உள்ளடக்கத்துக்குச் செல்

இலூயி பாசுச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லூயிஸ் பாஸ்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலூயி பாசுச்சர்
Louis Pasteur
பிறப்பு(1822-12-27)திசம்பர் 27, 1822
டோல், பிரான்சு
இறப்புசெப்டம்பர் 28, 1895(1895-09-28) (அகவை 72)
மார்னெசு-லா-கோக்கெட், பிரான்சு
தேசியம்பிரான்சியர்
துறை
பணியிடங்கள்
 • ஸ்துராசுபூர்க் பல்கலைக்கழகம்
 • இலில்லி அறிவியல், தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
 • பாசுச்சர் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஏக்கோல் நோர்மால் சுப்பேரியர்
விருதுகள்
 • ரம்ஃபோர்ட் விருது (1856, 1892)
 • ForMemRS (1869)[1]
 • கோப்லி விருது (1874)
 • ஆல்பர்ட் விருது (1882)
 • லீயுவென்கோக் விருது (1895)
கையொப்பம்

இலூயி பாசுச்சர் (Louis Pasteur, திசம்பர் 27, 1822 – செப்டம்பர் 28, 1895) நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் வேதியியலாளர். வேதி நிகழ்வுகளில் ஒன்றான நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளைப் பற்றி இவர் அறிந்துகொண்டார். நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியது. இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றன என்று கண்டறிந்தார்.[2][3][4] தடுப்பு மருந்து, நுண்ணுயிர் நொதித்தல் மற்றும் பாசுச்சர் முறை ஆகிய கொள்கைகளைப் பல கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படுத்திப் புகழ் பெற்றவர். நோய்க்கான காரணங்கள் மற்றும் அவற்றின் தடுப்புமுறைகள் குறித்த அவரது ஆராய்ச்சி ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருந்தது. அவரது கண்டுபிடிப்பு அன்றிலிருந்து பல உயிர்களைக் காத்து வருகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய தொற்றுகளினால் ஏற்படும் இறப்பு வீதத்தைக் குறைத்ததுடன், வெறிநாய்க்கடி நோய் மற்றும் ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்தார். அவரது மருத்துவக் கண்டுபிடிப்புகள் நோய்க் கிருமிக் கோட்பாட்டை (germ theory) நேரடியாக ஆதரிப்பதுடன், இந்தக் கோட்பாட்டின் மருத்துவத் துறைப் பயன்பாட்டுக்கும் உதவின. பால் மற்றும் வைன் ஆகியவற்றில் பாக்டீரியா கலப்படத்தைத் தவிர்ப்பதற்கான இவரது கண்டுபிடிப்பு பாசுச்சர் முறை (pasteurization) என்று தற்போது அழைக்கப்படுகிறது. இவர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இலூயிசு பாசுச்சர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு ஏழை தோல்பதனிடும் தொழில் செய்யும் ஒருவருக்கு, பிரான்சில், டோல், ஜூரா என்னுமிடத்தில் டிசம்பர் 27, 1822 இல் பிறந்தார்[2]. ஜீன்-சோசப் பாசுச்சரும் மற்றும் ஜீன்-எடியன்னிடி ரெளகியினதும் மூன்றாவது குழந்தையாக இருந்தார். இவரது குடும்பம் 1826 ஆம் ஆண்டில் மார்ன்சு க்கும் 1827 ஆம் ஆண்டில் அர்பாய்சு க்கும் இடம்பெயர்ந்தது[5][6]. பாசுச்சர் 1831 இல் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தார்[7].

ஆரம்ப பள்ளி காலங்களில் பாசுச்சரின் ஆர்வம் மீன் பிடித்தல், வரைதல் போன்றவற்றில் இருந்ததுடன், அவர் ஒரு சராசரி மாணவராக இருந்தார்[2]. அவர் பல வண்ணங்களில் தனது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் உருவப்படங்களை வரைந்திருந்தார்[8]. டி அர்பாய்சு கல்லூரியில் தனது மேனிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்[9]. 1838 ஆம் ஆண்டு அக்டோபரில், பென்சியன் போர்பட்டுவில் இணைவதற்காக பாரிசை விட்டு சென்றார். ஆனால் வீட்டை பிரிந்த துயரத்தினால் மீண்டும் நவம்பரில் திரும்பினார்[10].

1839 ஆம் ஆண்டில், அவர் மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்குச் சென்றார். அத்துடன் தனது இளநிலை பட்டத்தினையும் (Bachelor of Letters degree) 1840 ல் பெற்றார்[11]. சிறப்புப் பாடமாகக் கணிதவியலைக் கொண்ட அறிவியல் பட்டத்திற்கான கல்வியைத் தொடர்ந்த வேளையில் அவர் பெசன்கான் கல்லூரியில் ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றினார்[12]. 1841 இல் தனது முதல் தேர்வில் தோல்வியடைந்த அவர், பின்னர் 1842 ல் டிசோனில் baccalauréat scientifique (பொது அறிவியல்) பட்டத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் வேதியியலில் சாதாரண தகுதியையே பெற்றார்[13].

பின்னர் 1842 இல், பாசுச்சர் Ecole Normale Supérieure நுழைவுத் தேர்வு எடுத்தார்[14]. அவர் முதலாவது சோதனைகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவரது தரவரிசை குறைவாக இருந்ததனால், பாசுச்சர் தொடர்ந்து அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்வதில்லை என முடிவெடுத்தார்[15]. அவர் சோதனைக்காகத் தயார் செய்வதற்காக மீண்டும் பென்சியன் பார்பெட் சென்றார். அவர் லைசி செயிண்ட்-லூயிஸ் இல் வகுப்புகளுக்கு சென்றதுடன், சோபோர்னில் உள்ள ஜீன்-பாப்டிஸ்ட் டுமாஸ் இல் விரிவுரைகளுக்கும் சென்றார்[15]. 1843 ஆம் ஆண்டு அவர் உயர் தரவரிசையில் தேர்ச்சியடைந்து Ecole Normale Supérieure இடம்பெற்றனர்[16]. 1845 ஆம் ஆண்டில் அவர் licencié ES அறிவியல் பட்டம் (அறிவியலில் முதுகலைப் பட்டம்) பெற்றார்[17]. 1846 இல் அவர் Ardèche யிலுள்ள, கல்லூரி டி டோர்னனில் (தற்போது அக்கல்லூரி Lycée Gabriel-Faure (fr) என்றழைக்கப்படுகிறது) இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் வேதியியலாளர் அண்டோனே செரோம் பாலார்த்து, பாசுச்சர் மீண்டும் Ecole Normale Supérieure க்கு ஒரு பட்டதாரி ஆய்வக உதவியாளராக வரவேண்டும் என்று விரும்பினார்[18]. அவர் Balard உடன் இணைந்துகொண்ட அதே வேளையில், படிகவியல் தொடர்பான தனது ஆய்வுகளையும் தொடங்கி, பின்னர் 1847 இல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இரு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்[17][19]

திழோன் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக சேவை முடிந்த பின், 1848 ல், திராசுபர்கு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகக் கடமையாற்றினார்[20]. அங்கு பல்கலைக்கழகத்தின் இயக்குநரின் மகளான மேரி லாரண்ட் ஐச் சந்தித்து திருமண ஒப்பன்ந்தம் செய்து கொண்டார். அவர்களிருவரும் 1849 மே 29 அன்று திருமணம் செய்துகொண்டனர்[21]. அவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மூவர் குடற்காய்ச்சலினால் இறந்துவிட, இருவர் மட்டுமே வளர்ந்து பெரியவர்களானார்கள்[22].

வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி[தொகு]

இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.[23]

பாசுச்சர்முறை நுண்ணுயிர் நீக்கம்[தொகு]

பாலும், வைனும் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினால் கெட்டுப்போகின்றன. அப்படிக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக இலூயி பாசுச்சர் முன்வைத்த முறை இன்று பாச்சர்முறை என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளின் பெரும்பகுதியைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.[24]

பாலில் அதிக அளவு உள்ள நோய் உண்டாக்கும் பாக்டிரியாக்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதனால், பாலில் உள்ள சத்துக்கள் குறையாமல் காக்கப்படுகின்றன. கிருமியழித்தலில் போன்று, இங்கு அனைத்து நோய்க்காரணிகளும் அழிக்கப்படுவதில்லை. பதிலாக, அவற்றின் எண்ணிக்கை ஒரு கட்டுப்பாடான அளவிற்குக் கொண்டு வரப்படுவதனால், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு பாலைக் கெடாமல் பாதுகாக்கலாம். இம்முறையில் பாலானது 60 and 100 °C வெப்பநிலை வரைக் காய்ச்சி அதே வெப்பநிலையில் அரை மணி நேரம் வைத்த பின்பு வேகமாக குளிரச்செய்யப்படுகிறது[25].

நுண்ணுயிரியல்[தொகு]

நுண்ணுயிரியலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் பெர்டினாண்ட் கோன், ராபர்ட் கோக் ஆவர். தன்னிச்சை உருவாக்கக் கோட்பாடு (spontaneous generation) மறுக்கப்பட்டதற்கு இவர் காரணமாக இருந்தார். கலப்படமில்லாமல் நுண்ணுயிரிகள் உருவாக முடியாது என்பதை இவரது சோதனைகள் உணர்த்தின. "பிரெஞ்சு அறிவியல் அகாடெமி"யின் துணைகொண்டு இவர், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட (sterilized) மற்றும் உறையிடப்பட்ட (sealed) குடுவைகளில் எதுவும் உருவாக இல்லை எனவும், நுண்ணுயிரி ஒழிக்கப்பட்ட ஆனால் திறந்த குடுவைகளில் நுண்ணுயிரி வளர முடியும் என நிரூபித்தார். கிருமிக் கோட்பாட்டை (germ theory) இவர் முன்மொழியா விட்டாலும், அவரது சோதனைகள் அதன் உண்மைத்தன்மையைக் குறிப்பிட்டு, பெரும்பாலான ஐரோப்பாவுக்கு அது உண்மை என உணர்த்தின. இன்று அவரும் "கிருமிக் கோட்பாட்டின்" தந்தை என வழங்கப்படுகிறார்.

வேதியியல்[தொகு]

பாசுச்சர் வேதியியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் மூலக்கூறு அடிப்படையில் சில படிகங்களின் (crystal) ஒத்தமைவின்மையைக் (assymmetry) குறித்த இவரது ஆய்வு குறிப்பிடத்தக்கது. இவரது ஆரம்பகால வாழ்க்கையில் டார்டாரிக் அமிலத்தில் இவரது ஆய்வு முதன்முதலில் ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்ற தீர்மானத்துக்கு வழிவகுத்தது. கரிமச் சேர்மங்களின் (organic compounds) அமைப்பைப் புரிந்து கொள்வதில், தற்போதுள்ள அடிப்படைக் கொள்கைக்கு இவரது ஆய்வு வழிவகுத்தது.

முரண்பாடுகள்[தொகு]

நொதித்தல்[தொகு]

பாசுச்சருக்கு முன்னரே வேறு விஞ்ஞானிகள் நொதித்தல் பற்றி ஆய்ந்து அறிந்திருந்தனர். 1830 ஆம் ஆண்டில், சார்லசு காக்னியர்டு-லாட்டூர் (Charles Cagniard de la Tour), பிரெடெரிக் டிராகாட் குட்சிங் (Friedrich Traugott Kützing), தியோடர் சுவான் (Theodor Schwann) ஆகியோர் நுண்ணோக்கி மூலம் மதுவத்தை (yeast) ஆராய்ந்து, அவை வாழும் உயிரினங்கள் என்று கூறியுள்ளனர். 1839 இல், ஜசுடசு வான் லீபிக் (Justus von Liebig), பிரெடெரிக் வோக்லர் (Friedrich Wöhler) மற்றும் சோன்ஸ் சேக்கப் பெர்சிலியசு (Jöns Jacob Berzelius) ஆகியோர் மதுவம் ஒரு உயிரினம் இல்லை என்றும் அவை தாவர சாறுகள் காற்றுடன் செயல்படும் போது உருவாகின்றன என்றும் அறிக்கைவிட்டனர்.[26]

1855 இல் மோண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஆண்டனி பிசாம்ப் (Antoine Béchamp), சுக்ரோசு கரைசலில் பரிசோதனைகளை மேற்கொண்டு நீர், நொதித்தலுக்குப் காரணியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்[27]. ஆனால் பின்னர் 1858 இல், அவர் தனது முடிவை மாற்றி, நொதித்தலுக்குக் காரணம் Mould என்னும் ஒரு வகை பூஞ்சையே என்றும், அவற்றின் வளர்ச்சிக்கு காற்று தேவைப்படுகிறது என்றும் கூறினார். நொதித்தலில் நுண்ணுயிர்களின் பங்கினை முதலாவதாக எடுத்து காண்பித்தவர் தானே என்று இவர் கூறினார்[28][29].

பாசுச்சர் 1857 இல் தன்னுடைய பரிசோதனைகளைத் தொடங்கி, 1858 Comptes Rendus Chimie இதழில், ஏப்ரல் பதிப்பில் வெளியிட்டார். ஆனால் பிசாம்ப் இனுடைய ஆய்வறிக்கை ஜனவரியிலேயே வெளியிடப்பட்டுவிட்டது. இருந்தாலும், பாசுச்சரின் 1857 ஆம் ஆண்டு ஆரம்ப ஆய்வுகளைப்பற்றி பிசாம்ப் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரினதும் முரண்பாடுகள் அவர்களது வாழ்வுக்காலம் முழுமைக்கும் நீண்டது.[29][30]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Fellows of the Royal Society". London: Royal Society. Archived from the original on 2015-03-16.
 2. 2.0 2.1 2.2  James J. Walsh (1913). "Louis Pasteur". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
 3. Feinstein, S (2008). Louis Pasteur: The Father of Microbiology. Enslow Publishers, Inc. pp. 1–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59845-078-1.
 4. Hook, Sue Vander (2011). Louis Pasteur: Groundbreaking Chemist & Biologist. Minnesota, US: ABDO Publishing Company. pp. 8–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61758-941-6.
 5. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. pp. 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 6. Robbins, Louise (2001). Louis Pasteur and the Hidden World of Microbes. New York: Oxford University Press. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195122275.
 7. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 8. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. pp. 12–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 9. Robbins, Louise (2001). Louis Pasteur and the Hidden World of Microbes. New York: Oxford University Press. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195122275.
 10. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 11. Keim, Albert; Lumet, Louis (1914). Louis Pasteur. Frederick A. Stokes Company. pp. 10, 12.
 12. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. pp. 14, 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 13. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. pp. 19–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 14. Robbins, Louise (2001). Louis Pasteur and the Hidden World of Microbes. New York: Oxford University Press. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195122275.
 15. 15.0 15.1 Keim, Albert; Lumet, Louis (1914). Louis Pasteur. Frederick A. Stokes Company. pp. 15–17.
 16. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. pp. 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 17. 17.0 17.1 Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. p. 502. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 18. Debré, Patrice (2000). Louis Pasteur. Translated by Forster, Elborg. Baltimore: JHU Press. pp. 29–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780801865299.
 19. Keim, Albert; Lumet, Louis (1914). Louis Pasteur. Frederick A. Stokes Company. pp. 28–29.
 20. Keim, Albert; Lumet, Louis (1914). Louis Pasteur. Frederick A. Stokes Company. pp. 37–38.
 21. Holmes, Samuel J. (1924). Louis Pasteur. Harcourt, Brace and company. pp. 34–36.
 22. Robbins, Louise E. (2001). Louis Pasteur and the Hidden World of Microbes. Oxford University Press. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-190-28404-6.
 23. Wood, Margaret E.. "Biting Back". Chemical Heritage Magazine (Chemical Heritage Foundation) 28 (2): 7. http://www.chemheritage.org/discover/media/magazine/articles/28-2-biting-back.aspx. பார்த்த நாள்: 16 September 2014. 
 24. Nelson, Bryn (2009). "The Lingering Heat over Pasteurized Milk". Chemical Heritage Magazine 27 (1). http://www.chemheritage.org/discover/media/magazine/articles/27-1-the-lingering-heat-over-pasteurized-milk.aspx?page=2. பார்த்த நாள்: 27 January 2015. 
 25. Bowden, Mary Ellen; Crow, Amy Beth; Sullivan, Tracy (2003). Pharmaceutical achievers : the human face of pharmaceutical research. Philadelphia, PA: Chemical Heritage Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780941901307.
 26. Barnett, James A.; Barnett, Linda (2011). Yeast Research : A Historical Overview. Washington, DC: ASM Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5558151-6-5.
 27. Béchamp, A (1855). "Note sur l'influence que l'eau pure et certaines dissolutions salines exercent sur le sucre de canne". Comptes Rendus Chimie 40: 436–438. 
 28. Béchamp, A (1858). "De l'influence que l'eau pur ou chargée de diverse sels exerce à froid sur the sucre de canne". Comptes Rendus Chimie 46: 4–47. 
 29. 29.0 29.1 Manchester, K.L. (2007). "Louis Pasteur, fermentation, and a rival". South African Journal of Science 103 (9–10): 377–380. http://www.scielo.org.za/scielo.php?pid=S0038-23532007000500008&script=sci_arttext. 
 30. Cadeddu, A (2000). "The heuristic function of 'error' in the scientific methodology of Louis Pasteur: the case of the silkworm diseases". History and Philosophy of the Life Sciences 22 (1): 3–28. பப்மெட்:11258099. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலூயி_பாசுச்சர்&oldid=3043485" இலிருந்து மீள்விக்கப்பட்டது