிராந்தியம், கூத்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை புறநகர்ப் பகுதி ஆகும்.[1] பாலியின் மேற்கு கடற்கரையில் கூத்தா நகரத்திற்கு வடக்கேயும்; செமினியாக் நகரத்திற்கு தெற்கேயும் உள்ளது.[2][3]

கூத்தா மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள 5 கிராமங்கள்/துணை மாவட்டங்களில் லெகியான் ஒன்றாகும்.

வரலாறு

[தொகு]

லெகியான் பகுதி முன்பு காராங் கெமானிசான் என்ற கிராமத்திலிருந்து தொடங்கியது. காராங் என்றால் கிராமம் என்று பொருள். கெமானிசான் என்றால் இனிப்பு என்று பொருள். மானிஸ் என்ற சொல்லிருந்து வந்தது. "லெகி" என்ற சொல்லும் அதே இனிப்பு என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்தப் பகுதி லெகியான் என்று அறியப்பட்டது. லெகியான் என்பது நகரம் மட்டும் அல்ல. இது ஒரு துணை மாவட்டமும் ஆகும்.

இந்தத் துணை மாவட்டம் 2002 பாலி குண்டுவெடிப்பு நிகழ்வாலும் பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. மொத்தம் 202 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 164 பேர் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியர்கள்.[4].

லெகியான் கடற்கரை

காட்சியகம்

[தொகு]
  • லெகியான் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Legian - Indonesia Travel". www.indonesia.travel (in ஆங்கிலம்). Retrieved 2020-04-30.
  2. "Legian Travel Guide". Almost Landing - Bali (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-04-30.
  3. "Legian Beach Tourism". www.indonesia-tourism.com. Retrieved 2020-04-30.
  4. Indonesia seeks access US held Hambali

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெகியான்&oldid=4220178" இலிருந்து மீள்விக்கப்பட்டது